Load Image
Advertisement

உளவுத்துறை எச்சரிக்கை: டில்லி போலீஸ் உஷார்

Delhi Police on high alert as intel warns of JeM Independence Day terror plot உளவுத்துறை எச்சரிக்கை: டில்லி போலீஸ் உஷார்
ADVERTISEMENT

புதுடில்லி: சுதந்திர தினத்தன்று டில்லியில் தாக்குதல் நடத்துவதற்காக பயங்கரவாதிகள்பதுங்கியுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.


கடந்த 2016 ல் காஷ்மீர் மாநிலம் நக்ரோட்டா பகுதியில், ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, சையத் முனீர் என்ற பயங்கரவாதியை தேசிய புலனாய்வு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவன், டில்லியில், சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்காக பயங்கரவாதிகள், எலெக்ட்ரீசியன், பிளம்பர் என மாறுவேடங்களில் டில்லியில் குறைந்த வாடகையில் வீடு எடுத்து தங்கியுள்ளதாக கூறினான்.

அவசர ஆலோசனை:




இதனையடுத்து, உளவுத்துறையினர் டில்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, டில்லி போலீஸ் கமிஷனர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. உயரதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், ராஜ்பாத் மற்றும் செங்கோட்டை செல்லும் வழியில் தீவிர சோதனை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.



வாசகர் கருத்து (5)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement