Advertisement

விபத்து: மாணவர்கள் காயம்

அம்பத்துார்:தனியார் பேருந்து மோதி, பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.
அம்பத்துார் அடுத்த சூரப்பட்டு பகுதியில் உள்ள, தனியார் பள்ளியில், பிளஸ், 1 படிக்கும், முகப்பேர் பகுதியை சேர்ந்த, 10 மாணவ - மாணவியர், நேற்று மாலை, 4:45 மணிக்கு, வீட்டிற்கு காரில் சென்றனர்.
அங்குள்ள, தனியார் பொறியியல் கல்லுாரியின் பேருந்து, எதிர்பாராதவிதமாக, கார் மீது மோதியது. அதில், ஷாலினி, தனுஷ் உள்பட, ஐந்து மாணவர்கள் காயமடைந்தனர். தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று, அவர்கள் வீட்டிற்கு சென்றனர். மண்ணுார் பேட்டையைச் சேர்ந்த, கார் ஓட்டுனர் பூபாலனுக்கு, 25, கையில் முறிவு ஏற்பட்டது. பூந்தமல்லி, போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement