Advertisement

மேட்டூர் அணை 75 அடியை எட்டியது

சேலம் : கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

124 முழு கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியை எட்டி உள்ளது. இன்று காலை நேர நிலவரப்படி, அணைக்கு வரும் நீரின் அளவு 37,000 கனஅடியில் இருந்து 38,916 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 75.36 அடியாகவும், நீர் இருப்பு 37.48 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதே நிலை நீடித்தால் விரைவில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • kannan rajagopalan - Chennai,இந்தியா

  கலைஞர் ,ஸ்டாலின் அண்ணண் ஏன் இன்னும் சொந்த செலவில் விழா எடுத்துக்கொள்ளவில்லை ? இயற்கை அடி பணிந்தது . தமிழன் துயர் தீர்ந்தது.

 • Ramachandran Madambakkam - Chennai,இந்தியா

  வெற்று போராட்டம் நடத்தும் லெட்டர் பெட் கட்சிகள் இது போன்ற நல்ல சில காரியங்கள் பண்ணினால் சில ஓட்டுகள் அதிகம் கிடைக்கும்.

 • Chandran - namakkal,இந்தியா

  தண்ணீரை இப்போதாவது திறந்துவிடாமல் இருந்தால் கடைசில தண்ணீர் கடலுக்குத்தான் போகும்

 • kulandhaiKannan -

  எல்லாம் சரி. மேட்டூர், பவானி அணைகள் திறப்பு எப்போது? நாம் மட்டும் தேக்கிக் கொண்டே இருந்தால் அய்யாக்கண்ணு விவசாயம் செய்வது எப்படி?

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  75 அடியை இயற்க்கை கொடுத்தாலும்,தூர் வாரியிருந்தால் அவ்வளவு கொள்ளளவு இருந்திருக்கும், மக்களுக்காக இயற்கையோ அல்லது இறைவனோ கொடுத்தாலும் செயற்கையாக அவற்றை.... வாழ்க வேந்தனின் கொற்றம், வந்தே மாதரம்

  • venkat - ngr,இந்தியா

   தண்ணீரில் சாயப்பட்டறை கழிவு, கழிவு நீர் கழிவு இல்லாமல் மக்களுக்கு கிடைப்பது எப்போது?

  • Jaya Ram - madurai,இந்தியா

   நல்ல செய்திதான் ஆனால் யாரை குற்றம் சொல்வது அணை கட்டியதில் இருந்து ஒவ்வொரு பத்தாண்டும் தூர்வாரப்பட்டு இருந்தால் இப்போதைய நிலைமை ஏற்பட்டிருக்காது காரணம் அதிகாரவர்க்கம் தான் அணை கட்டியது பிரிட்டிஷ் அரசு அதன் பின் 20 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர் காங்கிரெஸ்ஸார், அதன் பின்னர் கலைஞர் எம்ஜிஆர் என பலர் ஆண்டு வந்துள்ளனர் என்ன காரணம் இதை தூர்வார வேண்டும் எண்ணம் அவர்களுக்கு ஏற்படவில்லையா, அல்லது அதற்க்கு ஏதேனும் தடை உள்ளதா? இல்லை அதற்கான செலவழிக்க கூடிய பணம் அரசிடம் இல்லையா? ஒன்றும் புரியவில்லை இலவசம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள் இந்த அணையினால் பயன்பெறுபவர்கள் அனைவரும் சேர்ந்து நாங்கள் இந்த அணையினை இலவசமாகவே தூர்வாரி தருகிறோம் எங்களுக்கு உணவுமட்டும் கொடுங்கள் என்று கிளம்பியிருக்கலாம் அதற்க்கு அவர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது, அரசியல் கட்சிகள்,ஆளும்கட்சிகள் இந்த 70 ஆண்டுகளாக சாதிக்காததை இவர்கள் சாதிக்கலாம் அப்படியும் ஆட்சியாளர்கள் மறுத்தால் பொதுநல வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்றிருக்கலாம் ஆனால் அதை எல்லாம் செய்யாமல் ரோட்டினை மறித்து, ரயில் மறித்து,தற்கொலை செய்து தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தார்கள் இனிமேல் அணையில் நிரந்தரமாக நீர் இருக்கும் இனி எப்படி தூர்வார முடியும் தும்பை விட்டு வாலை பிடித்த கதை தான் தமிழன் கதை என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது இப்போதுள்ள அரசாங்கமோ வழுவில்லாதது எனவே அது எதை செய்தாலும் எதிர்க்கும் ஒரு கூட்டமும் அனுமதிமறுக்கும் கூட்டமும் உள்ளது எனவே தமிழா நீ உன் தேவைகளை களமிறங்கி பூர்த்தி செய்யாவிட்டால் எவனும் பூர்த்திசெய்யமாட்டான் அரசியல்வாதிகள் அனைவரும் சுயநல வாதிகளே

  • Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா

   75 அடி என்று சந்தோசப்படாதீர்கள். அதில் 25 அடிக்கு சேறும் சகதியும்தான் இருக்கும். பல வெளி நாடுகளில் ஆறுகளில் தண்ணீர் ஓடும்போதே தூர் வாருகிறார்கள். தண்ணீர் kuraivaaga ஓடும்போது, அணையின் ஹை வாட்டர் பகுதியில் ஆற்றை இரண்டாக பிரித்து, மடை மாற்றி முதலில் ஒரு பகுதியிலும் பிறகு அடுத்த பகுதியிலும் தூர் வருகிறார்கள். இங்கு ,ஹும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement