Advertisement

காதலிக்க நேரமில்லை : உருகும் உபாசனா

கவிதை பாடும் கண்கள். காதல் ரசம் பேசும் செவ்வாய். இசைபோல் ஒலிக்கும் குரல். நாணத்தில் சிவக்கும் முகம். நவரசம் பொங்கும் நடிப்பு. நர்த்தனம் புரியும் இடுப்பு என இந்திரலோக சந்திர பிம்பமோ என...இளைஞர்களுக்கு உற்சாகம் தரும் பெண்தான் உபாசனா. தினமலர் வாசகர்களுக்காக பேசியது :


* அறிமுகம்
பிறந்தது குஜராத், படித்தது கர்நாடகா மாநிலம் பெங்களூரு. சாப்ட்வேர் இன்ஜினியர், வேலை ,நடிப்பு எல்லாமே இப்போ தமிழகத்துல தான்.


* சினிமா
நான் ஒரு நடன கலைஞர். கல்லூரியில் படிக்கும் போது மாடலிங் பண்ணிட்டு இருந்தேன். 2015 ல் 'எலைட் மிஸ் இந்தியா ஆசியா' பட்டத்திற்கு சொந்தக்காரி. அதன் மூலமாக கன்னடம், தமிழ் படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.


* நடித்தது
கன்னத்தில்ஆர்.ஜி.வி., தம்புரி-2, கலர்ஸ் இன் பெங்களூரு, தமிழில் 88, கருத்துக்களை பதிவு செய், பிரம்மா.காம், டிராபிக் ராமசாமி, நிறைய விளம்பர படங்களிலும் நடித்துள்ளேன்.


* கிசுகிசு
காதலிப்பது தப்பில்ல. படிக்கும் போதும், இப்பவும் எனக்கு நிறைய காதல் கடிதங்கள், அழைப்புகள் வந்தன. ஆனா, அதற்கெல்லாம் எனக்கு நேரம் இல்லீங்க. நிஜத்தில் என்னைப் பற்றி 'கிசுகிசு' எதுவுமில்லை.


* 'டிராபிக்' ராமசாமி
சமூக அக்கறை உடைய போராளியை பற்றிய கதை. டிராபிக் ராமசாமியை நேரில் பார்த்து அசந்து போனேன். அந்த படத்தில் நானும் நடித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். டிராபிக் ராமசாமி கேரக்டரில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்ந்துள்ளார். இதுபோன்ற சமூக அக்கறை உள்ள படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்.


* தமிழ்
தமிழ் மொழியும், மக்களும் எனக்கு இஷ்டமானவர்கள். ஆரம்பத்தில் தமிழில் பேசி பழகுவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. இப்போ தமிழ் கொஞ்சம், கன்னடம் கொஞ்சம்னு பேசுவேன்.


* பொழுதுபோக்கு
நான் ஸ்கேட்டில் வீரர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஸ்கேட்டிங், தூக்கம் தான். இது இல்லேன்னா சமையல் பண்ணுவேன். மட்டன், சிக்கன் எல்லாம் நல்லா சமைப்பேன். ஆனா, ரொம்ப பிடிச்சது பேப்பர் ரோஸ்ட் தோசை தான்.


* பிடித்தது
பிடித்த கேரக்டர் இதுதான் என எதுவுமில்லை. மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் கேரக்டராக சினிமாவில் ஒரு ரவுண்டு வர விரும்புகிறேன்.


* கனவு
எனக்கு ஊர் சுற்றுவது பிடிக்கும். இந்தியா முழுவதம் ஓர் ரவுண்டு போயிட்டு வந்துட்டேன். அடுத்தது வெளிநாடு தான். இளைஞர்களுக்கும், மக்களுக்கும் பிடித்த ஹீரோயினா இருக்கணும்.

இவரை வாழ்த்த upasana2K5gmail.com
Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement