Advertisement

அரசியல் கட்சிகளின் வருமானம்; ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

புதுடில்லி : மாநில கட்சிகள், 2016 - 17ம் நிதியாண்டில் பெற்ற மொத்த வருமானத்தில், 22 சதவீதம், அடையாளம் தெரியாத வகையில் பெறப்பட்டுள்ளதாக, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் சார்பில், நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தேர்தல் கமிஷனில் அங்கீகாரம் பெற்ற, 37 மாநில கட்சிகளின் வருமான வரி கணக்கு தாக்கல் விபரம், அவர்களின் சொத்து கணக்கு விபரங்களின் அடிப்படையில், ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது.


அதில், 29 கட்சிகளின் சொத்துகள் பற்றிய விபரங்கள் கிடைத்தன. மீதமுள்ள, எட்டு கட்சிகளின் வருமானம், சொத்து விபரங்கள் கிடைக்கவில்லை. அந்த வகையில், 2016 - 17ம் நிதியாண்டில், 29 மாநில கட்சிகளின் மொத்த வருவாய், 347.74 கோடியாக உள்ளது.


அதில், சொத்து விற்பனை, உறுப்பினர் கட்டணம், வங்கி, 'டிபாசிட்' வட்டி வருமானம், புத்தக விற்பனை உள்ளிட்ட வகையில், 179.37 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது, மொத்த வருமானத்தில், 51.58 சதவீதம்.


சிவசேனா, அகாலி தளம், சமாஜ்வாதி, எம்.என்.எஸ்., ராஷ்ட்ரீய லோக்தளம் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் வருமானத்தில், 83 சதவீத தொகையை, கார்ப்பரேட்டுகள், தொழில் நிறுவனங்களிடமிருந்து பெற்றதாக தெரிவித்துள்ளன. மேலும், 16 மாநில கட்சிகள், தங்கள் மொத்த வருமானத்தில், 83 சதவீதத்தை, கட்சி உறுப்பினர்களி டம் இருந்து பெற்றதாக தெரிவித்துள்ளன.


மாநில கட்சிகளின் மொத்த வருமானத்தில், 22 சதவீத தொகை, அதாவது, 77 கோடி ரூபாய், அடையாளம் தெரியாத வகையில் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

 • Enrum anbudan - dammam,சவுதி அரேபியா

  நாற்பது சதவிகிதத்தில் இருபது சதவிகிதம் கட்சிக்கு

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  வருமானம் காட்டப்பட்ட பணம் கணக்கில் உள்ள பணம். தேர்தலில் முறைகேடாக செலவழிக்க கணக்கில் உள்ள பணத்தை உபயோகிக்க முடியாது. கருப்பு பணம் தான் வேண்டும்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தேசிய அளவில் அதிகமான வசூல் அல்லது வருமானம் அல்லது இங்கே ஒருத்தர் சொல்லியிருக்கிற மாதிரி கொள்ளை அடிச்சது பிஜேபி. மாநில அளவிலும் குடி பிஜேபி தான். அதனாலேயே, எந்த குறிப்பிட்ட கட்சி பேரும் போடாமல் எழுதியிருக்கிறார்கள்.

 • Mannan - Madurai,இந்தியா

  கார்பொரேட் பேர சொல்லி திட்டற எந்த கட்சிக்காரனா இருந்தாலும் சரி, அவனுக்கு கார்பொரேட்ல இருந்து தான் பணம் வந்துட்டிருக்கும். நாம தான் கடைசில கேனயனா இருப்போம்.

 • Suri - Chennai,இந்தியா

  இப்படி பொதுவான செய்தி வெளியாகி இருக்கும் நிலையை பார்த்தல் பீ ஜெ பீ குறித்து ஏடாகுடமாக எதோ அந்த குறிப்பில் உள்ளது. அதனால் அதை தவிர்த்து இப்படி பொதுவாக செய்தி வெளிவந்துள்ளது.

 • tamil - coonoor,இந்தியா

  கருப்பு பணத்தை ஒழிக்க அரசு மேற்கொண்ட உயர் பணமதிப்பு நீக்கம், உட்பட எந்த ஒரு நடவடிக்கையும் எந்த ஒரு பலனையும் கொடுக்கவில்லை

 • Meenu - Chennai,இந்தியா

  எல்லா கட்சிகளிலும் தலைமை, மந்திரி, எம் எல் ஏ, எம் பி, மாவட்ட செயலாளர், இப்படி எல்லோரும் ஒரு கணிசமான சொத்துக்களை தன் பெயரிலும், மனைவி பெயரிலும், மிச்சத்தை தன் மேல் விசுவாசமான உள்ளவர்கள், பினாமி என்கிற பெயரிலும் வைத்துள்ளனர். கட்சியின் நிதி என்பது சின்னது தான். இந்த பினாமிகள் தான், கட்சியின் விசுவாசி, தீவிர தொண்டர் என்கிற பெயரில் சுற்றி திரிகின்றனர். லாபம், ஆதாயம் அடைந்தவர்கள் தான் தன் எசமானுக்கிட்டேயே இருந்துகிட்டு அவர் சொல்வதை தட்டாமல் செய்கின்றனர். இது தான் இன்றைய அரசியல் நாகரிகம். காமராஜர் எல்லாம் அப்படி வாழ்ந்தாரா ? அப்துல் கலாம் அய்யா அப்படி வாழ்ந்தாரா ??

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அடையாளம் தெரியாத வகையில் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறு.,.....அடையாளம் எல்லாம் தெரியும்... ஆனால் அதை கொடுத்தவரின் பாதுகாப்பு கருதி வெளி இட மனமில்லை என்று சொல்லுங்கள்..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அரசியல் கட்சிகளின் வருமானம்.....வருமானம் என்று சொல்லக்கூடாது... கொள்ளை அடிக்கப்பட்டது என்று சொல்லுங்கள்..

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  பத்து இருபது என உண்டியல்களிலும் சிறு சிறு நன்கொடைகளாகவும் வரும் தொகைகளை ரசீது என்பது கடினமான ஒன்று .கணக்கில் வராத பணத்தை யாரும் கட்சியின் வருமானமாகக் காட்டுவதில்லை .அது வெளியிலும் வராது .மற்றவை பினாமி பெயர்களில் சொத்துக்களாக முதலீடு செய்யப்படுகின்றன ஆனால் தேர்தல் சமயத்தில் தேவைப்படும் பணத்தை அந்தநேரத்தில் ஹவாலா மூலம் பெறுவதுதான் நடக்கின்றது .இதற்கு உதவத்தான் பல எதிர்க்கட்சிகள் அதில் கைதேர்ந்த சிறுபான்மையினக் கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்கின்றன .பணமூட்டைகளுக்கு தேர்தல் டிக்கெட் கொடுக்கும்போது மற்ற தொகுதி வேட்பாளர்களின் செலவையும் அவர்களே கவனித்துக்கொள்வது வழக்கம்தான் .இது டிக்கெட் கேட்கும்போது முடிவாகும் டீல் . மற்றபடி எந்தக் கட்சியும் கருப்புப்பணத்தை கட்சிப்பணமாக கணக்கு காட்டுவதில்லை .மாயாவதி மட்டும் ஆட்களை வைத்து பல லட்சம் போலி ரசீதுகளை உருவாக்கி தொண்டர்களிடம் வசூலித்தது என கணக்கு காட்ட்டிவிடுகிறார் .அந்தப்பணம்தான் அவரது சகோதரரிடம் கைப்பற்றப்பட்டது.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  காட்சிகளை அடையாளம் காண முடியாத அளவில் சிறப்பாக செய்தி வெளியிட்டு இருக்கிறது தினமலர்..

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  என்ன நிலவரம்னு சொல்ல அதிர்ச்சியா இருக்கா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement