Advertisement

தென் இந்திய யோகாசன போட்டி 700 போட்டியாளர்கள் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி:தென் இந்திய அளவில் நடைபெற்ற யோகாசன போட்டியில், ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த, 700 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
திருவள்ளூர், கும்மிடிப் பூண்டியில் இயங்கும், கைரளி யோகா வித்யா பீடம், தமிழ்நாடு யோகா விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில், 14ம் ஆண்டு, தென் இந்திய யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியை, கும்மிடிப்பூண்டியில் நடத்தியது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த, 700 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.வயது வாரியாக, 15 பிரிவுகளாக, யோகாசன போட்டிகள் நடத்தப்பட்டன.
இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இறுதியாக, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது.
பெண்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில், பெங்களூரைச் சேர்ந்த கல்லுாரி மாணவி அஞ்சலிராய், 21, ஆண்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில், பெங்களூரைச் சேர்ந்த கல்லுாரி மாணவன், நாகபூஷன், 18, ஆகியோர், வெற்றி பெற்றனர்.
இருவருக்கும், சாம்பியன் கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.விழாவில், கல்வி குழும தலைவர் கோவிந்தராஜன், வியாபாரிகள் சங்க தலைவர் அரசு, தொழிலதிபர் கிளமண்ட், கைரளி யோகா வித்யா பீட நிறுவனர் தலைவர் ராதாகிருஷ்ணன்
ஆகியோர் பங்கேற்றனர். போட்டியாளர், பயிற்சியாளர்களுக்கு, பதக்கங்கள், சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கி பாராட்டினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement