Advertisement

8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


சேலம் : கர்நாடகா அணைகளில், வினாடிக்கு, 1.35 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணை மீண்டும் நிரம்பும் நிலையில் உள்ளது. எட்டு மாவட்ட மக்களுக்கு, மத்திய அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துஉள்ளது.



சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நீர்மட்டம், 120 அடி. இதில், 93.47, டி.எம்.சி., தண்ணீர் தேக்க முடியும். கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதியில், தீவிரமடைந்த பருவமழையால், கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பின. அங்கு திறக்கப்பட்ட உபரி நீரால், ஜூலை, 23ல், மேட்டூர் அணை நிரம்பியது. இங்கிருந்து, டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பதால், நேற்று, அணை நீர்மட்டம், 117.50 அடியாக சரிந்தது.


இந்நிலையில், கேரளா மற்றும் கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதியில், நேற்று முன்தினம், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், இவற்றின் உபரி நீர், தமிழகத்திற்கு திறக்கப்பட்டது. கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் உபரி நீர் திறப்பு, நேற்று மாலை,
1.35 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கபினியில் இருந்து, 80 ஆயிரம் கன அடி நீரும், கே.ஆர்.எஸ்.,சில் இருந்து, 55 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.


இந்த நீர், இன்று காலை முதல், தொடர்ச்சியாக வரும் என்பதால், மேட்டூர் அணை நீர்மட்டம், மளமளவென உயரும். கர்நாடகா அணைகளில், உபரி நீர் திறப்பு அதிகரித்து உள்ளதால், வினாடிக்கு, 17 ஆயிரத்து, 500 கன அடியாக இருந்த டெல்டா நீர் திறப்பு, நேற்று மதியம், 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.


இதன் ஒரு பகுதி, 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டது. நாளை, மேட்டூர் அணைக்கு வரும் நீரில் பெரும் பகுதி, உபரி நீராக திறக்க வாய்ப்புள்ளதால், காவிரியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் முதல் டெல்டா பாசன பகுதிகள் வரை, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


குறிப்பாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை ஆகிய எட்டு மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு, மத்திய அரசு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஒகேனக்கல் காவிரியாற்றுக்கு, நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, 9,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. நேற்று, 32வது நாளாக, அருவிகளில் குளிக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மீண்டும் நிரம்பிய அமராவதி: திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தென்மேற்கு பருவமழையால் மூன்று ஆண்டுகளுக்கு பின் அமராவதி அணை ஜூலை 16ல் நிரம்பியது. 3ம் தேதி வரை 19 நாட்கள் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு திடீரென நீர் வரத்து அதிகரித்து மொத்தமுள்ள 90 அடியில் 87.90 அடியாக நீர் மட்டம் உயர்ந்தது. இரண்டாவது முறையாக அமராவதி அணை நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முழுவதும் கடலுக்கே : காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி, கர்நாடகா ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 177.25, டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். இதில் ஜூலையில் 31.24, டி.எம்.சி., வழங்க வேண்டும். ஆனால் பருவமழை கைகொடுத்ததால் கர்நாடகா அணைகளில் இருந்து அபரிமிதமாக 122 டி.எம்.சி., உபரி நீர் மேட்டூர் அணைக்கு கிடைத்தது. இதில் பாசனத்துக்கு 31, டி.எம்.சி., போக, 17, டி.எம்.சி., நீர் உபரியாக வெளியேற்றப்பட்டது. தற்போது கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட 1.35 லட்சம் கன அடி உபரி நீர் மேட்டூர் அணைக்கு வரும்பட்சத்தில் அதன் பெரும் பகுதியை உபரியாக காவிரியாற்றில் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அது பாசனத்துக்கு பயன்படாமல் கடலுக்கே செல்லும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (11)

  • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

    வைகை நதி வறண்டு உள்ளது இந்த உபரி நீரை இந்த பக்கம் திருப்பி இருந்தால் இங்கு விவசாயம் செழித்திருக்கும்.

  • Meenu - Chennai,இந்தியா

    கட்டுமரம் தான் ஏகப்பட்ட அணைகளை கட்டியதா செய்திகள் வந்ததே, அந்த அணைகள் எல்லாம் என்னாச்சு, அதில் இந்த தண்ணீரை தேக்கி வைக்க வேண்டியதுதானே.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    இப்பொழுது கருநாடக அணையை திறக்கவேண்டாம் என்று குமாரசாமி சொல்லுவாரா.. ? டப்பா டான்ஸ் ஆடிவிடும்

  • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

    கட்சி காரன் முதல் கருத்து சொல்றவன் வரை மழை நீர் கடலுக்குள்ள போனா தான் இயற்கை செழிக்கும்னு சொல்லுவாங்க... அதனால கடலுக்குள்ள எல்லாத்தையும் அதிமுக அரசு விடுகிறது.................நாம என்ன எல்லாத்தையுமா தடுக்க சொல்றோம்? குறைஞ்ச பட்சம் ரெண்டு மூணு டி.எம்.சி யாவது தேக்க கூடிய நீர் தேக்கங்களை உருவாக்கி வைத்து அவற்றை திருப்பி விடலாம் என்று தான் சொல்கிறோம்...அப்புறமா கர்நாடக காரன்கிட்ட சண்டை போட்டுக்கலாம்.......அவ்வளவு தண்ணி கடலுக்குள்ள போகும் நிலையில் கூட பல மாவட்டங்களில் கடைமடைகளில் நீர் வரவில்லை......இது தான் நிஜம்......நீர் மேலாண்மை என்பது சுத்தமாக இல்லை......எல்லா இடத்திலும் தூர் வரவில்லை....கொள்ளிடம் ஆற்றில் கூட ஆள் உயரத்திற்கு கருவேல மரங்கள் வளர்ந்து நின்றதை போன மாதமே நான் பதிவு செய்தேன்........நீர் தேக்கங்களை உருவாக்கவில்லை.......இவ்வளவு தண்ணி வந்தாலும் இன்னும் ஒரு மாதம் போனால் நாம் கர்நாடகாவிடம் தான் கையேந்த வேண்டும்.............

  • jagan - Chennai,இந்தியா

    சரி கவருமெண்டு எதுவும் பண்ணாது என்று தெரியும் ...நம்ம கிராம மக்கள் சும்மா இருக்கமா தூர்வாரி இருக்கலாம். அதுக்கு பணம்? நாங்களே தூர்வாறுறோம், பணஉதவி தேவை என்று விளம்பரம் குடுத்தால், உள்நாடு வெளிநாடு என்று உதவி செய்ய நல்ல உள்ளங்கள் உண்டு ஆனா அதை ஒருங்கிணைத்து அவர்கள் ஒரு கார்பஸ் பண்டு உருவாக்கி இருந்தால் நிறைய செய்திருக்கலாம். நம்ம மக்கள் அரபி பாலையில் தண்ணி இல்லாம ஒட்டகம் மேய்த்தாலும், சொந்த ஊருக்கு உதவ தயங்கமாட்டார்கள் ... தண்ணீர் இருக்கும் வரை மணலும் திருட முடியாது. ஆனாக்க எல்லாம் கவருமெண்டு செய்யணும்னு தலையை சொறிஞ்சு கிட்டு இருந்த மக்கள் மேலயும் தவறு இருக்கு ...

  • abdul rajak - trichy,இந்தியா

    இப்பவே மேட்டூரில் இருந்து 50000 கண அடி தண்ணீர் திறந்தால் வருகின்ற தண்ணீரை மேட்டூரில் தேக்கி வைத்து கொள்ளலாம் . வெள்ள பெருக்கையும் தடுக்கலாம் .

  • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

    அப்போ அய்யாக்கண்ணு எதுக்கு முதல்ல போராடி இருக்கணும் ? தமிழ்நாட்ல நிறைய டேம் கட்டணும்ன்னுதானே போராடி இருக்கணும்? இப்ப பாருங்க எல்லா தண்ணியும் வேஸ்ட் ஆகுது, தண்ணிய தேக்கி வெச்சு பாசனத்துக்கு பயன்படுத்தி இருக்கலாமே ?

  • jagan - Chennai,இந்தியா

    அதை விட வேகமாக நமது ஊழல் இட ஒதுக்கீட்டுக்கு அதிகாரிகள் கடலில் விடுவார்கள் (அவர்கள் திறமை அவ்ளோதான்).....இல்லை என்றால் தண்ணி டேங்கர் லாரி வருமானம் போகும், மணல் குவாரி பிசினெஸ் டல் அடிக்கும் ....அப்புறம் உபரி நீர் கணக்கில் வராது என்று ஒப்பாரிவைப்போம் ....டாஸ்மாக் வாழைமட்டை டுமிலனுக்கு வரும் தண்ணிய சேமிக்க வக்கில்லை ஆனா ஒப்பாரி வைக்க வாயுண்டு ...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement