Advertisement

குற்றவாளிகள் அரசியலில் இருக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட் கருத்து

புதுடில்லி : 'அரசியலில் கிரிமினல்கள் இருக்கக் கூடாது; அதே சமயம், பார்லிமென்ட் அதிகாரத்தை பறிக்கும் வகையில், நீதிமன்றம் ஒருபோதும் செயல்படாது' என, உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவும், கிரிமினல் குற்ற வழக்குகளை சந்திக்கும் மக்கள் பிரதிநிதிகளின் பதவியை பறிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கோரியும், உச்ச நீதிமன்றத்தில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அரசியலில் உள்ள பெரும்பாலானோர், கிரிமினல் குற்ற வழக்குகளை சந்தித்து வருகின்றனர். கடந்த, 2014 லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில், 34 சதவீதம் பேர், கிரிமினல் குற்றப் பின்னணி உடையவர்களே.

கிரிமினல் குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள நபர்கள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். அதே போல், கொடும் குற்றங்கள் புரிந்த வழக்கில், குற்றச்சாட்டுக்கு ஆளான மக்கள் பிரதிநிதிகளின் பதவிகளை உடனடியாக பறிக்க வேண்டும். அரசியலில், கிரிமினல்கள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்து வரும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா
தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கூறியதாவது: அரசியலில் குற்றப் பின்னணி இருக்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும், நீதிமன்றத்திற்கு என ஒரு எல்லை உள்ளது. நாங்கள் சட்டத்தை உருவாக்குபவர்கள் அல்ல. பார்லிமென்டுக்குரிய அதிகாரத்தை மீறும் வகையில், நீதிமன்றம் ஒருபோதும் செயல்படக் கூடாது. இவ்வாறு அந்த அமர்வு கூறியது.

Advertisement
 

வாசகர் கருத்து (40)

 • a.thirumalai -

  இந்த நாட்டை வைத்து காமெடி கீமெடி பண்ணலேயே

 • Rajaai - Madurai,இந்தியா

  ஆக மொத்தம், அரசியல்வாதிகளே இருக்கக்கூடாதுங்குறீங்க.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  ஜனநாயகத்தின் ஒரு தூணாக நீதித்துறையைச் சொல்வார்கள் ..... குற்றவாளிகளை நிறுத்தாதீங்க .... ஆனா உங்களுக்கு அதைச் சட்டபூர்வமாகச் செய்யத் தடையில்லை -ன்னு சொல்ல எதுக்கு கோர்ட்டு ????

 • ருத்ரா -

  குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை .இதை அரசியலுக்கும் கடை பிடித்தால் ஜனநாயக நாடு என்று சொல்ல முடியுமா?மக்கள் நீதிமன்றத்தை கோயிலாக நினைக்கிறார்கள்.

 • RR Iyengar - Bangalore,இந்தியா

  அன்பளிப்பு வாங்கிக்கொண்டு தேசத்துரோக கட்சிகளுக்கு சாதகமா தீர்ப்பு சொல்லுறதும், சுமார் 3 வருஷமா மாசா மாசம் குற்றவாளியை (ப.சி) கைது செய்ய தடையை நீட்டிப்பதும் குற்றம் இல்லையா ஐயா

 • raja - Kanchipuram,இந்தியா

  குற்றவாளிகள் இல்லாமல் அரசியலா

 • rajan - kerala,இந்தியா

  34 % கிரிமினல்ஸ் இந்த ஜனநாயகத்தை மக்கள் பிரதிநிதிகள் எனும் போர்வையில் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பெரும்பான்மை பெற்றால் நாட்டின் இறையாண்மை முதல் நீதித்துவம் வரை மெஜாரிட்டி எனும் ஜனநாயக கோட்பாடு படி இந்த நாடு எந்த வகையான இக்கட்டை சந்திக்கும் என்பதை தீவிரமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் மைலார்ட். இதற்கு மக்களால் ஓட்டுரிமை வைத்து போராட முட்டுக்கட்டையாய் இப்பவே பணமும் 20 ருபிஸ் டோக்கன் கலாச்சாரமும் தேர்தல் ஆணையம் ராணுவ பாதுகாப்போடு திருமங்கலமாய் அரங்கேறும் கால கட்டம் விரைவில் பெரும்பான்மையை சாதிக்கும் போது நீதிமன்றங்களின் நீதி பரிபாலனம் என்னவாகும் மைலார்ட். மக்கள் யாரிடம் போய் முறையிட வேண்டும் மைலார்ட். இந்த பிரச்சினையின் அத்தன் மூலமும் ROOT CAUSE முற்றும் அறிந்த நீங்கள் இந்த விஷயத்தில் தீர்வு காண என்ன பங்களிப்பு ? பாராளுமன்றத்தில் இந்த கிரிமினல்ஸ் பெரும்பான்மை அடைந்து விட்டால் அவர்களுக்கு எதிரான எந்த ஒரு மசோதாவையும் நிறைவேற்றாமல் அவர்களுக்கு தேவையான ஒரு மசோதாவை நிறைவேற்றினால் அதில் நீதிமன்றம் தலைடாதா மைலார்ட். நிலைமை மோசமாகும் முன் ஜனநாயகம் நாட்டின் இறையாண்மை பாதுகாக்கும் வகையில் இந்த உச்ச நீதிமன்றம் செயல் படவேண்டும் எனும் வேண்டுகோளை கனம் கோர்ட்டார் முன்பு பணிவுடன் சமர்ப்பிக்கிறேன் மைலார்ட். வடிவேலா இப்படியே போனால் அந்த கிருஷ்ணகிரியே கிழிஞ்சுடும் போல தெரியுதே.

 • Tamil Hindu - Chennai ,இந்தியா

  ஆட்சிக்கு வந்தா கணக்குலே 15 லட்சம் போடுறேன்னு // இலவச தமிழன் . நீங்க பிஜேபிக்கு vote போட்டீங்களா. Tamil nadu இலவச ஆட்டுக்காக ADMKவுக்கு 2014 lok Sabha election இல் vote போட்டோம் . ADMK ஆடு இன்னும் வரலே , இப்படி இருக்க நாம் வோட் போடாத பிஜேபி கிட்ட ₹ 15 லட்சம் கேக்கறதுக்கு வெக்கமா இல்லை . இதுலே வேற RK நகர் இடை தேர்தலில் பிஜேபி NOTA க்கு கிழே vote என்று கூப்பாடு வேறே . 70 வருஷமா ஊழல் செய்த வாரிசு வியாதி vote வங்கி KhanCross கட்சி ஆளு போல .

 • Meenu - Chennai,இந்தியா

  எல்லா அரைசியல்வாதிகளும் கணக்கில்லா சொத்து சேர்த்து வச்சிருக்காங்க. அதெல்லாம் உழைத்து சம்பாதிச்சதா? அப்படி செய்ததே குற்றம். அவர்கள் மத்தியிலும் மாநிலங்களிலும் அரசை நடத்துகின்றனர். இதெல்லாம் நீதிமன்றத்துக்கு தெரியாதா? அப்படி பார்த்தால் அரசியல்வாதிகள் எல்லோரும் குற்றவாளிகள் தான். மாட்டாம இருக்கும் அரசியவாதிகள் தான் நிறையபேர் இருக்கின்றனர் மை லார்ட்.

 • tamil - coonoor,இந்தியா

  இந்த விழிப்புணர்வு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஏற்பட வேண்டும், அனைத்தையும் நீதிமன்றமே முடிவு செய்யமுடியாது, அது எதிர்பார்க்கும் அளவுக்கு பலனும் கொடுக்காது,

 • Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா

  நீதிமன்றத்திற்கு என ஒரு எல்லை உள்ளது. நாங்கள் சட்டத்தை உருவாக்குபவர்கள் அல்ல. பார்லிமென்டுக்குரிய அதிகாரத்தை மீறும் வகையில், நீதிமன்றம் ஒருபோதும் செயல்படக் கூடாது. இவ்வாறு அந்த அமர்வு கூறியது.உண்மை என்றல் மத்திய அரசு சட்டம் இயற்றியதே தவறு நடப்பவர்களுக்கு குற்றவியல் சட்டம் உள்ளதை ஏன் சரியாக கையாளவில்லை கால்தீற்கேற்ப குற்றவியல் சட்டத்தை மாற்றும் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டியது தானே லேண்ட் க்ராப்பிங், அட்வெர்ஸ் போஸ்ஸஸ்ஸின் , ட்ரேஸ்ஸ்பெஸ் , போலி ஆவணங்கள் வசகுகள் குற்றவியல் வசகுகள் மேலும் இந்த இடத்திற்கு மின் இணைப்பு, குடி நீர், வீடு வரி ஆகியவைகளை எப்படி அதிகாரிகள் சொத்தின் உரிமையாளர்/அரசு இடங்களுக்கு கொடுத்தனர் எந்த வித சொத்து ஆவணங்கள் இன்றி கொடுத்தனர் என்று எந்த வசகிலாவது நீதிமன்றம் இதில் சிவில் வசக்கு இல்லை குற்றவியல் வசக்கு என்று அறிவுறுத்தி உள்ளதா மின் துறை சட்டத்தில் தெளிவாக அரசு/தனியார் இடத்தில மின் இணைப்பு law ful அசுபன்ட் ஒன்லி can get connection என்று உள்ளதை இந்த நீதிமன்றம் ஏன் கருத்தில் கொள்ளவில்லை சட்டம் இயற்றியவர்கள் மின் துறையில் இன்டெம்நீட்டி பாண்ட் கொடுத்து பெருபவர் எதிர்ப்பு வரும் போஸுது இணைப்பை துண்டித்து கொள்கிறோம் என்பதினை செயல் படுத்த மறுக்கிறீர்கள் எந்த அடிப்படியில் அதே போல் லேண்ட் ரிலேட் வசகுகள் நீண்ட வருடமாக நடத்துகிறீர் ஒரே வாரத்தில் அதுவும் வில்லங்க தொடர்ச்சி பார்த்து உடனடியாக தீர்ப்பு வசங்களாம் அதையும் நீதிமன்றம் கீசமை நீதிமன்றத்திற்கு அறிவுறுத்ததலால் நாட்டில் வசகுகள் தேங்கி நிற்கின்றன இதுவரை உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் எதையும் கீசமை நீதிமன்றத்திற்கு நீதிபதிகளுக்கு தெரியும் படி வகுப்பு நடத்தி இருந்தால் வசகுகள் தேங்காது என்று நன்றாக தெரிந்தும் மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க முன் வர வில்லை அரசியல் சார்ந்த வசகுகளை முன் வந்து நடத்தும் தாங்கள் மக்களுக்கு கிடைக்கும் பொதுவான சட்டத்தை கிடைக்கும் படி சுய மோட்டோ படி விசாரணை செய்து இவ்வர்ண வசகுகள் நீதிமன்றத்திற்கு வர வேண்டும் வர கூடாது என்று பட்டியலிட்டு அதுவும் அரசு சார்ந்த வசகுகள் நீதிமன்றத்திற்கு வர கூடாது அது மாநிலத்தில் தன தேர்வு கண்ணனும் என்று வரையறுத்தலே நீதி மன்ற தீர்ப்புகள் விரைவில் மக்களுக்கு கிடைக்கும் இதுவரை மத்திய ராசு இயற்றிய சட்டத்தை இயற்றதா மாநிலத்திற்கு தலைமை செயலர் சட்ட செயலருக்கு நீதிமன்ற அவமதிப்புக்கு என்ன தண்டனை என்று வரையறுத்தல் தான் மக்களுக்கு நீதி கிடைக்கும் இதுவரை எந்த மாநில அரசுக்கும் நீதிமன்றம் அவமதிப்பிற்கு தண்டனை வசங்க வில்லை

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பார்லிமென்டுக்குரிய அதிகாரத்தை மீறும் வகையில், நீதிமன்றம் ஒருபோதும் செயல்படக் கூடாது...... சட்டம்பெருசா... குற்றவாளிகள் இருக்கும் சபை பெருசா....?

 • rajan - kerala,இந்தியா

  m

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அரசாங்கமே குற்றவாளிகளின் சங்கமம்...நேர்மையான அரசியல்வாதி இங்கே யாருமில்லை...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அப்போ யார் ஆட்சி நடத்தறது...

 • Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா

  முதலில் கட்சி நடத்துபவர்கள் தலைமை திருந்தனும் நன்றாக தெரியும் தவறு நடந்தால் அது கட்சிக்கு கெட்ட பெயர் என்று ஒட்டு வங்கிக்காக எல்லா கட்சியும் இதே போல் தவரான ஆட்களை உபயோக படுத்துகின்றனர் மேலும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றல் முதலில் கட்சிகள் 2 தடவை மேல் எந்த நபரும் தேர்தலில் நிற்க கூடாது என்று முதலில் சட்டத்தை மத்தியில் இயற்றனும் அப்போது தான் புதியவர்களுக்கு தேர்தலில் வழி பிறக்கும் மேலும் சீனியர் என்கிற அடிப்படையில் அவர்களுக்கு கட்சியானது கட்சியை வழி நடத்த பதவி கொடுத்து ஆலோசனை குழுவில் சேர்த்தால் மாற்றம் ஏற்படும் இந்தியாவில் இதுவரை வாரிசு அரசியல், நடத்தி மாநிலத்தில், மத்தியில் ஆட்சி கட்டிலில் தொடர்ந்து இருப்பதை கட்சி நபர்கள் கேள்வி கேட்கணும் எப்போஸுது மற்றவர்களுக்கு கிடைக்கும் என்று அரசாங்கம் இதற்கு நிரந்தர தீர்வு காணனும் குற்ற செயல் உள்ளவர்களி முதலில் கட்சிலிருந்து நீக்கணும்

 • Darmavan - Chennai,இந்தியா

  இந்த கொள்கை நீதிபதிகள் நியமனத்தில் /பதவி உயர்விலும் ஏன் இருக்க கூடாது. அதற்கு மாத்திரம் ஏன் கொலிஜியம்

 • ஆப்பு -

  ஆட்சிக்கு வந்தா கணக்குலே 15 லட்சம் போடுறேன்னு சொல்லிட்டு 5 வருஷமா ஏமாத்துறவங்க நல்லவங்களா, கெட்டவங்களா? கருத்து சொல்லுங்க எசமான்களே?

  • rajan - kerala

   u

  • madhavan rajan - trichy

   15 லட்சம் போடுறேன்னு யார் எழுதி கையெழுத்துப் போட்டு குடுத்திருக்காங்கன்னு காட்டுங்க உடனே கருத்து சொல்லிடலாம். தேர்தல் பிரச்சாரத்தில் சொல்றதெல்லாம் நிறைவேற்றவில்லை என்று நடவடிக்கை எடுத்தால், நேரு முதல் அனைத்து தலைவர்களும் தண்டனைக்குரியவர்கள்தான்.

  • Sitaramen Varadarajan - chennai

   குற்றவாளிகள் தமிழ்நாடு ஹை கோர்ட்டிலும் இருக்கக்கூடாது.

 • ஆப்பு -

  ஆமா...ஆட்சியில் இருப்பவர்கள் சொல்றபடிதான் தீர்ப்பு எழுதுவாங்க...அதில் மாற்றுக் கருத்து இல்லை.

  • Sitaramen Varadarajan - chennai

   ஆப்பு அவர்களே.....நீங்கள் சொல்வது போல் ஆவதென்றால்......ஆட்சியில் உள்ளவர்கள் சொல்படிதான் தீர்ப்பு எழுதுவார்கள் என்பது தவறு......... அய்யா.....186000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை மறந்து விட்டீர்களா...................எந்த ஆட்சியாளர்கள் சொன்னார்கள் விடுதலை செய்து வீடு....என்று......ஏதாவது உளறாதீர்கள்.......

 • siriyaar - avinashi,இந்தியா

  What about judges, even for hearing money needs to be paid.

 • Pannadai Pandian - wuxi,சீனா

  சுப்ரீம் கோர்ட் இத்தனை காலமும் கை கட்டி வாய் மூடி மவுனமாய் இருந்த காரணம் என்ன ???

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  நீதித்துறையில் கயவர்கள் அதிகம் இருப்பதால்தான் நீதி பரிபாலனத்தில் குறை இருக்கிறது... அதை நிவர்த்தி செய்தால் மற்றவை தானே சரியாகும்...

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   மிக மிகச் சரியான வார்த்தை. நீதித்துறையில் கயவர்கள் அதிகம் இருப்பதால் கயவர்கள் ஆட்சிக்கட்டிலில் ஆட்டம் போடுகிறார்கள். அன்றைக்கே போலி என்கவுண்டர்களுக்கு காரணமானவர்களை என்கவுண்டர் செய்திருந்தால் நாடு தப்பித்து இருக்கும்.

  • Darmavan - Chennai,இந்தியா

   அன்றைக்கே 3000 க்கும் மேற்பட்ட சீக்கியர்களை கொன்றவர்களை கொன்றிருந்தால் இந்த மாதிரி காங்கிரஸ் ஆதரவு நீதித்துறை வந்திருக்காது .நாடும் நன்றாக இருந்திருக்கும்,

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   \\\\ அன்றைக்கே போலி என்கவுண்டர்களுக்கு காரணமானவர்களை என்கவுண்டர் செய்திருந்தால் நாடு தப்பித்து இருக்கும்.... //// போலி என்கவுண்ட்டர் என்று சொல்வது காங்கிரசும், தேசவிரோதப் பச்சைகளும்தான் .....

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  இருப்பது பூராவும் குற்றவாளிகள்/கிரிமினல்கள். இதில், இது நல்ல காமெடிதான் போங்க.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  அப்போ சட்டத்தை மாற்றி எழுதுவார்கள். ஏற்கனவே யோகி ஆட்சியில் நடக்கிறது. சட்டத்தை மாற்றி எழுதி விட்டால் பாலியல் பலாத்காரம் பண்ணவன், கொலைகாரன், கொள்ளைக்காரன், தில்லுமுல்லு பண்ணவன், மதக்கலவரம் பண்ணி ரத்த ஆறு ஓடவிட்டவன் எல்லாருமே ராமராஜ்ஜியத்தில் புண்ணியவான் ஆகிவிடுவார்களே. . இல்லையென்றால் பேசாமல் கோர்ட்டை இழுத்து மூடியே விடுவார்கள்.

  • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

   ஐயோ உளறல் தாங்க இயலவில்லை. அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்குது....ராமர் பெயரை உச்சரிக்கக்கூட உனக்கு யோக்கியதை இருக்கா.. என்னய்யா சொல்ல வாறே....உனக்கே புரியாது.....உலகத்துக்கும் புரியாது. மதக்கலவரம் செய்தவன் கான் கிராஸ் மற்றும் கட்டுமர கும்பல் ....இது இந்த நாட்டில் உள்ள சாதாரண படிக்காத பாமரனுக்குக்கூட தெரியும். உங்களுக்கு என்ன ஆகி விட்டது நண்பரே......

 • Manian - Chennai,இந்தியா

  அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் (பவுதிக விதிப்படி உந்து சக்தி அதிமாகி) . ஆனால், கிரிமினல்கள் லஞ்சவாத்தி சொந்தங்களை களம் இறக்கும். எனவே, வரிகள் குடும்பங்கள், நண்பர்களையும் உள்ளே வர விடமுடியாக படி சட்டங்கள் எழுதப்படுமா? அதை எழுத தேசிய பாரு, அறிவு முதிர்ச்சி உள்ள வக்கீல்கள் இருக்கிறார்கள் என்பது சந்தேகமே . இருந்தாலும் இது ஒரு நல்ல ஆரம்பமே.

  • Pannadai Pandian - wuxi,சீனா

   கருணாநிதி சாவோடு இந்தியாவில் ஊழல் ஒழிந்து விட்டது.....

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   \\\\ கருணாநிதி சாவோடு இந்தியாவில் ஊழல் ஒழிந்து விட்டது........//// வழிகாட்டிதான் மறைத்துள்ளார் ....

  • Manian - Chennai,இந்தியா

   ஆனால் தொளபதி ஒருவேளை காண்டிராக்கெட்டு எடுத்து கொள்ளை அடிச்சா, அதை எப்படி ஹவாலா மூலம் பதுக்கருததுனு நைனா சொல்லி இருப்பாரு. பரமபரை குலத்தொழில் ரகசியம் மவனுக்கு இல்லாமல் இருக்குமா?

  • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

   திரு மணியன் அவர்களே...சரியாக எழுதினீர்.....பரம்பரை குலத்தொழில் ரகசியம் மவனுக்கு இல்லாமல் இருக்குமா?....என்று. ஊடகங்களில் மேடைகளில் ஆட்டம் போடுவதே அதற்காகத்தான்..இது அனைவரும் அறிந்த ரகசியம். வரும் தேர்தலில் இவர்களது சொத்தை அநாதை இல்லங்களுக்கு பிரித்து கொடுத்தால் மட்டுமே.......இவர்கள் டெபாசிட் வாங்குவார்கள். மக்கள் அவ்வளவு கோபமாக இருக்கிறார்கள். எதையும் மறந்து முட்டாள்தனமாக ஓட்டு போடுவார்கள். ஆனால் இந்த பரம்பரை செய்ததை மட்டும் யாரும் மறக்கவே மாட்டார்கள்.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  சட்டத்தை மீறி ஹெல்மட் போடாம டூ வீலர்ல போறவர்களும் குற்றவாளிகள்தானே ? அவங்களும் அரசியலில் இருக்கக்கூடாதா ?

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  சுப்ரிம் கோர்ட் இப்படியே தனது அதிகார எல்லைக்குள் இருந்தால், அரசியலில் நூறு சதவீதம் கிரிமினல்கள் விரைவில் எட்டிவிடுவார்கள். வாழ்த்துக்கள் தீபக் மிஸ்ரா. தொடரட்டும் தங்கள் சிறப்பான பணிகள்.

  • Manian - Chennai,இந்தியா

   இப்போ எனா வாஸ்ஸ்த்துதாம். 80 % லஞ்சம் கொடுக்கலாம்-வாங்கலாம் எனுக்குறானுக, 95 % எந்த தோழி திறமையும் இல்லாதவன். அப்போ நூரு சதவிகிதம் கிரிமினல்களாக இருக்க மாடானுகளா- 20 % நல்ல பயலுகளும் நமக்கேன்னுத்துக்கு வம்புன்னு ஒதுக்கிபுடிதானுகளே, அவனையும் சேத்தா நூறு சட்டம் வருமே சுப்ரீய்ம் ம் கோர்ட்டு எனா செய்ய முடியும்?.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement