Advertisement

போலீஸ் டைரி

டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி
சித்துார் மாவட்டம், புச்சிநாயுடுகண்டிகை அடுத்த, சத்தியகண்ணலி கிராமத்தில் இருந்து, செங்கல் மற்றும் சிமென்ட் ஏற்றி சென்ற, 'பவர்கெசன்' டிராக்டர், வரதய்யாபாளையம் சிறப்பு பொருளதார மண்டல தொழிற்பேட்டைக்கு,நேற்று காலை புறப்பட்டது.
நீர்பா கோட்டை அருகே, சாலை வளைவில்,ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து,டிராக்டர் கவிழ்ந்தது. இதில், டிராக்டரில் செங்கல் மீது உட்கார்ந்திருந்த கூலித் தொழிலாளி, கிருஷ்ணய்யா, 45, சம்பவ இடத்திலேயே இறந்தார்.வெங்கடேஷ்,35, வெங்கடய்யா,30,
நாகராஜ்,28,ஆகியோர் படுகாயமடைந்தனர்.
மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பலி
சித்துார் மாவட்டம், சந்திரகிரி அடுத்த, பல்லைய்யாகாரி பள்ளி கிராமத்தில், மூன்று அடுக்குமாடி கட்டட பணியில்,விஜயசேகர்,40, வேலை செய்தார். நேற்று,பணியின் போது,மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து,சம்பவ இடத்திலேயேஅவர் இறந்தார்.
இறந்த விஜயசேகர், ஏர்பேடு அடுத்த, செல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர். சந்திரகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாகனங்கள் பறிமுதல்
திருவாலங்காடு ஒன்றியம், நெமிலிபகுதி
கொற்றலை ஆற்றில் மணல் கடத்தல் நடக்கிறது.இதை வருவாய் துறையும், கனகம்மாசத்திரம் போலீசாரும் கண்டுகொள்வதில்லை.
இந்நிலையில் நேற்று, எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி உத்தரவின்படி, சிறப்பு பறக்கும் படை போலீஸ் எஸ்.ஐ., சுரேஷ் தலைமையில் போலீசார், நேற்று அதிகாலை,நெமிலி ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்த, பதிவெண் இல்லாத ஜே.சி.பி., இயந்திரம் மற்றும்அசோக் லைலேண்ட் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். அடிக்கல்பட்டைச் சேர்ந்த ஸ்ரீராமுலு என்பவரைதேடுகின்றனர்.
தந்தையை தாக்கிய மகன் கைது
ஆர்.கே.பேட்டை அடுத்த, கீழ்பந்திகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகன் சுந்தரராஜன். சொத்து தொடர்பாக, இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், சுந்தரராஜன், நரசிம்மனை தாக்கினார். இது குறித்து, நரசிம்மன் அளித்த புகாரின்படி, ஆர்.கே.பேட்டை போலீசார், சுந்தரராஜனை கைது செய்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement