Advertisement

'ஸ்டெர்லைட்' ஆலையில் நிர்வாக பணிகளுக்கு அனுமதி

புதுடில்லி : துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலையில், நிர்வாக பணிகளை மேற்கொள்ள, 'வேதாந்தா' குழுமத்துக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்துள்ளது.


தமிழகத்தின் துாத்துக்குடியில், வேதாந்தா குழுமம் சார்பில் நடத்தப்பட்டு வந்த, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, மே மாதம் நடந்த போராட்டம், கலவரத்தில் முடிந்தது. வன்முறையை கட்டுப்படுத்த, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் இறந்தனர்.


இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ஆலைக்கு அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. 'ஆலையை நிரந்தரமாக மூட, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு, இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என்ற வேதாந்தா குழுமத்தின் கோரிக்கையை, தேசிய பசுமை தீர்ப்பாயம் நிராகரித்தது.


இதன்பின், வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், 'இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு கூறப்படும் வரை, ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது, 'வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்ற தமிழக அரசின் கோரிக்கையையும், தீர்ப்பாயம் நிராகரித்தது.


இந்நிலையில், வேதாந்தா குழுமத்தின் மனு மீதான விசாரணை, தேசிய பசுமை தீரப்பாயத்தின் தலைவர், ஏ.கே.கோயல் தலைமையிலான, நீதிபதிகள், ஜவாத் ரஹீம், எஸ்.பி. வாங்டி ஆகியோர் இடம் பெற்ற அமர்வு முன், நேற்று நடந்தது.விசாரணைக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலையில், நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள, வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் ஆலையை இயக்க, அனுமதி வழங்க முடியாது. இதை, மாவட்ட கலெக்டர் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.


மேலும், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசு தொடர்பான அறிவியல் பூர்வ ஆதாரங்களை, வரும், 20ம் தேதிக்குள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (25)

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  வந்தேறி ஆரியக்கூட்டம் திராவிடனை விடாது துரத்துகிறது

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  தமிழக அரசு வக்கீல் வைத்தியநாதன் ஒரு rss நபர் . அவர் வேண்டும் என்றே கலைஞர் மரீனா பிரச்சனையை உருவாக்கி விட்டு கோர்ட்டுக்கு போகாமல் ஸ்டெர்லிட் வெற்றி பெற செயல்பட்டார்.

 • Shanu - Mumbai ,இந்தியா

  பிஜேபி ஆட்சியில் இருக்கும் வரை ஜனநாயகம் தோற்று கொண்டே இருக்கும்.

 • Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா

  வேதாந்தா வேணும்னு சொல்லுற இரக்கமற்ற மனிதர்களே உங்களுக்கு வேதாந்தா முக்கியமென்றால் உங்க ஊரு கலெக்டரிடம் உங்க ஊரில் வேதாந்தாவை தொடங்க மனு கொடுங்கள். எங்கேயோ எவனோ சாகுறானு கருத்து தெரிவிக்காதீர்கள். வேதாந்தாவை சுற்றியுள்ள கிராமங்களில் காற்றும் தண்ணீரும் மாசுபட்டுள்ளது என்று மத்திய அரசே கடந்த மாதம் அறிக்கை கொடுத்துள்ளது வேணுமென்றால் கூகுளில் தேடி கொள்ளவும்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  கிரகணம் விட்டபிறகு எல்லாமே நல்லபடியாக நடக்க ஆரம்பித்து இருக்கிறது போல தென்படுகிறது. தூத்துக்குடி மக்களின் வாழ்வில் மீண்டும் ஒளியேறட்டும். சுமார் 15000 குடும்பங்களின் பசியாற்றுவது தொடங்கட்டும். அவர்கள் விட்ட எதிர்காலத்தை மீண்டும் கட்டியமைக்கட்டும். இங்கு ஊளை இடும் நரிகள் ஒரு வாய்க்கு ஒரு கப் தண்ணீர் கூட தரமாட்டான். அது முடியாது . ஊளை இடுவதோடு சரி. ஆகவே அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த ஆலை துவங்கப்பட வேண்டும்...நின்று விட்ட 15000 கனவுகளும் தடைபட்ட தூத்துக்குடி மக்களின் பொருளாதார முன்னேற்றமும் மீண்டும் துவங்கட்டும்.

 • Divahar - tirunelveli,இந்தியா

  பெருச்சாளி வளைக்குள் நுழைந்துவிட்டது. வால் மட்டும் தான் வெளியே இருக்கிறது

 • Shanu - Mumbai ,இந்தியா

  ஜனநாயகம் தோற்று கொண்டே இருக்கும் பிஜேபி ஆட்சி இருக்கும் வரை.

 • AURPUTHAMANI - Accra,கானா

  இதில் தமாஷ் மற்றும் கோமாளித்தனம் இனி மேல் தன இருக்கிறது.தமிழ்நாடு மாசு கட்டு பட்டு வாரியம் என்ன கொடுக்க முடியும்?1 .நாங்கள் போட்ட அணைத்து கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத்தான் அவர்கள் உற்பத்தி செய்தார்கள் 2 .இதனால் கான்செர் வந்ததாகவோ கர்ப்பிணி பெண்கள் பாதிக்க பட்டதாகவோ,நிலத்தடி நீர் பாதிக்க பட்டதாகவோ எங்களிடத்தில் எந்த ஆதாரமும் இல்லை.3 .தொழிற்சாலையில் வேலை செய்த எந்த தொழிலாளியும் பாதிக்க படவில்லை.வேறு ஏதும் நிச்சியம் சத்தியமாக கொடுக்க முடியாது.சும்மா இங்கு கத்தி பிரயோஜனமில்லை.ஒரு நாள் இது உச்ச நீதிமன்றத்துக்கு வரும் பொது மாபெரும் வக்கீல் சிங்கம் வைகோ வை பார்ட்டியாக்கினால் கூட அவரிடமும் எந்த ஆதாரம் இல்லை. பழைய நூறு கோடி அபராதம் வேறு நடவடிக்கை இங்கு மூட உதவாது.அங்கு உணர்ச்சி கத்தல் வேலைக்கு ஆகாது எழுத்து பூர்வமான ஆதாரம் தேவை அது இதில் நிச்சியம் இல்லை.

 • tamil - coonoor,இந்தியா

  அரசின் தவறான அணுகுமுறை, அந்த ஆலை நிர்வாகம் அரசின் விதிமுறைகளை அலட்சியப்படுத்தியது, அதை கண்டுகொள்ளாமல் விட்ட அதிகாரிகள், அந்த ஆலை முடங்கியதற்கு இந்த அனைவரும் தான் முழு முதல் காரணம், இந்த மூன்று சக்திகளும் நேர்மையாக நடந்துகொண்டிருந்தால் ஆலையை இழுத்து மூட அவசியமே இருந்திருக்காது

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஸ்டெர்லைட் ஆலையில், நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள, வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ...இது முதல் படி...

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  தூத்துக்குடி மாதிரி மடத்தனமான போராட்டம் தமிழகத்தில் இதுவரை நடந்ததில்லை. இப்போதுகூட மழைவெள்ளத்தில் நொய்யலாற்றில் பெருமளவு சாயத்தண்ணீரை கலக்கிறார்கள் .அந்த கலப்பட நீர்தான் காவிரி டெல்ட்டாவில் பயிரிடப் பயன்பட்டு நமக்கு உணவாகப்போகிறது . போர்வையாளர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் ஏனெனில் கொங்கு பகுதி சமுகத்துக்கு பெரிய வாக்குவங்கி உண்டு அகர்வாலுக்கு இல்லையே

 • Darmavan - Chennai,இந்தியா

  தமிழ் நாடு மாசு கட்டுப்பட்டு வாரியம் நேர்மையான அறிக்கை கொடுக்குமா அல்லது அதிலும் தில்லு முல்லு இருக்குமா?

 • jagan - Chennai,இந்தியா

  ஆந்திராவுக்கு இந்த தொழிற்சாலை போகலாம்...டாஸ்மாக் டுமிலர்களுக்கு சாராயம் போதும்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  "தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பிக்க வேண்டும்" - அப்படி முடியவில்லை என்றால் நீதிமன்றமே முன்னின்று இந்தத்தொழிற்சாலையை திறக்குமா? பல்லாயிரம் குடும்பங்களின் மீது சற்றும் பொறுப்புணர்ச்சி இல்லாமல் இந்த ஆலை மூடப்பட்டது ஒரு கேவலம்...

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "நிதி" மன்றமே தீர்ப்பு வழங்கி விட்டதா?

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  "கூடாரத்துக்குள் நான் என் மூக்கை மட்டும் நுழைத்து கொள்கிறேன்" என்றது ஒட்டகம் .. லம்ப்பாக லஞ்சம் வாங்கிக்கொண்ட அரசும், "சரி" என்றது... அப்புறம்..

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  'ஸ்டெர்லைட்' ஆலை நிர்வாகத்தின் பணி என்ன ? உற்பத்தியை பெருக்குறதுதான ?

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  விரைவில் ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி கிடைக்கும். வரும் தேர்தலின் போது, பழனிசாமி, தூத்துக்குடி மக்களுக்கு ஓட்டிற்கு ரெண்டாயிரம் ரூபாயும், ஒரு சுண்ணாம்பு கட்டியும் கொடுப்பார். கேன்சருக்கு சுண்ணாம்பு கட்டி வீரிய மருந்தாகும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement