Advertisement

காலியாகியுள்ள தி.மு.க., தலைவர் பதவியில் யார்

கருணாநிதி மறைவுக்கு பின் தி.மு.க.,வில் அடுத்தது என்ன என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. அதற்கு விடை காண விரைவில் கட்சியின் உயர்மட்ட அமைப்பான பொதுக்குழு கூட்டப்படுகிறது. காலியாகியுள்ள கட்சி தலைவர் பதவி ஸ்டாலினுக்கு என்பதில் பெரிய அளவில் சர்ச்சை எழப் போவதில்லை என தெரிகிறது.


அதேநேரத்தில் அழகிரிக்கும், கனிமொழிக்கும், கட்சியில் என்ன பதவி தரப் போகிறார் ஸ்டாலின் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன், ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


கருணாநிதியின் உடலை நேற்று முன்தினம் மெரினாவில் நல்லடக்கம் செய்தபோது கூடியிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களின் கூட்டம் தி.மு.க.,வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றிய பணிகள் :கருணாநிதியின் அயராத உழைப்பு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் சமூக வலைதள பிரசாரமாகி இருக்கிறது. இதன் வாயிலாக தி.மு.க.,வின் சாதனைகள், கருணாநிதியின் மறைவால் இளைஞர்களுக்கு தெரிய வந்துள்ளது.


கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்டு தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சிலர் முதல்வர் பழனிசாமி தரப்பினரிடம் நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது. பின் ஸ்டாலின் அழகிரி, கனிமொழி ஒன்றாக சென்று முதல்வர் பழனிசாமியிடம் இடம் கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் சட்ட சிக்கல்களை காரணம் காட்டி, மெரினாவில் இடம் தர அரசு மறுத்தது. ஸ்டாலின், இப்பிரச்னையை சட்டரீதியாக அணுகி வெற்றி பெற்றார்.


கருணாநிதி மறைவுக்கு குடும்ப ரீதியாக செய்ய வேண்டிய சடங்குகள் முடிந்த பின் தி.மு.க., பொதுக்குழுவை கூட்டி, கட்சியில் மாற்றங்களை கொண்டு வருவது பற்றி முக்கிய நிர்வாகிகளுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்திமுடித்துள்ளார்.


இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: பொதுக்குழுவில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவியை கனிமொழிக்கும், தென் மண்டல அமைப்பு செயலர் பதவியை மீண்டும் அழகிரிக்கு வழங்குவது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.


ஸ்டாலினுக்கு போட்டியாளராக இருக்க கனிமொழி விரும்பவில்லை. எந்த ஒரு காரியத்தையும் ஸ்டாலின் அனுமதி பெற்று தான் செய்கிறார். அதேசமயம், கட்சி வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டுகிறார். எனவே, அவருக்கு பொருளாளர் பதவி வழங்குவதால், தனக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருப்பார் என ஸ்டாலின் கருதுகிறார். அதேபோல அழகிரி விரும்பினால் தென் மண்டல அமைப்பு செயலர் பதவியை அவருக்கு வழங்கவும் ஸ்டாலின் தயாராக இருப்பதாக தெரிகிறது.

பொதுக்குழு :'கருணாநிதியை தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன்' என அழகிரி கருதினால், அவரது மகன் துரை தயாநிதிக்கு, கட்சி பதவியும், முரசொலி அறக்கட்டளை உறுப்பினர் பதவியும் வழங்க பேச்சு நடத்தப்பட்டுள்ளது. பொதுச்செயலர் பதவிக்கு தற்போது அன்பழகனே தேர்வு செய்யப்படுகிறார். அவர் முன்மொழிய புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விரைவில், பொதுக்குழு கூடும் தேதி அறிவிக்கப்பட உள்ளது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.


- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (114)

 • SARAVANAN G - TRICHY,இந்தியா

  உன் வயித்தெரிச்சலை என்னால் உணர முடிகிறது.......நீ மெரினா எப்போதாவது வந்தால் முதலில் உன் கோமளவள்ளியை பார்த்து விட்டு, மனமிருந்தால் , அப்படியே அங்கு ஓய்வெடுக்கும் இரட்டை சூரியர்களையும் பார்த்து விட்டு, மெரினாவில் விற்கும் கரும்பு சாற்றையும் அருந்தி விட்டு வா..... உன் மனசூடு குறையும்.......நன்றி....

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  சாவுக்கு வந்த கூலிப்படையில் செத்துப்போன நாலுபேர் குடும்பத்தில் யாருக்கும் எந்த பதவியும் கிடையாதா? Atleast கனிமொளி வீட்டிலாவது "ஏதாவது" வேலை தரலாமே

 • Hariharan Iyer - Nagpur,இந்தியா

  பொருளாளர் பதவி மட்டும் வெளி ஆள் யாருக்கும் தர மாட்டோம்.,

 • Natarajan - Hyderabad,இந்தியா

  இந்த கேடு கெட்ட கட்சிக்கு பிஜேபியை விமர்சிக்க என்ன தகுதி உள்ளது. இன்று இந்தியா வில் அனேஹமாக ஊழல் இல்லா கட்சி அது ஒன்று தான்

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  ஆற்காடு வீராச்சாமியை பத்திவிட்ட மாதிரி அன்பழகனை பத்திவிட்டுட்டு அழகிரிக்கு பொதுச்செயலாளர் பதவியை கொடுத்தால் பிரச்சினையை ஓவர். பிறகு தலைவர் ஸ்டாலின், பொதுசெயலாளர் அழகிரி, பொருளாளர் கனிமொழி, மகளிர் அணி தலைவியாக செல்வி, இளைஞர் அணி தலைவர் உதயநிதி, துரைதயாநிதிக்கு முரசொலி அறக்கட்டளை பதவி, சபரிசனுக்கு துணை தலைவர் பதவி, தயாநிதிமாறனுக்கு துணை செயலாளர் பதவி கொடுத்தால் போகிறது. எவன் கேட்கப்போறான். காவடி தூக்கிகளுக்கு சாரி, தொண்டர்களுக்கு காவடி தூக்கவேண்டும் அவ்ளோதான். யாரை தூங்குகிறோம் என்பது முக்கியமில்லை.

 • lokesh - Sholingar,மத்திய ஆப்ரிக்க குடியரசு

  ஏண்டா எவனுமே மாறன் குடும்பத்தி்ல் இருக்கும் யாருக்குமே பதவி கொடுப்பதை பத்தி் கமெண்ட் போடல ?? அவிங்க தானே கடந்த இருப்பது வருஷமா இவனுகள சன்டிவி மூலமா நல்ல வளர்த்துவிட்டாங்க.

 • venkat - vellore,மத்திய ஆப்ரிக்க குடியரசு

  இனிமேல் தி்முக என்கிற ஒரு கட்சி தமிழகத்தி்ல் ஒரு மூலையில் இப்போது இருக்கும் தி்கவை போல் இருக்குமே ஒழிய ஒருபோதும் ஆட்சியில் அமையும் வாய்ப்பு கண்டிப்பாக இல்லை. எனவே உடன்பிறப்புகள் அனைவரும் வேறுகட்சிக்கு போய்டுங்க, இல்லன்னா உங்க வீட்டுல இருக்கிற அண்டா குண்டாவயும் சுடலை குடும்பம் ஆட்டையை போட்டுறும். அப்பறம் அந்த டூமீல்ஸ், தி்டீர் போராளீஸ், ஜாதி் கட்சி ஆளுங்க எல்லாரும் மூட்டையை கட்டிட்டு ஒதுங்கிடுங்க, இல்லன்னா அன்னான் இபிஎஸ் கோபத்தி்ற்கு ஆளாகிடுவீங்க.

 • rajan. - kerala,இந்தியா

  சுடலை ஒன்னு பண்ணுப்பா. இந்த குடும்ப கட்சியை மூன்றாக பிரித்து விடு. நடு இடத்தை கனி அக்காவுக்கு கொடுத்துரு. அதுக்கு கீழ உள்ள இடத்தை மு. க. அ வுக்கு கொடு. எல்லாத்துக்கும் மேல உள்ளதை நீ எடுத்துக்கோ. அப்போ தான் முத்தமிழ் கண்ட தமிழகமாய் ஆட்டைய போட்டு ஜொலிக்கலாமுல்ல. எப்படி வசதிப்பா.

 • siriyaar - avinashi,இந்தியா

  For party காட்ரெஸ் 1960 - chocolates. 1975- alchocol. 1990- briyani. 2020- nayanthara dance. But all other items including money only for karuna and family.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  மொத்த பதவியும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுப்பதில் என்ன தயக்கம் , யாராவது எதிர்த்து பேச முடியுமா ? இல்லை அப்படி பேசிவிட்டு உயிரோடுதான் இருக்கமுடியுமா ?

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  ///கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்/// இது குடும்ப கட்சி என்று சொன்னால் எந்த மட்டை கேட்கிறது.

 • அருணா -

  உங்கள் குடும்பம் அல்லவா தலைவர் பதவியை முடிவு செய்யும்.

 • kumaresan - Petaling Jaya,மலேஷியா

  தி மு க நிச்சயம் கருணாநிதி குடும்பத்தாருக்கு சொந்தமான கட்சிதான்

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  உதயநிதியை தலைவராக்கி எல்லோரும் அவர் பின்னால் நிற்கலாம்,அவர்தான் குடும்பத்திலேயே நிறைய சினிமாக்களில் நடித்திருக்கிறார்..நிறைய ஹீரோயின்களின் ஆதரவும் உண்டு.

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  ஒருவேளை ஜெயலலிதா இப்போது உயிரோடிருந்து , முதல்வராகவும் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? இனி மெரினாவில் யாரையும் புதைக்க முடியாது என்று அவசரச்சட்டம் கொண்டுவந்திருப்பார்....கருணாநிதி இறந்த பின்னும் கூட திமுக கோர்ட்டுக்குப்போயிருக்காது....அப்படியே போயிருந்தாலும் இப்போது போல அநியாயமான , ஒரு தலைப்பட்சமான தீர்ப்பை " வாங்கியிருக்க " முடியாது... தப்பிதவறி தீர்ப்பை " வாங்கி" இருந்தாலும் , அடுத்தடுத்து அப்பீல் , ரிவ்யூ பெட்டிஷன் என்று போட்டு வாரக்கணக்கில் நாற விட்டிருப்பார்... ராஜாஜி ஹாலிலும் அஞ்சலிக்கு வைத்திருக்க முடியாது...ஒரு வாரத்துக்கு முன்பே அங்கு ஏதாவது பொருட்காட்சி போன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அதைக்காரணம் காட்டி அனுமதி மறுத்திருப்பார்... திமுக என்ன செய்திருக்கும்? எவனாவது கட்சிக்காரன் இடம் ஓசியில் கிடைக்கிறதா என்று பார்ப்பார்கள்...இல்லாவிட்டால் சத்தமே இல்லாமல் கண்ணம்மா பேட்டையில் கொண்டுபோய் தகனம் செய்திருப்பார்கள்...சிலர் சொல்வது போல அறிவாலயத்திலெல்லாம் அடக்கம் செய்ய மாட்டார்கள்.... காரணம் , அங்குள்ள மண்டபத்தில் எவனும் சுபநிகழ்ச்சி நடத்த மாட்டான்...வருமானம் போய்விடும்... ஒட்டுமொத்த சென்னையையே விலைகொடுத்து வாங்கும் அளவுக்கு வசதியிருந்தும் கேடிகள் முரசொலி மாறனை பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்தது நினைவிருக்கட்டும்.. கருணாநிதிக்கு இதிலும் ஒரு அதிர்ஷ்டம்..

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  அன்பு மகன் ஸ்டாலினுக்கு - சொறி முத்து எதையாவது கிறுக்கிக் கொண்டு வந்து கவிதை என்று பாடிக் காட்டி விட்டு தலையைச் சொறிவான் - பத்து ரூபாய்க்கு மேல் குடுக்க வேண்டாம் - அப்பா, அவ்வளவுதான் தருவேன் -

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  கலிங்கப்பட்டி சிங்கத்தையும் அப்படியே கட்சியில சேர்த்துக்கோங்கப்பா....

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  வாழ்நாள் பூரா பேராசிரியருக்கு பொது செயலாளர் பதவி தான் போல....

 • k.shanmugasundaram - trichy,இந்தியா

  1970 ஆம் வருடம் வெளி வந்த எங்கள் தங்கம் படத்தில் வரும் ஒரு சீனில் அழகிரி பீடா ஸ்டால் என்று ஒரு கடையை காட்டுவார்கள். எங்கள் தங்கம் படம் திரு முரசொலி மாறன் அவர்கள் கதை வசனம் எழுதி தயாரித்த படம்.

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  கருணாநிதிக்கு பிறகு பெரியார் இனி மேல் யாரோட கனவுல வருவாருங்கிறது தான் என்னோட கவலை...இதுக்கு அறிவாலயம் தரப்பு தான் பதில் சொல்லோணும்...

 • T.S.SUDARSAN - Chennai,இந்தியா

  sudarsan 1 hr ago Power struggle will continue in DMK. Even if stalin is made as president of DMK, his wisdom lacks in many factors. He cannot organise the entire party as one and there will be stiff competition among family members. Let us wait and see the changes. More over he cannot win any election as a single large party since 50% of erstwhile cadre changed their views of stiff perception and demand their rights which will hamper DMK. His way of dealing with opposition lacks. Here after no court case,since his own case has made him to struggle a lot for his father to be placed in marina.Think thrice before taking any step.

 • Thangam - Chennai,இந்தியா

  வாக்கெடுப்பு நடத்திதான் முடிவெடுக்க வேண்டும்...யார் வேண்டுமானாலும் நிற்க்கட்டும்...தளபதிக்குத்தான் வெற்றி...மோதலாம் வாங்க...

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  DMK சங்கர மடம் இல்லை வாரிசுகளை நியமிக்க என கருணாநிதி பேசியது நினைவிற்கு வருகிறது, வாரிசு அரசியல் ஒழிய வேண்டும்

 • adithyan - chennai,இந்தியா

  தமிழகத்தில் ஜனநாயகம் இல்லை.குடும்ப நாயகம். தீ காவிலும் சரி தீ மூ கா விழும் சரி வெளி ஆட்களுக்கு இடம் கேட்டுக்கு வெளியே.

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  அழகிரிதான் சரியானவர் தி.,மு.க வின் தலைவர் பதவிக்கு

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  அரவித்தனாருக்கு தலைவர் பதவி குடுக்கலாம்...

 • S.Kumar - New Delhi,இந்தியா

  அப்படியே தயாளுக்கும் ராஜாத்திக்கும் பதவிகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதே உடன்பிறப்புகளின் ஏகோபித்த வேண்டுகோள்..

 • Vijay - Bangalore,இந்தியா

  ஏன் அன்பழகனுக்கு தலைவர் பதவி குடுக்கக்கூடாதா ?? கட்சியில் அவர்தானே சீனியர் ...

 • Sulikki - Pudukkottai,இந்தியா

  வழக்கம் போல சிண்டுமுடிய ஆரம்பிச்சுட்டீங்களா. சிண்டுகளுக்கே வேலையே அதான்போல. அழகிரியை தலைவர் ஆக்கிவிட்டு, ஸ்டாலின் இருக்கும் பதவியிலேயே தொடரலாம். அதனால் தமிழகம் முழுவதும் கட்சி வலுப்பெறும். முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்தான், அழகிரி தலையிடக்கூடாது. இது சரியாக இருக்கும்

 • varagur swaminathan - Folsom,யூ.எஸ்.ஏ

  No self respect -a party of palanquin bearers for MK family - Even an ordInary man can become PM In BJP. A democratic party is BJP

 • Balaji - chennai,மத்திய ஆப்ரிக்க குடியரசு

  சுடலைக்கு சுத்தமா தலைவர் ஆகும் தகுதி் இல்லை. போதும் தி்முக அதி்முக ஆண்டது, புதி்யவர்களை ஆளவிட்டால் என்ன ஆகிவிட போகிறது ?? போற போக்கை பார்த்தல் இபிஎஸ் நல்லாட்சி தருவார் போலிருக்கு !!

 • Kalyanaraman -

  துரை தயாநிதிக்கு பதவி கொடுத்தால் உதயநிதிக்கு என்ன லாலிபாப்பா?

 • bala -

  dmk should be named kmk. kudumba munnetra kazhagam. they still havent realized their failure.

 • Kesavan Narendran - CHENNAI,இந்தியா

  சாவுக்கு ஒரு நபருக்கு ரூபாய் பதினைந்து ஆயிரம் ரூபாய் கூடுது கூட்டிவந்து மாஸ் காட்ட செய்த்து பெருமை கொள்ளும் தீமுக

 • பாலா -

  நல்லது இப்போது தி.மு.க அதிகாரபூர்வமான குடும்ப கட்சி ஆகிவிடும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பாவம் அன்பழகன் ஒரு பலிகடா...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தி மு க அறக்கட்டளையில் இருந்த மு க குடும்பம் அல்லாதார் அனைவரும் மரணம் அடைந்து விட்டார்கள்... இப்பொழுது தி மு க அவர்களுடைய குடும்ப சொத்து ஆகிவிட்டது ... அதை எப்பிடி வேண்டும் என்றாலும் நிர்வகிக்கலாம்...

 • www.tamilxp.com - Chennai,இந்தியா

  ஸ்டாலினுக்கு தலைவர் பதவி கொடுப்பதுதான் சிறந்தது.அல்லது வேறு யாராவது நியமிக்கலாம்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  இந்த ஊகச்செய்தி உண்மையாக வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். டி ஆர் பாலு, ஆ.ராசா, ஜெ. அன்பழகன் போன்ற தீவிர திமுக விசுவாசிகள் முன்னிலைப் படுத்த பட வேண்டும்.

 • Balaji - Bangalore,இந்தியா

  மீண்டும் குடும்ப அரசியலா? பாவம் தி மு க தொண்டர்கள். துரை முருகன் காலியா?

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  கொடுப்பதைக் கொடுத்தால் ஆதரவு தானாகவே கிடைக்கும் .ஆரம்பக் காலத்திலேயே தலைவரு சிறுவர் சீர்திருத்த சங்கத்தின் தலைவராக இருந்த போது சாக்லெட்டை காட்டி கூட்டம் சேர்க்க வேண்டியதாயிற்று. இந்த சங்கத்தின் சார்பில் வாரம்தோறும் கூட்டம் நடைபெறும். கூட்டத்திற்கு மக்கள் வரவேண்டும். அதற்காக கூட்ட முடிவில் 'சாக்லெட் வழங்கப்படும்' என்று முன்னதாகவே அறிவிக்கப்படும்..அந்தக்காலத்தில் சாக்கலேட் இப்போ தங்க பிஸ்கட் ?

 • ravisankar K - chennai,இந்தியா

  குடும்பத்தையும் கட்சியையும் பிரிக்க முடியாது . தலைவர் விட்டு சென்ற பாரம்பரியம் அப்படி . எல்லா மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட பெருந்தலையின் குடும்பம் தான் ஆட்சியில் உள்ளது . ஒரு குடும்பமே தாங்காது . இங்கு ஒருத்தனுக்கு பல குடும்பங்கள் . அந்த காலத்து மன்னர் குடும்பம் கூட இவ்வளுவு பெரிதாக இருக்காது . இத்தனை பேரும் சேர்ந்து தமிழ் நாட்டை ஆட்டைய போட்டுவிட வசதியாக டாஸ்மாக் மாக்களையும் உருவாக்கி சென்றுள்ளார் தானை தலைவர்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ராசா பாரதி பாலு துரைமுருகன் ஜகத் போன்ற முதலைகளை ஓரம் கட்டு கனியக்காவை குரூப் சேர்க்க விடாதீர்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  பெரியாருக்காக அண்ணா காலியாக வைத்திருந்தார் . கருணாநிதி தன்னைத்தானே அவைத்தலைவராகத்தான் நியமித்துக் கொண்டார். இப்போது என்ன கட்டாயம்? வைக்கோவுக்கு வேண்டுமானாலும் அளிக்கலாம் .கட்சிக்கு மோட்சம்

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  மு. க. அழகிரி

 • jagan - Chennai,இந்தியா

  ரெண்டாம் இடம் அன்பழகனுக்கா இல்ல அழகிரிக்கா?

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  அய்யாதுரையும் வேண்டாம், அழகிரியும் வேண்டாம், பொது மக்கள் யாரேனும் முன்னுக்கு வாருங்கள்.

 • ஆப்பு -

  சொந்த குடும்பத்துலேயே எதிர்ப்பு.. கழகத்தில் நிரந்தர நம்பர் 2 க்களில் யாருக்காவது பதவியை குடுக்கலாம்.

 • chails ahamad - doha,கத்தார்

  திமுக கட்சியின் தலைவர் பதவிக்கு ஓய்வறியா செயல் தலைவர் திரு . ஸ்டாலின் அவர்களே பொருத்தமாக இருந்திடுவார் என்பதில் யாருக்கு மாற்று கருத்து இருக்க முடியாது , கட்சியின் வளர்ச்சியில் அக்கறையுடன் மக்கள் நல பணிகளை முன்னிறுத்தி , எதிர்கட்சி தலைவர்களை அரவனைத்து , ஆளும் கட்சியினரின் மக்கள் விரோத போக்குகளை தோலுரித்து , பட்டி தொட்டியெல்லாம் நடை பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து , அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்திட ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு தமிழக மக்களின் நாயகராக வலம் வந்து கொண்டுள்ள திரு . ஸ்டாலின் அவர்கள் திமுக வின் தலைவராக தேர்ந்து எடுக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகும் , என்னை போன்ற தொண்டர்களின் விருப்பமும் அதுவேயாகும் , நான் பல முறை குறிப்பிட்டுள்ளேன் நோட்டாவின் கூட்டாளியாகிய மக்கள் விரோத கட்சியின் கூலி பட்டாளங்கள் தற்போதும் கருத்து என்ற பெயரில் புலம்பலை பதிவு செய்துள்ளார்கள் , குழப்பத்தில் புலம்புபவர்களை பற்றி பரிதாபப்படுவதை தவிர வேறு எதுவும் சொல்ல தெரியவில்லை .

 • N.K - Hamburg,ஜெர்மனி

  சமாதி வேறு மெரீனாவிலேயே கிடைத்து விட்டது. அழகிரி ஒரு தியானம் செய்தால், ஸ்டாலின் கொஞ்சம் மிரண்டுவிடுவார்

 • ManiS -

  Anbazhagan for next 2 years at least.

 • sankar - trichy,இந்தியா

  குடும்ப கட்சி வேறு என்னத்த சொல்ல .

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  குடும்பத்துக்குள் பதவி என்ற நிலை தொடரும் என்றால் கட்சி அழிவை நோக்கி விரையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை...

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  ஸ்டாலின்: "திமுக அறக்கட்டளையின் பல லட்சம் கோடி சொத்துக்களை நாங்கள் வேறு யாருக்கும் விட்டு தரும் எண்ணமில்லை. அதனால் எங்கள் குடும்ப சண்டையை பதவிக்காக கைவிட்டு சமாதானம் ஆகி விடுவோம்".

 • sinna venkaayam - wellington,பெர்முடா

  கருணாநிதியின் இறுதி சடங்கிற்கு மதுரை ஆதீனம், காஞ்சி ஆதீனம் வராதது மிகவும் கண்டிக்க தக்கது. ஸ்டாலின் முதல்வர் ஆனதும் இவர்களுக்குத்தான் முதல் ஆப்பு அடிக்க வேண்டும்.

 • amarnath - manchester,யுனைடெட் கிங்டம்

  அப்படியா யாராவது வேறகட்சில இருந்து வந்தா நல்ல பொறுப்பு கொடுப்பாரு தலைவர் ஸ்டர்லின் அவங்க எல்லாம் அங்க இருந்து விரட்டிவிட்டவங்க அவங்க எப்படி இவரு கு உண்மையா இருப்பாங்க அத கூட இன்னும் புரியாம இருக்காரு தலைவர் வந்த எல்லாரையும் வரட்டிட்டு வாங்க தனியா கண்டிப்பா தமிழ்நாடு வ ஆளலாம் யாரு கட்சி ஆரம்பித்தாலும் ஒன்னும் பண்ண முடியாது....நீங்க செயல்தலைவர் ஆனா பிறகுதான் உண்மையான திமுக காரனுக்கு மரியாதை இல்ல அத ஸ்டாப் பண்ணுங்க இல்லனா உங்களா ல dmk இல்லாம போயிரும் ஒரு nallu இது உண்மை புரிந்து நடங்க என்ன எங்க மாவட்ட சேகரட்டி admk ல வந்தவரு அதே போல மாநில முக்கிய பொறுப்பில் இருக்கிறவங்க எல்லாம் மதிமுக மற்றும் வேற கட்சில இருந்து வந்த வீங்க.....அவங்க சொன்ன அவங்க வீட்ல கூட vote போடா மாட்டாங்க அப்படி ஆளுக்கு எல்லாம் பதவி கொடுத்தா நீங்க எப்படி சார் வரமுடியும் உண்மையான திமுக காரண் வேலை செய்யமடுக்குறான் சும்மா பணம் கு க வந்த வங்க வைத்து ஒன்னும் பண்ண முடியாது இன்னும் இப்படி பண்ணின ஒரு நாலு நீங்க கூட mla ஆக முடியாது

 • Baskar - Paris,பிரான்ஸ்

  கட்சி சுடாலின் கைக்கு போனால் அவரை சுற்றி உள்ள கொள்ளை கும்பல்களின் ஆட்டம் அதிகமாகி விடும். மீண்டும் நிலம் பறிப்பு அடுத்தவன் சொத்தை ஆட்டையை போடுவது சிறப்பாக நடக்கும். பத்து வருடங்களாக இழந்த சொத்துக்களை பத்தே நாளில் சம்பாத்தித்து விடுவார்கள். இவற்றுக்கு எல்லாம் இடம் கொடுக்காமல் அழகிரி கையில் பொறுப்பை கொடுப்பது நல்லது.

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  குடும்ப ஆட்சி செய்தால்தான் உலகத்தில் பணக்காரர் வரிசையில் முதல் இடம் பிடிக்கலாம் .ஊழலையும் விரிவாக்கலாம்

 • கைப்புள்ள - nj,இந்தியா

  அருமை அருமை. இரண்டு நாட்களாக நான் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழக மக்களுமே எதிர்பார்ப்பது இதுதான். இனிமேலாவது தி.மு.க வும் அதன் கட்சி ஆட்களும் இதே போலவே பழிவாங்கும் அரசியல் நடத்த முயற்சிப்பார்கள் என்றால் கண்டிப்பாக மக்கள் அதை நிராகரிப்பார்கள். கொம்பு சீவும் அரசியல் வேண்டவே வேண்டாம். இனிமேலும் சும்மா மக்களை முட்டாளாக நினைத்து கொண்டு செயல்படாதீர்கள். பழைய தலைமுறை வேண்டுமானால் இன்னும் உங்கள் தூண்டி விடும் அரசியலுக்கு அடிமையாக இருக்கலாம். ஆனா மீதம் இருக்கும் அடுத்த தலைமுறை மக்கள் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இது போன்ற அரசியல் முறை நம்மை எங்கும் இட்டு செல்லாது, ஒரு ஆக்க பூரவமான அரசியலே நம்மை அடுத்த கட்டத்துக்கு இட்டு செல்லும் என்று. ஆகையால் ஒன்று நீங்கள் மாறி மக்கள் மனதில் இடம் பிடியுங்கள். இல்லையேல் மக்கள் மாறி விட்டார்கள், அவ்வளவுதான். வேறு இடம் பாருங்கள்.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  அழகிரியை உள்ளே விட்டால், கொஞ்சநாளில் வலுப்பெற்றவுடன் தினகரன் போன்று கட்சியை உடைத்துவிடுவார். கனிமொழி ஆபத்தில்லை. இருந்தாலும் உயர்பதவி கொடுத்தால், குடும்ப கட்சி என்பதற்கு வலுவான சான்றாகிவிடும். ஸ்டாலின் உதயநிதியையும் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தை தவிர்த்தால், மக்களின் நம்பிக்கை பெறலாம். மேலும் கூடி இருக்கும் மூத்த தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் சீட் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  ஸ்டாலின் தலைமையில் திமுக பிரிவினைவாதத்தை தவிர்த்து ஆக்க பூர்வ அரசியலில் ஈடுபட நல்வாழ்த்துக்கள்....

 • கைப்புள்ள - nj,இந்தியா

  மக்களும் கண்டிப்பாக மாறியே தீரவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த ஒரே குடும்பத்தால், இந்த குடும்பத்தின் நலனுக்காக நாம இன்னும் எவ்வளவு நாள் சாவோம் என்ற எண்ணம் வர வேண்டும். அப்போதான் மாற்றங்கள் பிறக்கும்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  இந்த கட்சி இப்படித்தான், கொஞ்சம் கூட ஒரு ஜனநாயகம் இல்லாமல் ஒரு குடும்ப கம்பெனி போலத்தான் செயல்படும் என்றால் நல்லதுதான். அப்பொழுதான் மக்களின் வெறுப்பு மாறாமல் இன்னும் அப்படியே இருக்கும். மக்கள் படுபயங்கரமான கடுப்பில் இருக்கிறார்கள், கருணா மற்றும் கருணாவின் மிக பெரிய குடும்பம் தமிழ்நாட்டில் செய்யும் கொடுமைகளால். அப்படியே கொதித்து கொண்டு இருக்கிறார்கள். கருணாவின் குடும்பம் நாளுக்கு நாள் பெரிசாகி கொண்டே போகிறது. அவர்கள் செய்யும் அநியாயம் அக்கிரமங்கள் கட்டுக்கடங்காமல் போய் கொண்டே இருக்கிறது. இந்த ஒரே ஒரு குடும்பத்துக்காக தமிழ்நாடு முழுதும் அழிய வேண்டுமா என்ற எண்ணம் மக்களிடம் மேலோங்கி இருக்கிறது. ஆகவே இந்த குடும்பத்து ஆட்களே மீண்டும் இந்த பதவிகளில் இருப்பது நல்லதுதான். அப்பொழுதுதான் மக்கள் இவர்களை மொத்தமாக புறக்கணிக்க நல்ல வாய்ப்பாக இருக்கும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement