Advertisement

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்

ஜகர்தா:இந்தோனேஷியாவின் லம்பாக் தீவில், சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து, நேற்றும் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது.

தென் கிழக்காசிய நாடான, இந்தோனேஷியாவில் உள்ள லம்பாக் தீவு அருகில், சமீபத்தில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில், 319 பேர் பலியாயினர்; 1,400 பேர் படுகாயமடைந்தனர்.
மீட்பு பணிகள் இன்னும் முடியாத நிலையில், நிலநடுக்கத்திற்கு பிந்தைய அதிர்வுகள் கடுமையாக உள்ளது.இதுவரை, 355 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
நேற்று இந்தோனேஷியாவின் வடமேற்கு தீவில் ஏற்பட்ட நில அதிர்வு, ரிக்டர் அளவுகோலில், 5.9 ஆக பதிவானது. இதில், பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement