Advertisement

டைனோசர்களின் நிறம் என்ன?

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அழிந்த, டைனோசர்கள் இனத்தைப் பற்றி அவற்றின் எலும்புகளை வைத்துத்தான் நமக்குத் தெரியவந்தது.
பூமிக்கடியில் புதையுண்டு, கல்லாகிப் போன எலும்புகளை மட்டும் வைத்து, 'பேலியன்டாலஜி' என்ற டைனோசர்களை ஆராய்யும் துறை உருவானது.
இப்போது, டைனோசர்களின் நிறத்தைப் பற்றியும் ஆராய்வது அவசியம் என, டைனோசர் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஏன்? விலங்குகளின் தோல் நிறம் தெரிந்தால் அவற்றின் பழக்க வழக்கங்கள், பரிணாம வளர்ச்சி உட்பட பலவற்றையும் துல்லியமாக அறிய முடியும்.
தோலின் நிறத்தை விலங்குகள் இனக் கவர்ச்சி, இரை தேடல், இரையாகாமல் தப்பித்தல், ஆதிக்கத்தை நிலை நாட்டுதல் போன்ற பல நடத்தைகளுக்கு பயன்படுத்துகின்றன.
டைனோசர்களும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். எனவே, பச்சை, கருப்பு, பழுப்பு போன்ற நிறங்களில், டைனோசர்களை வரைவது வெறும் ஊகம்தான் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    கிளிப்பச்சை.. எனக்கு தெரியும்.. நேரில் பார்த்திருக்கிறேன்.

  • இந்திய புலி - Tirunelveli,இந்தியா

    (தவறுகளைக் சுட்டிக்காட்டி காட்டியமைக்கு நன்றி. திருத்தம் செய்யப்பட்டு விட்டது)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement