Advertisement

பறவை முட்டை உடைப்பு :5-வயது சிறுமிக்கு நூதன தண்டனை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பறவை முட்டையை உடைத்த 5 வயது சிறுமிக்கு கிராமத்தார் வீட்டிற்குள் நுழைய தடை விதித்து விநோத தண்டனை வழங்கி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் முதல்வராக வசுந்தரராஜே இருந்துவருகிறார். மாநிலத்தில் புண்டி மாவட்டத்தில் உள்ளது ஹரிபுரா கிராமம் . இந்த கிராமத்ததை சேர்ந்த தலித் சமூகத்தை சேர்ந்த 5வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட பறவை இனம் ஒன்று மழை கால துவக்கத்தை அறிவிப்பதாக அக்கிராமத்தினரால் நம்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2-ம் தேதி அச்சிறுமி அந்த குறிப்பிட்ட பறவையின் முட்டை சிலவற்றை நொறுக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்துவதற்காக கிராமத்தினர் அனைவரும் ஒன்று கூடினர். விசாரணையின் முடிவில் அச்சிறுமி தன்னுடைய வீட்டிற்குள் நுழைய தடை விதித்தனர். இது குறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளா். இதன்பின்னரே இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் மான் சதுர்வேதியை விசாரணை நடத்த உத்தரவிட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் கிராமத்தினர் அளித்த தண்டனை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காதது கவலை தருகிறது. எனவும் சிறுமியின் குடும்பத்தினர் எந்த ஒரு பிரச்னையையும் சந்திக்கவில்லை எனவும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறி உள்ளார்.
இது குறித்து போலீசார் கூறுகையில் விவகாரம் தொடர்பாக 10 பேர்கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் வரும் 19-ம் தேதி இது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் படி மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

Advertisement
 

வாசகர் கருத்து (16)

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  ம்ம்ம் .....

 • ஸாயிப்ரியா -

  முட்டையில் கோடிகணக்கில் ஆம்லெட் போட்டவர்கள் தெரிந்தே தவறு செய்தவர்கள்? தெரியாமல் புரியாமல் தவறு செய்த பாப்பா.நியாயமே இல்லை.

 • மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா

  நான் மட்டும் அந்த கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்திருந்தால் பாவங்களை போக்கும் பாவிகளிடம் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்று தீர்ப்பு சொல்லி இருப்பேன்

 • Madan - Chennai

  வட நாட்டு மக்கள் பலர் இன்னும் கற்காலத்திலேயே உள்ளனர் இதில் வடநாட்டு முட்டாள் தலைவர்கள் சிலருக்கு தென்னாட்டை கட்டி ஆளவேண்டும் என்கிற ஆசை வேறு

  • nandaindia - Vadodara

   தென்னாட்டு புகழ் பெற்ற திருட்டு தலைவர்கள் பலருக்கு பிரதமராகும் ஆசை இருந்ததில்லையா, இல்லை அதற்கான காய்களை நகர்த்தியது இல்லையா? அது போல தான் இதுவும்.

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  இன்னமும் மூடர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்...இவர்களுக்கு தண்டனை மிகக் கடுமையாக இருக்க வேண்டும்...

 • vasanthan - Moscow,ரஷ்யா

  கலிங்கப்பட்டி சைக்கோ வுக்கு ஓவர் நடை பயணம் மேட்டர் ரெடி. குருமா, பீமான் எல்லாம் பா ஜ க ஆளும் மாநிலத்தில் தலித்க்கு சவுண்ட் விட மேட்டர் ரெடி

 • vasanthan - Moscow,ரஷ்யா

  இந்த குழந்தை பாவம் செய்து விட்டபடியால் அவளை வீட்டில் இருந்து தள்ளி வைத்தது தவறு. அந்த பெண் செய்த பாவத்துக்கு தண்டனை பாவமன்னிப்பு பாவாடையிடம் போய் பாவ மன்னிப்பு பெற வேண்டும் . இப்படிக்கு நடு நிலை நக்கிகள்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  பறவைகள் பற்றிய விழிப்புணர்வை இந்நிகழ்வு ஏற்படுத்தட்டும் .ஆனால் இன்னும் சிறுமியை தள்ளிவைத்தல் தவறு

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட ஒன்னாம் வகுப்பு சிறுமி, அறியாத வயதில், விபரீதம் புரியாமல் செய்த தவறு. இதற்கு, தக்க அறிவுரையும், மிக சிறு வகை தண்டனையோ அல்லது மிக சிறிய அபராதமோ விதித்திருக்கனும் பஞ்சாயத்தார். பெரிய தண்டனைகள் மற்றும் பெரிய அபராதங்களை விதிக்கத்தான் நீதிமன்றங்கள் பல இருக்குங்களே?.

 • Mannan - Madurai,இந்தியா

  பாவாடை மேட்டர்ல பேசாதவன் எல்லாம் இங்க வந்து பெனாத்துவாய்ங்க பாருங்க.

  • மணிமாறன் - trichy,இந்தியா

   பிஜேபி காரனுங்களுக்கு எப்பவுமே பாவாடை ஞாபகம் தான்....

  • Mannan - Madurai,இந்தியா

   இந்தா சொன்ன மாதிரியே வந்துட்டாருல்ல? BJP காரன் இல்ல பாஸ். இந்தியன்... சொல்லு.... இந்தியன்

 • Shriram - Chennai,இந்தியா

  இந்த தண்டனையை தீர்ப்பு குடுத்தவர்கள் வீட்டு குழந்தை செய்திருந்தால் இந்த தீர்ப்பை கொடுத்திருப்பார்கள்? முட்டாப்பசங்க

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அந்த குழந்தைக்கு என்ன தெரியும்...? தண்டனைக்கு மாறாக அந்த குழந்தையிடம் நான்கு ஐந்து பறவைகளை கொடுத்து நன்றாக அவள் பொறுப்பில் வளர்க்க வேண்டும் ஐந்து பறவைகள் ஐம்பதாக மாற்றவேண்டும் என்று சொல்லி இருந்தால் நல்லது...

  • Mannan - Madurai,இந்தியா

   சரியா சொன்னீய.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement