Advertisement

எனக்கு கிளாமர் பிடிக்காது : மனசோடு மதுமிதா

ஆசை நூறு, வாழ்க்கை, பிறவி-2, ரூட் ஆகிய சினிமாக்களின் கதாநாயகி மதுமிதாவின் மனம்திறந்த பேட்டி :

* நீங்கள்
சொந்த ஊர் புதுக்கோட்டை. பிழைப்புக்காக சென்னை வேளச்சேரியில் குடியமர்ந்தோம்.அப்பா பிசினஸ்மேன். அம்மா இல்லத்தரசி. எனது வளர்ப்பு, பி.காம்., படிப்பு எல்லாமே சென்னைதான்.


* சினிமாவில்
சென்னையில் ஆடியோ விஷன் 2017 க்கு நேர்முகத்தேர்வு நடத்தினார்கள். அதில் தேர்வானேன். மாடலிங்க்கில் பல பரிசுகள் பெற்றுள்ளேன். பல பேன்சி டிரஸ் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளேன். இதன் மூலம் சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது.


* 'டிவி' எப்படி
குலதெய்வம் தொடரில் வடிவுக்கரசிக்கு பேத்தியாக நடித்தேன். கடல் கடந்த உத்யோகம் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளேன்.


* நடிப்பு ஆசை
விஜயகாந்த் ரசிகை நான். அவருடன் நடிக்க ஆசைப்பட்டேன். அது முடியாமல் போனதால், அவரது மகன் சண்முகப்பாண்டியுடன் நடிக்க உள்ளேன். தந்தையுடன் முடியாதது, தனயனுடன் முடிகிறது. இதுவும் மகிழ்ச்சிதான்.


* மேக்அப் குறித்து
மேக்-அப் இல்லாத உடலும், வாழ்க்கையும்தான் எனக்கு பிடிக்கும். இயற்கை அழகை ரசிப்பேன். கேமராவுக்காக சில நேரங்களில் 'மேக் அப்' தேவைப்படும். அது தொழில் அல்லவா?


* முன்னணி நடிகர்கள்
ரஜினியின் மகளாக நடிக்க ஆசை. வேறு நடிகர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அதே நேரம் வாய்ப்பு கிடைத்தால் விடுவதாகவும் இல்லை.


* பொழுது போக்கு
ஏ.ஆர்.ரஹ்மான் இசை மிகவும் பிடிக்கும். அவர் இசைத்த தேசிய கீதம் பாடல் ரெம்பவே பிடிக்கும்.


* நடனம் தெரியுமா
சிறுவயதில் இருந்தே நடனங்கள் கற்றேன். நடனம் ஒரு உடல்பயிற்சிதான். டென்னிஸ்சும் விளையாடுவேன், என்றார்.


* கிளாமர் பற்றி...
கிளமார் எனக்கு பிடிக்காது. குடும்ப பாங்காக நடிப்பதில்தான் ஆர்வம் அதிகம்.


* சினிமா, 'டிவி' வித்தியாசம்
சினிமாவில் ஒரு கதையைதான் மட்டும் சொல்ல முடியும். ஆனால் சீரியலில் 10 ஆண்டுகள் கூட கதையை நீட்டிக்க முடியும். தினமும் பல புதிர்களை கொடுக்க முடியும்.


* பிடித்த கேரக்டர்
நான் பாசிடிவ் சிந்தனையுடன் உள்ளவள். 'நெகட்டிவ்' ரோலில் நடிக்க ஆசைப்பட மாட்டேன்.


* பெண்கள் பற்றி
எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி, முத்திரை பதிக்கின்றனர். தடைகளை உடைத்து வருகின்றனர். பெண்கள் விளம்பரங்களை கண்டு ஏமாறக் கூடாது.


* ரோல் மாடல்
நடிகர் நஸ்ரியா, விஜய்சேதுபதி நடிப்பு பிடிக்கும். அவர்களையே ரோல் மாடலாகவும்
ஏற்றுள்ளேன்.


* பிடித்த உணவு
சைவம்தான் அதிகம் பிடிக்கும்.

actrssmadhumithagmail.comல் தொடர்பு கொள்ளலாம்.
Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement