Advertisement

சிலி முன்னாள் ஜனாதிபதிக்கு ஐ.நா., சபையில் பதவி

நியூயார்க்:ஐ.நா., சபையின் மனித உரிமை ஆணைய செயலராக, சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி, மிச்செல் பச்லெட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உட்பட, ௧௯௩ நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஐ.நா., சபையின் மனித உரிமை ஆணைய செயலராக இருக்கும், ஜோர்டான் நாட்டு இளவரசர், அல் ஹூசைன், இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார்; மீண்டும் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்து விட்டார்.
இதையடுத்து, தென் அமெரிக்க நாடான, சிலியின் முன்னாள் ஜனாதிபதி மிச்செல் பச்லெட்டை, மனித உரிமை ஆணைய செயலராக நியமிக்க, ஐ.நா., சபை பொதுச்செயலர் அன்டோனியா கட்டர்ஸ் முடிவு செய்துள்ளார். இந்த நியமனத்துக்கு, உறுப்பு நாடுகளின் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், மிச்செல் பச்லெட், நியமன அறிவிப்பு வெளியிடப்படும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement