Advertisement

சீனாவுக்கு போகும், 'டெஸ்லா' தொழிற்சாலை!

அமெரிக்காவிலுள்ள, டெஸ்லா மோட்டார்சின் புதிய கார் தொழிற்சாலை, சீனாவின் வாகன மையமான, ஷாங்காய் நகரில் கட்டப்பட இருக்கிறது.
இதற்கான அறிவிப்பை, டெஸ்லாவின் உரிமையாளர், எலான் மஸ்க் அண்மையில் வெளியிட்டார்.
டெஸ்லா தொழிற்சாலையை உருவாக்க சகல உதவிகளையும் செய்யத் தயார் என, ஷாங்காய் நகராட்சித் தலைவர் உறுதியளித்திருக்கிறார்.
மின்சார கார்களை பரவலாக்குவதில் வெற்றி பெற்று வரும் டெஸ்லா மோட்டார்ஸ், அமெரிக்காவிலேயே பெரிய தொழிற்சாலைகளை அமைத்து, ஆடம்பர மின் கார்களையும், 'மாடல் 3' போன்ற நடுத்தர விலை மின் கார்களையும் தயாரித்து வருகிறது.
சீனாவில் டெஸ்லா மின் கார்களுக்கு ஏக கிராக்கி. ஆனால், அமெரிக்க அதிபர், சீன பொருட்கள் இறக்குமதிக்கு ஏகப்பட்ட வரிகளை விதிக்கவே, சீனாவும், அமெரிக்க பொருட்கள் இறக்குமதிக்கு நிறைய வரிகளை விதித்துள்ளது.
இதனால், டெஸ்லா வாகனங்களின் விலை, 25 சதவீத அளவுக்கு சீனாவில் உயரும் என்பதால், பேசாமல், சீனாவிலேயே கார்களை உற்பத்தி செய்யலாம் என, எலான் மஸ்க் முடிவெடுத்து விட்டார்.
அதுமட்டுமல்ல, சீனாவிலேயே, மின்சாரத்தில் ஓடும் லாரிகள், ஸ்போர்ட்ஸ் கார் போன்ற புதிய மாடல்களையும், சீனாவிலேயே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளார் மஸ்க். அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஷாங்காயில் உற்பத்தி துவங்கிவிடும்.
அப்போது, இந்திய மின்சார கார் பிரியர்கள், ஒரு டெஸ்லாவை வாங்க விரும்பினால், அது அவர்களுக்கு, 'மேட் இன் சீனா' முத்திரையுடன் தான் கிடைக்கும்.

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • sankar - london,யுனைடெட் கிங்டம்

    எலன் மஸ்க் எடுக்கும் ரிஸ்க் எனவே எண்ணுகிறேன் .... ஆம் சீனாவில் டெஸ்லா தயாரித்து வெளியாக்கும் முன்னர் .... லிஸ்ளா என ஒரு கரை தயாரித்து வெளியிட்டுவிடுவார்கள் சீனர்கள் ... தவிர இந்தியா தொழில்த்துறைக்கு தகுதி இல்லை குறிப்பாக தமிழகத்தில் இலவசமாக எது கிடைத்தாலும் சரி ... உழைப்புக்கு தலைவர்கள் தயாரில்லை ... உடனே எதிர்ப்பார்கள் ... திடீர் தமிழ் ?? காவலர்கள் தொல்லை வேறு ....

  • nicolethomson - bengalooru,இந்தியா

    இலான் மாஸ்க் நீங்க இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்து அதனை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யலாம், இல்லையா, ஸ்ரீலங்காவில் உற்பத்தி செய்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யுங்க,

    • jagan - Chennai,இந்தியா

      ஏன்? இந்தியா காப்பர் கூட இறக்குமதி செய்யும் நாடு....இந்தியாவில் உற்பத்தி செய்தால் அது சீன உற்பத்தியை விட ரெண்டு மடங்கு விலை ஆகவும்...மேலும் இந்தியர்கள் பொதுவாகவே தொழிலாதிபர்கள் பணம் சம்பாதித்தால் வயிறு எரியும் கேஸ் ...ஸ்டெர்லிட் மாதிரி கம்பெனியை மூட வச்சா? இந்தியா தொழில் செய்ய ஏற்ற நாடு அல்ல

  • senthil - chennai,இந்தியா

    இது மிகவும் கவனிக்கப்படவேண்டிய விஷயம் .....என் இந்திய இன்றுவரை முழு அளவில் மின்சார கார்களை உற்பத்தி செய்யும் விஷயத்தில் பின் தங்கி உள்ளது .....மரபு சாரா ஏறி சக்தி மூலம் ..நாம் அளப்பரிய மின் உற்பத்தி செய்ய வேண்டும்.. நீர் , சூரிய சக்தி. அலைகள் மூலம் .காற்றின் மூலம் கூட....அனல் அணு தவிர்த்து ....ஆனால் அரசாங்கத்திற்கு எதோ ஒரு தடங்கல் இருக்கிறது என்று தோன்றுகிறது ...என்னவென்று தெரியவில்லை .....நாம் அனைவரும் மின் வண்டி பயணம் செய்ய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்

    • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

      வளை குடா நாடுகளின் அழுத்தமாக கூட இருக்கலாம்.

    • sankar - trichy,இந்தியா

      எலான் மாஸ்க்குக்கு வியாபாரம் வேண்டுமென்றால் இந்தவுக்கும் வருவான் வெயிட் & சி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement