Advertisement

'டவுட்' தனபாலு

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: 'திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், அ.ம.மு.க., வெற்றி பெறும்' என, தினகரன் கூறுவது, அவரது சொந்த கருத்து; அது, அவரது ஆசை. இடைத்தேர்தல் நடந்தால், தி.மு.க., வெற்றி பெறுவது உறுதி.


டவுட் தனபாலு: அது, தினகரனின் ஆசைன்னா, நீங்க சொல்றது மட்டும், என்னவாம்... இத்தனைக்கும் அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், வெற்றி பெற்றாரு... நீங்க ஆதரித்த, தி.மு.க.,வோ, மூன்றாவது இடத்துக்குத் தானே வந்தது... அதனாலதான், இந்த, 'டவுட்!'


----------


தமிழக, காங்., தலைவர் திருநாவுக்கரசர்: பார்லிமென்டில், ராகுல் அண்மையில் பேசிய பேச்சு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலமிக்க தலைவராக, அவர் உருவெடுத்துள்ளார்.


டவுட் தனபாலு: இவ்வளவு காலத்தில், இப்பத்தான், மக்களை ஈர்க்கும் வகையில், ராகுல் பேச ஆரம்பிச்சிருக்காருன்னு சொல்றீங்களா... ராகுலின் பேச்சைவிட, கட்டிப்பிடிப்பும், கண்ணடிப்பும், ரொம்பப் பரவலா பேசப்பட்டதே... அதைப்பத்தி ஏன், வாய் திறக்க மாட்டேங்குறீங்க என்பது தான், மக்களின், 'டவுட்'டாக இருக்கு...!


----------


தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு: அ.தி.மு.க.,வில், சாமானிய தொண்டர்கள் உயர் பதவிக்கு வரலாம். ஆனால், தி.மு.க.,வை எடுத்துக் கொண்டால், அங்கு வாரிசு அரசியல் தான் உள்ளது.


டவுட் தனபாலு: ஜெ., இருந்தவரைக்கும், நீங்க சொல்ற இந்தச் சாதனை, சாத்தியம்... அணிகள் இணைந்த பிறகும், வழிகாட்டும் குழுவை அமைக்க முடியாமல், நீங்க தவித்து வருவது, ஏன்னு தெரியுமே... ஜெ., இருந்திருந்தால், இந்நேரம், எத்தனை, எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களாக பதவி உயர்வு பெற்றிருப்பாங்க... அதுவே உங்களால முடியாத போது, சாமானிய தொண்டர்களுக்கு, கட்சி மற்றும் ஆட்சியில் உயர் பதவி கிடைக்கும்னு எப்படி நம்புறது என்பது தான், 'டவுட்'டாக இருக்கு...!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • PADMANABHAN R - Chennai,இந்தியா

    (தைரியமாக) தேர்தலில் நின்று மக்களை சந்தித்து வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணமே இல்லாத ஒரு கோழைத்தனமான அரசியல்வாதி வை கோ. தேர்தலில் நேரடியாக நிற்பதற்கே பயப்படும் இவர் ஜனநாயகத்தை பற்றி வாய்கிழிய கத்துவார். போன சட்டமன்ற தேர்தலில் தனது சொந்த தொகுதியிலேயே நிற்பதற்கு பயந்து தான் தேர்தலில் நின்றால் தி.மு.க. ரௌடிகள் மூலம் தொகுதியில் கலவரம் ஏற்படும் என்று கூறி தனது கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கூட சொல்லாமல் பயந்து ஓடியவர். இன்று தி.மு..க. வெற்றி பெரும் என கூறுகிறார். வெட்கக்கேடு.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    வைகோ ராஜதந்திர வேலை செய்யவில்லையென்றால் கலைஞர் இம்முறை முதல்வராகவே இறந்திருக்கலாம்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    தி மு க கூட்டணிக்குத் துண்டு போட்டுவிட்டார் வைகோ. இடைத்தேர்தலில் நம் கதி என்னாகுமோ என்று அவர்களே கவலையில்தான் இருக்கிறார்கள். இவர் டானிக் கொடுக்கிறாராக்கும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement