Advertisement

கறுப்பு பட்டியலில் நவாஸ் மகன்கள்

இஸ்லாமாபாத்: பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகன்கள் இருவரின் பெயர்களும் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன; அவர்கள், பாக்., பாஸ்போர்ட் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது உறவினர்கள் மீதான ஊழல் புகாரில், அவர்கள் மீதான குற்றம்நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து, நவாஸ் மற்றும் அவரது உறவினர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் வசிக்கும், நவாஸ் ஷெரீப்பின் மகன்கள், ஹசன் மற்றும் ஹுசைன் ஆகியோரை, தேடப்படும் குற்றவாளிகளாக, பாக்., அரசு அறிவித்துள்ளது.
அவர்களின் பெயர்களை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ள, பாக்., அரசு, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட்டுகளை முடக்குவதாக அறிவித்துள்ளது. இதனால், பாக்., பாஸ்போர்ட் மூலம், அவர்கள் வேறு நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement