Advertisement

காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு

கெய்ரோ : காற்றில் இயங்கும் கார் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து, எகிப்து மாணவர்கள் அசத்தியுள்ளனர்.

பெட்ரோல், டீசல், மின்சாரம் ஆகியவற்றில் இயங்கும் கார்களை பார்த்திருக்கிறோம். புதிய கண்டுபிடிப்பாக, காற்று மூலம்இயங்கும் காரை, வடிவமைத்து உலகின் பார்வையை தங்கள் பக்கம் திருப்பியுள்ளனர் எகிப்துமாணவர்கள்.

எகிப்தில் உள்ள ஹெல்வன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் சிலர், தங்களது புராஜக்ட்டில் ஒரு பகுதியாக இதனைவடிவமைத்துள்ளனர். இக்காரில் ஒரு நபர் பயணம் செய்யலாம். ஆக்சிஜன் மூலம் இயங்கும். மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் செல்லும். ஒருமுறை ஆக்சிஜன் நிரப்பினால் 30 கி.மீ., துாரம் வரை பயணம் செய்யலாம். இதன் தயாரிப்பு செலவு வெறும் ரூ. 68,500.

பொதுவாக வாகனங்கள் வாங்க நினைக்கும் பலரும், எரிபொருள் செலவை நினைத்து விட்டு, முடிவை மாற்றிக் கொள்வர். ஆனால் இந்த காரை பொறுத்தவரை அந்த கவலையே இல்லை. ஏனெனில் காற்றில் இயங்குவதால், எரிபொருள் செலவு மிச்சம். சாதாரணமாக 'கம்ப்ரஸ்டு ஆக்சிஜன் காற்றை' எரிபொருளுக்கு பயன்படுத்தினால் போதும். மாணவர்கள் குழு, தயாரிப்பை மேலும் அதிகரிப்பதற்கு, நிதியுதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

இலக்கு '100' :



மேலும் தாங்கள் வடிவமைத்த காரை, மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில்,மேம்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    கம்ப்ரெஸ்ஸரை ஒழுங்காக பராமரிக்கவேண்டும்

  • Senthilkumar Dharmalingam - TRY,இந்தியா

    மின்சாரம் அல்லது எரிபொருள் இல்லாமல் எப்படி காற்றை அதிக அழுத்தத்தில் அடைப்பது. மின்சாரம் தேவையெனில் மின்சார வாகனத்தையே பயன்படுத்தலாமே?

  • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

    . இந்த புதிய கண்டுபிடிப்பல்ல, பல வருடங்களாக செயல்பட்டு கொண்டிருக்கும் ஒரு விசயம் தான். இதற்கு எரிபொருள் எதுவும் தேவையில்லை. இது இயங்கும் விதமானது காற்றை உயாிய அழத்தத்தில் அழுத்தி கொள்கலன்களில் அடைத்து அதை கட்டுபடுத்தி வெளியேற்றுவதன் மூலம் உந்தத்தை பெறலாம் அந்த உந்தத்தை பயன்படுத்தி எந்த பொருளையும் நகா்த்தலாம். உதாரணமாக பலூனில் அடைக்கப்பட்ட காற்றை வெளியாக்கும் போது அந்த பலூன் பறப்பதை பாா்க்கலாம் அதற்கு காரணம் உந்தம் (Thrust). பல நாடுகளில் அடைக்கப்பட்ட காற்றால் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டிலே உள்ளன. காற்றை அழுத்தி அடைக்க compressor தேவை அதற்கு மின்சாரமோ, எரிபொருளோ இல்லாமல் முடியாது.

  • Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா

    வாழ்த்துக்கள் , அந்த நபரை அந்த நாடு பாதுகாப்பு கொடுக்கணும் நடைமுறைக்கு கொண்டுவந்து அரசே செயல் படுத்தனும் சுற்று சூழல் பாதுகாக்கப்படும் என்பதினை அறிந்து இதனால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்பதினை உணர்ந்து அல்லது எந்த நாடாவது அவரை தத்து எடுக்கணும்

  • ருத்ரா -

    மாணவர்கள் சிந்தனைகள் வளர்ச்சிக்கானதாகவே உள்ளது. ஊக்கமும், உதவியும் இருந்தால் உலக அரங்கில் எந்த நாடும் நம்பர் 1 ஆக திகழும். காற்றினிலே வரும் காரை வரவேற்கலாம். மாணவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • ஆப்பு -

    ஆமா...ஆக்சிஜன் அப்பிடியே ஃப்ரீயா கிடைக்கும்...நாம சுவாசிக்கும் காத்துல 21℅ ஆக்சிஜன் இருக்குது...அப்பிடியே உருவிடலாம்.எகிப்து ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த நாடு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement