Advertisement

திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் தரம் உயரும் அரசு பள்ளிகள்

சென்னை:திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏழு பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாகவும்; ஆறு பள்ளிகள், மேல்நிலை பள்ளியாகவும் தரம் உயர்த்தப்படுகின்றன.உயர்நிலை பள்ளிகளாக மாறுபவை திருவள்ளூர் மாவட்டத்தில், மதுரவாயல் நகராட்சி நடுநிலை பள்ளி; கள்ளிக்குப்பம் நகராட்சி நடுநிலை பள்ளி; பொன்னேரி, ஆதிராகவபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி; ஆ.ரெட்டி பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகாஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்துார் தாலுகா, துாண்டல் கழனி ஊராட்சி நடுநிலை பள்ளி; மதுராந்தகம் தாலுகா, தோட்ட நாவல் ஊராட்சி நடுநிலை பள்ளி மற்றும் திருக்கழுங்குன்றம், வள்ளிபுரம் ஊராட்சி நடுநிலை பள்ளி.மேல்நிலை பள்ளிகளாக உயர்பவைதிருவள்ளூர் மாவட்டத்தில், ராமாபுரம், அரசு உயர்நிலை பள்ளி; முகப்பேர் கிழக்கு அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி; சீத்தஞ்சேரி அரசு உயர்நிலை பள்ளி; சுந்தரசோழபுரம் அரசு உயர்நிலை பள்ளி; பூனிமாங்காடு அரசு உயர்நிலை பள்ளி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், முசரவாக்கம் அரசு உயர்நிலை பள்ளி ஆகியன தரம் உயர்த்தப்படும் என, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement