Advertisement

மீனில் கலப்படம்... அபாயத்தின் அறிகுறி!

இதுவரை இல்லாத விஷயமாக மீனில், 'பார்மாலின்' என்ற வேதிப்பொருள் கலப்புத் தகவல், அசைவ உணவு விரும்புவர்களுக்கு அதிருப்தியைத் தரும்.பொதுவாக நாட்டில் காய்கறி, பழங்கள் மட்டும் அல்ல, இளைஞர்களிடம் அசைவ உணவு சாப்பிடும் வழக்கம் அதிகரித்திருக்கிறது.
இதற்கு பொருளாதார வசதி மற்றும் உணவில் பல தரப்பட்ட சிறப்பு தயாரிப்புகள் என்ற தகவல்கள், அவர்களை அதிகம் அதன்பால் ஈர்ப்பது நியாயமே.உடனே, தமிழர்கள், கம்பராமாயணத்தில், 'திருத்திய மீனை குகன், ராமபிரானுக்கு தரவில்லைா?' எனலாம். நல்லவேளையாக திருத்திய மீன் என்ற வார்த்தை அதை உணவாக்கிய விதம் மட்டும் இன்றி, அதன் வளர்ச்சியில், எவ்வித நச்சும் சேராமல், சிறப்பாக பாதுகாக்கப்பட்டது என்று இன்று விளக்க முடியும்.
நமது நாட்டில் தமிழகம், கேரளா மற்றும் கடலோர மாவட்டங்களிலும், ஆறுகளிலும், குளங்களில் பிடித்து விற்பனையாகும் மீன்கள் அளவு அதிகம். இறைச்சி சாப்பிடுவதைவிட, மீன் உணவு இதய நோய் பாதிப்பைத் தடுக்கிறது. இதில் இறால், நண்டு போன்ற மற்றவை இடம் பெறாது.
இவை எல்லாம் அறிந்த மக்கள் இன்று, 'பார்மாலின்' என்ற வேதிப்பொருள் கலப்பால், அது கெடாமல் பாதுகாப்பாக விற்பனைக்கு வைக்கப்படுகிறது என்ற புகார் உள்ளது. மேலும் சில பகுதிகளில், பிளீச்சிங் பவுடர் ெதளித்தும், அது விற்பனைக்கு தயாராகிறது என்ற வாதம் அதிர்ச்சி தருகிறது. மீன்களைப் பிடித்ததும், உடனடி விற்பனை செய்வது வேறு விஷயம். அதை, 20 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் காப்பாற்றி வைத்து இருந்தால், சரியான அளவு சந்தைக்கு அது சென்று முறையான லாபத்தை தரும். 'பார்மாலின்' என்ற, 'பார்மால்டிஹைடு' இறந்தவர்களின் சடலங்களை அழுகாமல் காக்க உதவும் வேதிப்பொருள்; உணவில் கலப்பது நச்சாகும்.
தமிழகத்தின் தேவையை விட, 30 சதவீதம் மீன் குறைவாகவே பிடிபடுவதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருக்கிறார். இவர் இத்துறை மட்டும் அல்ல, மீன்பிடி தொழிலில் நிறைய அனுபவம் கொண்டவர். மீன்வள பல்கலைக் கழகம், பார்மாலின் சோதனைகளை எளிதாக நடத்த வழிகளை காட்டி, அச்சோதனை களை செய்ய முற்பட்ட செயல், தொடர வேண்டும். பார்மாலின் கலப்பு மீன்கள், ஒடிசாவில் இருந்து தமிழக சந்தைக்கும் வருகின்றன. 'இனி, பார்மாலின் கலப்பு மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அதை விற்றவர் மீது உணவுப் பாதுகாப்பு சட்டம் பாயப் போகிறது' என்கிறது தமிழக அரசு.
எப்படி மாங்காய் விரைவில் மாம்பழமாக, 'கார்பைடு கல்' உதவுகிறதோ, அதுபோல, இதிலும் ரசாயன கலப்பு வந்துவிட்டது. கோவா முதல்வர் பரிக்கர், தன் மாநிலத்தில் இந்த நச்சு கலந்த
மீன் தடுக்கப்படும் என்றும், மீன் உணவின்றி பலரும் வாழ முடியாது என்று கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
விவசாயத்திற்கு அடுத்தது மீன்வளத் தொழில்; இதில் ஏற்றுமதி ஊக்குவிப்பும் உண்டு.
தென்கொரியாவுக்கு சிறந்த மீன்கள் ஏற்றுமதியாகும் முடிவு வந்த நேரத்தில், இப்படி ஒரு புகார் வந்து விட்டது. ஏற்கனவே மழைக்காலத்தில், சிறிய கிராமத்தில் உள்ள குளங்களில் கிடைக்கும் மீன்களை உணவாக உண்பவர் சிலர், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு, சில நுாறு ரூபாய்களை மருத்துவ செலவிற்காக தருவது உண்டு. அதே சமயம், தென் மாவட்ட மீனவர்கள் தொழிலில் அடைந்த பிரச்னைகள், இலங்கையில் மீன் பிடிக்கச் சென்ற போது ஏற்பட்ட அவலங்களை மத்திய அரசு நன்றாக கையாண்டது. இன்று நேற்றல்ல, மீனவர்கள் கொண்டு வரும் மீன்களை ஏலம் விடுவது அல்லது அவர்கள் சார்ந்த பிரச்னைகளை கையாள அங்குள்ள சில அமைப்புகள், இன்று இந்த விஷயத்திலும் அக்கறை காட்ட வேண்டும்.
அந்த அமைப்புகளுக்கு பின்புலமாக உள்ள தன்னார்வ தொண்டு சார்ந்த, கிறிஸ்துவ பாதிரியார்களும், உணவு கலப்பட சம்பந்தப்பட்டது என்பதை வலியுறுத்தி, அவற்றை தடுக்க உதவ வேண்டும். மீனவ கிராமங்களை நிர்வகிக்க, தனி பஞ்சாயத்துகளாக அறிவிக்க வேண்டும் என்ற அளவுக்கு முன்னேற்றம் வரும் வேளையில், இப்புகார், அத்தொழிலை முடக்கும் அபாயமாகும்.
இதே மாதிரி பார்மாலின் என்ற வேதிப்பொருள் கலப்பு, பிளீச்சிங் பவுடர் இல்லாத சிறந்த மீன்களை விற்பனை செய்ய, அவர்கள் முன்வரும் போது, அத்தொழில் பாதுகாக்கப்படும். அதைச் சீர் செய்ய, தமிழக அரசு அவசரமாக எத்தனை நடவடிக்கை எடுத்தாலும் நல்லதே.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement