Advertisement

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்த பா.ஜ.,

ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தலில், எதிர்பார்த்ததை போலவே, பிஜு ஜனதா தளம் கட்சியினரின் ஆதரவை பெற்று, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, அபார வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் ஓட்டை போட்டு, தே.ஜ., கூட்டணி, இதை சாதித்து காட்டியுள்ளது.


ராஜ்யசபா துணைத் தலைவராக இருந்த, காங்கிரசின், பி.ஜே.குரியனின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய துணைத் தலைவரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல், நேற்று திட்டமிட்டபடி நடந்தது. ராஜ்யசபா நேற்று கூடியதும், முதல், 15 நிமிடங்கள் வழக்கமான அலுவல்கள் நடந்தன. வேட்பாளர்களை முன்மொழிந்து, எம்.பி.,க்கள் ஒவ்வொருவராக தீர்மானம் தாக்கல் செய்தனர்.


ஆதரவு :
கொறடா உத்தரவுக்கு இணங்க, பா.ஜ.,வின் அனைத்து, எம்.பி.,க் களும் சபையில் ஆஜராகியிருந்தனர். உடல்நலக் குறைவால் ஓய்வில் இருந்த சபை முன்னவரும், நிதியமைச்சருமான, அருண் ஜெட்லி, மூன்று மாதங்களுக்கு பின், நேற்று சபைக்கு வந்திருந்தார்.


ஓட்டுப்பதிவுக்கு உத்தரவிட்டதும், முதல் இரண்டு ரவுண்டுகளிலும், எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹரி பிரசாத்தை விட, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி வேட்பாளரான ஹரிவன்ஷ் நாராயண் சிங்கே முன்னிலையில் இருந்தார். ஹரிவன்ஷ், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்.


வெற்றிக்கு தேவை, 119 ஓட்டுகள் என்ற சூழ்நிலையில், ஆளும் தரப்பு வேட்பாளருக்கு, 125 ஓட்டுகளும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளருக்கு, 105 ஓட்டுகளும் கிடைத்தன. இதையடுத்து, சபைத் தலைவர் வெங்கையா நாயுடு, ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தலில், ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.


அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்பட்ட இந்த தேர்தலில், எதிர்க்கட்சிகள், தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கான வாய்ப்பாக இதை கருதின. நிலைமைகளும் எதிர்க்கட்சிகளுக்கே சாதகமாக இருந்தன. ஆனால், கடைசி நேரத்தில்,

பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவும் மேற்கொண்ட ராஜதந்திர காய் நகர்த்தல்கள், நிலைமையை மாற்றி விட்டன.


அரசியல் ரீதியாக, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியும், பிஜு ஜனதா தளமும், எப்போதும் காங்கிரசுடன் இணக்கமாக போக முடியாத சூழலை, பா.ஜ., சரியாக பயன்படுத்தியது. பா.ஜ., வேட்பாளர் என்றால், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஆதரவு கிடைக்காது என்பதாலேயே, கூட்டணி கட்சி வேட்பாளரை நிறுத்த முடிவெடுத்தது, பா.ஜ., மேலிடம்.


துருப்புச்சீட்டு :
அதுவும், பீஹார் கூட்டணி கட்சியான, ஐக்கிய ஜனதா தளத்துக்கு அந்த வாய்ப்பை தந்தது, திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான, நவீன் பட்நாயக்கிடம் தான், வெற்றிக்கான துருப்புச்சீட்டு இருந்தது. அவரை வளைப்பதற்கு இரு தரப்புமே, தீவிரமாக முயற்சித்தன. ஆனால், யாருக்கும் பிடிகொடுக்காமல், கடைசி வரை, நவீன் பட்நாயக் அமைதி காத்து, இருதரப்புக்குமே போக்கு காட்டினார்.


இதையடுத்து, கடைசி முயற்சியாக, பிரதமர் மோடியே களத்தில் இறங்கினார். ஹரிவன்ஷுக்கு ஆதரவு கேட்டு, நவீன் பட்நாயக்கிடம் பேசினார். அடுத்த நிமிடமே, எதிர்க்கட்சிகளின் நிலைமை சரியத் துவங்கியது. திரிணமுல், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க., என, பல கட்சிகளின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், தங்களுக்கு பிடிக்காத காங்கிரசே சொந்த வேட்பாளரை நிறுத்தியதால், ஐக்கிய ஜனதா தள வேட்பாளரை ஆதரிக்க, பிஜு ஜனதா தளம் முடிவு செய்தது.


ஓட்டை :
முரண்டு பிடித்த சிவசேனா மற்றும் அகாலி தளம் கட்சிகளின் தலைமைகளுடன், பா.ஜ., தலைவர் அமித் ஷா, தொடர்ச்சியாக பேசி, அந்த கட்சிகளை தன் வழிக்கு கொண்டு வந்தார். எதிர்தரப்பிலோ, மூன்று, எம்.பி.,க்களை மட்டும் வைத்துள்ள, ஆம் ஆத்மி கட்சி, தங்களிடம், ராகுலே நேரடியாக ஆதரவு கேட்க வேண்டு மென எதிர்பார்த்தது. ஆனால், கடைசி வரை அது நடக்கவில்லை.


டில்லியின், ஆம் ஆத்மி, ஆந்திராவின், ஒய்.எஸ்.ஆர்., ஜம்மு - காஷ்மீரின், பி.டி.பி., ஆகிய கட்சிகளும், முதலில் ஆதரவு தருவ தாக கூறி விட்டு, கடைசி நேரத்தில், காங்கிரசின் காலை வாரி விட்டன. இவ்வாறு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் பல ஓட்டைகளை போட்டு, வெற்றிக்கான துருப்புச் சீட்டான பிஜு ஜனதா தளத்தை வளைத்ததால், 41 ஆண்டுகளுக்கு பின், ராஜ்யசபா துணைத் தலைவர் பதவியை, காங்கிரசிடமிருந்து, தே.ஜ., கூட்டணி தட்டிப் பறித்து உள்ளது.தேர்தல் துளிகள்:
தேர்தலில் வெற்றி பெற்ற ஹரிவன்ஷ் சிங்கை, சபை முன்னவர் அருண் ஜெட்லி, எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத், மத்திய அமைச்சர்கள் விஜய் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர், கைப்பிடித்து அழைத்துச் சென்று, அவரது இருக்கையில் அமரச் செய்தனர்

மொத்தம், 244 உறுப்பினர் உள்ள ராஜ்யசபாவில், வெற்றிக்கான இலக்கு, 123 ஆக இருந்தது. ஆனால் சில, எம்.பி.,க்கள் சபைக்கு வரவில்லை. சிலர், நடுநிலை வகித்தனர். இதனால், வெற்றிக்கான இலக்கு, 119 ஆக குறைந்தது

இருதரப்புமே, 100க்கும் மேலான ஓட்டுகளைப் பெற்று இருப்பதை வைத்துப் பேசிய எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர், 'நாங்களும் சதமடித்து உள்ளோம்' என, நகைச்சுவையாக கூறினர்

வாழ்த்துரை வழங்கும் போது, தமிழக, எம்.பி.,க்கள், திருச்சி சிவா மற்றும் டி.கே.ரங்கராஜன் ஆகியோர், சோகத்துடன் பேசினர்

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவால் ஏற்பட்ட சோகத்திலிருந்து மீள முடியாமல் வந்து, ஓட்டெடுப்பில் பங்கேற்பதாக, இருவரும் பேசினர்

கனிமொழியைத் தவிர, தி.மு.க.,வின் அனைத்து, எம்.பி.,க்களும் சபைக்கு வந்திருந்தனர். மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட அவர்களிடம், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவு குறித்து, மற்ற, எம்.பி.,க்கள் துக்கம் விசாரித்தனர்.

நம்பிக்கை நாயகன் : பிரதமர் பாராட்டு ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற, ஹரிவன்ஸ் நாராயண் சிங்கை அவரது இருக்கைக்கே சென்று, பிரதமர் நரேந்திர மோடி, கைகுலுக்கி வாழ்த்தினார். பின், பிரதமர் மோடி பேசியதாவது: 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் நினைவு நாள் இன்று. சோஷலிஸ்ட் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த மண்ணிலிருந்து வந்துள்ளார், ஹரிவன்ஸ் சிங். மிகப்பெரிய தலைவரான முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் தனி ஆலோசகராக இருந்தவர். தன் பதவியை முன்கூட்டியே ராஜினாமா செய்தவர் சந்திரசேகர். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்பதால், அவர் ராஜினாமா செய்யப் போகிறார் என்ற விபரம் ஹரிவன்ஸ் சிங்கிற்கு முன்கூட்டியே தெரியும். ஆனாலும், ஊடகங்களுக்கு கசியவிடவில்லை. தன் சொந்த பத்திரிகைக்கு கூட தெரிவிக்கவில்லை; அந்தளவு நம்பிக்கையானவர். இவ்வாறு அவர் பேசினார்.

- நமது டில்லி நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (24)

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  // ஒற்றுமைக்கு வேட்டு வைத்த பா.ஜ., // மக்களிடையே உள்ள ஒற்றுமையை குலைத்து, அவர்களை பிரித்து ஆட்டம் ஆடும் இவர்களால் எதிர்கட்சிகளை பிரிப்பதா கஷ்டம்.?

 • Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  எல்லா புகழும் இந்திராவிற்கே ஏனென்றால் , இந்திரா அவர்கள் எமெர்ஜென்சி அறிவித்து நாட்டின் சக தலைவர்களை சிறை நிரப்பவில்லை என்றால் நாடாளும் இன்றைய பாஜக உதயம் ஆகியிருக்காது. இந்தியாவை ஒட்டுமொத்தமாக ஊழலில் உறையவைத்த காங்கிரசுக்கு நிரந்தர நிறையின்மையை அளித்த மக்கள் நல பிரநிதிகள் அனைவருக்கும் அமீரக தமிழ் சமுதாயம் சார்பில் வாழ்த்துக்கள்.

 • Siva - Aruvankadu,இந்தியா

  மோடி ஜி அவர்கள் நீடூழி வாழ வேண்டும்.. இந்தியா பற்றி உலகம் புரிந்து கொள்ள வேண்டும்..... ஜெய்ஹிந்த்

 • ganapati sb - coimbatore,இந்தியா

  நேர்மையாளரான சந்திரசேகர் உடன் இருந்தததால் ஹரிவன்சும் நேர்மையாளராக இருப்பார் என நம்பிக்கையுடன் பாராட்டுவோம் பாராளுமன்ற தேர்தலிலும் வென்று மோடியின் நல்லாட்சி தொடரட்டும்

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  ராவுலுக்கு கட்டமும் சரி இல்லை...கூட இருக்கிற கூட்டமும் சரி இல்லை...

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  41 ஆண்டுகாலத்திற்கு பிறகான ஒரு வெற்றி. கரையான்புற்றின் கோட்டைகள், கொட்டைபாக்குகள் போல தகர்ந்து கொண்டு வருகிறது. ஜனாதிபதி, உப ஜனாதிபதி, சபாநாயகர், பிரதமர், ராஜ்ய சபா சபாநாயர் மற்றும் ராஜ்ய சபா துணை தலைவர், கவர்னர்கள் ,மாநில முதலமைச்சர்கள், என்று அனைத்தையும் ஒன்றன் மேல் ஒன்றாக வெற்றி கொடி நாட்டி வருகிறது பிஜேபி. அடுத்த முறை பதவிக்கு வரும்போது, நீதிமன்றத்திலும் மற்றும் அனைத்து துறைகளிலும் இருக்கின்ற கரையான்புற்றினால் நியமிக்கப்பட்டு இருக்கும் அனைத்து தீயசக்தி ஏஜெண்டுகளும் முழுவதுமாக அகற்றப்பட்டு இருப்பார்கள். அதற்க்கு பிறகே நல்லாட்சி என்பதின் முழு மாற்றமும் தெரியவரும். இன்னொரு ஐந்து வருடமும் பிஜேபி கட்சிக்கு வேண்டும்..நாட்டை ரிபேர் பார்த்து, overhaul செய்த பிறகு இந்தியா ராக்கெட் வேகம் தான். அடுத்த பதினைந்து ஆண்டுகளில் உலகின் ஐந்து வல்லரசுகளில் இந்தியா மூன்றாவதாக இருக்கும். அமெரிக்க, சீன, இந்தியா, ரஷியா, பிரிட்டன். என்று வரும். வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெரும். இதில் ஒரு தவறு நடந்து கரையான்புற்று ஆட்சி அதிகாரத்தில் வந்து விட்டாலும், இந்தியா ஐம்பது ஆண்டிற்கு பின்னோக்கி பயணிக்க துவங்கும். அதோடு இந்தியாவை காயலான் கடைக்கு போட வேண்டியது தான் வரும். மோடிபோன்ற இன்னொரு மனிதர் பிறக்க எத்தனை யுகமோ தெரியவில்லை. இந்தியா என்ற ஒரு நாடு அழிய துவங்கும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பிரித்தாண்டு வரும் வெற்றி வெற்றியே அல்ல...

 • tamil - coonoor,இந்தியா

  ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் அதை புத்திசாலி தனத்துடனும், ஆக்ரோஷத்துடனும், அர்ப்பணிப்புடனும் அணுகவேண்டும் அப்போது தான் வெற்றி வசப்படும், சும்மா அறிவித்ததோடு அமைதியாக இருக்க கூடாது, காங்கிரஸ் அதைத்தான் செய்தது, அந்த கட்சி மேலவை தேர்தலை அணுகிய விதம் மிகவும் சோம்பேறித்தனமாக இருந்தது,

 • Hari Raj - Kuala Lumpur,மலேஷியா

  இந்த நிகழ்வு 2019 பாராளுமன்ற தேர்தலுக்கான முடிவின் ஒரு முன்மாதிரி.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  போட்டி இல்லாது வெற்றி பெறுவது வெற்றியே இல்லை...

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  நவீன் பட்நாயக் ஓரளவு வலது சாரி சிந்தனை உடையவர். அவர் பாஜகவுக்கு எதிராக செயல்பட மாட்டார். மக்கள் அப்படி அல்ல. தங்கள் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்டவர்களை பழி வாங்காமல் விட மாட்டார்கள்.

 • Balaji - Bangalore,இந்தியா

  41 வருடத்திற்கு பிறகு காங்கிரஸ் அல்லாத ஒருவர் வருவது மோடி மற்றும் அமித் ஷாவின் ராஜா தந்திரம். 2019 மோடி ஆட்சிதான்.

 • rajan. - kerala,இந்தியா

  பப்பு அண்ட் கோ அவுட். இத்தாலிய பயணத்திற்கு வாழ்த்துக்கள்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  வரலாறு ? இப்போதிருக்கும் பெரும்பாலான முக்கிய எதிர்க்கட்சிகள் நேரு குடும்ப காங்கிரசை எதிர்க்கவென்றே துவக்கப்பட்டவை. அவற்றின் ஜீனில் காங்கிரஸ் எதிர்ப்பு உண்டு .பெரிய சக்தியாக பாஜக வளர்ந்துவிடக்கூடாது என்று அவை நினைத்தாலும் இப்போதைக்கு மோடிக்கு வலுவான மாற்று இல்லை என்பதை புரிந்துகொண்டதன் விளைவுதான் இது. (ஐக்கிய ஜனதா தளமும் பாஜகவின் நம்பத்தகுந்த நண்பனுமில்லை .எப்போது வேண்டுமானாலும் கைவிடும் )

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கூட்டமாக சேருபவர்கள் எல்லாம் எதிரிகள் என்று நினைக்கத்தோன்றவில்லை...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement