Advertisement

மெரினா, ராஜாஜி ஹாலில் 18 டன் குப்பை அகற்றம்

சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த, ராஜாஜி ஹால், ஊர்வல பாதை மற்றும் மெரினாவில் குவிந்திருந்த, 18 டன் குப்பையை, மாநகராட்சி அகற்றியுள்ளது.
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக, நேற்று முன்
தினம், ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. அன்று மாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை வழியாக, கருணாநிதி உடல், இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மெரினா கடற்கரையில் உள்ள, அண்ணாதுரை நினைவிடம் அருகே, அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வின்போது, ஏராளமான, தி.மு.க.,வினர் மற்றும் பொதுமக்கள் கூடினர். இதனால், அப்பகுதியில் குப்பை அதிகம் தேங்கியது. நேற்று முன்தினம் இரவு, அப்பகுதிகளில் தேங்கிய குப்பையை, 150 மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் அகற்றினர். நான்கு வாகனங்கள் வாயிலாக, 18 டன் குப்பை அகற்றப்பட்டது.
அதேபோல், மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில், மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. இந்த முகாமில், காய்ச்சல், மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக, அஞ்சலி செலுத்த வந்த, 68 பேர் சிகிச்சை பெற்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement