Advertisement

கோவை மாணவி மரணம்: பயிற்சியாளர் கைது

கோவை: கோவை தனியார் கல்லூரியில் என்.எஸ்.எஸ் பயிற்சியின் போது தவறி விழுந்த சம்பவத்தில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.

கோவை தனியார் கல்லூரி ஒன்றில் என்.எஸ்.எஸ் சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் ஈடுபட்டிருந்த லோகேஸ்வரி என்ற மாணவி 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார். இது தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பயிற்சியாளர் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (43)

 • g.s,rajan - chennai ,இந்தியா

  Carelessness,not aware of the situations,pilot survey and thorough study about the event has Proved fatal ,mock drills should be conducted with cent percent caution. g.s.rajan, Chennai.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  நாசமா போன அந்த குருட்டு பயிற்சியாளன் போலி ஆசாமி என்று சொல்கிறார்கள். அந்த நாதாரி, மாணவியின் இடது கையை தூக்கி பிடித்து தள்ளிவிட்டதால், ஒரு சுழல்விசை உண்டாகி, தலை கீழே உள்ள கான்க்ரீட் தடையில் மோதி அந்த மாணவி மரணம் அடைந்துவிட்டார். இந்த பொறம்போக்கின் அலட்சியத்தால் ஒரு அப்பாவி மாணவி உயிர் இழந்துவிட்டார். கொலைக்குற்றத்தில்தான் இவனை கைது செய்யவேண்டும்.

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  ஸ்டார்ட் மியூசிக் கல்லூரி நிர்வாகத்திடம் கல்கெக்ஷன் ஸ்டார்ட் சைகோ, குருமா, வண்டு, சின்ன சுடலை "மக்களே ஆர் யு ரெடி" உண்டிகள் மிஸ்சிங்.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  அரை வைத்தியன் ஆயிட்டான்...ஜெயிலில் இருந்து வந்தப்புறம் இனிமே இவன் கிட்ட பயிற்சி எடுக்கலாம்.. ....உஷாரா இருப்பான்..

 • Arivu Nambi - madurai,இந்தியா

  அதாவது கைப்புள்ள ஒரு ஆள்தான் ஓரளவுக்கு சரியாக எழுதியுள்ளார் ....பயிற்சியாளர்கள் மற்றும் சுற்றியிருப்பவர்கள் ஒருவருக்கு கூட விங்ஞான நுட்ப்பமான அறிவு கொஞ்சம்கூட இல்லை என்பது தெரிகிறது .பயிற்சியில், நின்றுகொண்டு கீழே உள்ள வலையைப்பார்த்து குதிக்கத்தான் வேண்டும் ,அப்படி குதிக்கும்போது தானாகவே கட்டடத்தின் சுவரிலிருந்து குறிப்பிட்ட டிகிரியில் உடல் விலகி இலக்கை நோக்கி பூமியின் ஈர்ப்புவிசையால் செல்லும் ..அப்படி செல்லும்போது இலக்கை அடையும் நேரத்தில் ,குதிக்கும் நபர் தன் கால்களால் உதைத்து கொடுத்த உந்துவிசையின் அழுத்தத்திற்கு ஏற்ப மேலே ஆரம்பமான வளைவு டிகிரியிலிருந்து ஒரு கால்வட்டம் போல கீழே உள்ள சுவற்றிலிருந்து குறைந்தது மூன்று அடிக்கு மேல் விலகித்தான் விழுவார் ... இதை பயிற்சியாளர்தான் பயிற்சியில் ஈடுபடுவோருக்கு சொல்லி புரியவைத்து குதிக்கும்படி கூறவேண்டும் ...ஆனால் இங்கே உட்கார்ந்துகொண்டு , குறைந்தது அந்தப்பெண்ணை மேலிருந்து தானாகவே கீழ்நோக்கி பாய விட்டிருக்கவேண்டும் , அதையும் செய்யாமல் தோளில் கைவைத்து தள்ளிவிடுவது படு முட்டாள்தனமான காரியம் ...இருவரின் மேலும் தவறுகள் இருக்கிறது .ஆனாலும் அறிவுகெட்ட தனமாக நடந்த பயிற்சியாளர் மீதுதான் முழு குற்றத்தையும் சுமத்தமுடியும் .....எனவே குற்றவாளி பயிற்சியாளர்தான் ...தண்டனை கொடுத்துதான் தீரவேண்டும் ....நல்ல வேலையாக வீடியோ காட்சிகள் ஆதாரமாக உள்ளது ..இல்லையென்றால் .பெண் மீதே பலியைப்போட்டு ஒன்றுமில்லாமல் செய்திருப்பார்கள் .. .

 • K.Ramachandran - Chennai,இந்தியா

  Unfortunately we never learn from past experience. Pl. read the following: From Hindustan Times: 25 Feb 2012 The Fire department admitted to the lapses on their side after a 22-year-old woman died in the fire mock drill conducted in Bangalore on Friday. Nalina Reddy, and employee of Bombay Rayon Fashion Limited in Yeshwantpur died after the rope by which she was coming down a 3-storey building snapped.

 • makkal neethi - TVL,இந்தியா

  எது தேவையோ அதை கற்று கொடுங்கள் ....5 வயது பையனுக்கு கிராப்ட் கிளாஸ் ப்ராஜெக்ட் செய்ய் சொல்வதும் .. மேலிருந்து குதிக்கும் வெட்டி விளையாட்டுக்களும் தவிர்க்கப்படவேண்டும்

 • மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா

  வாங்க செத்து செத்து விளையாடுவோம்னு ஒரு படத்துல மச்சக்காளை வடிவேலுவை கூப்பிடுவாரே அந்த மாதிரி பயிற்சி போல. இன்றைய தலைமுறையில் எல்லாமே அவசரம் தான்.

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  இந்த மாதிரி வீடியோக்களை ஊடகங்கள் காட்டாமல் இருப்பது நல்லது... இந்த மாதிரி விபத்து வீடியோக்கள், தற்கொலை வீடியோக்கள் பலரின் மனதை பாதிக்கும்... ஊடகங்களுக்கு பொறுப்பு மிக அவசியம்...

  • selvam - Chennai,இந்தியா

   ஊடகங்களுக்கு பொறுப்பு வந்து விட்டால் நாடு இப்பிடியா இருக்கும் ?

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  இவரது மரணத்திற்கு இவரது பயமும் ஒரு காரணம். இந்த மாதிரி பயிற்சிகள் பயத்தை போக்கடிக்கவே நடத்தப் படும். பயந்த சுபாவம் உள்ளவரை அனுமதித்தது தவறு.

  • selvam - Chennai,இந்தியா

   குதிக்க சொல்வதற்கு முன்னர் அதை செய்தார்களா அதாவது பயத்தை போக்கும் விஷயம் .. அப்புறம் குதிப்பதற்கு இஷ்டம் இல்லை என்றால் விட்டு விடலாம் .. அதை விட்டு பிடித்து தள்ளி விடுவது இந்த வீடியோவில் நன்கு தெரிகிறது ..இதை போல அரைகுறை பயிற்சியாளரை அனுமதித்த பிரின்சிபால் மீதும் அந்த துறை மீதும் கல்லூரி மீது எல்லாமே கடும் நடவடிக்கை தேவை.. சும்மா நிவாரணம் என்று மட்டுமே கொடுத்து இதை விட்டு விடாதீர்கள்..

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  தாய் லாந்துல என்னடா ன்னா ஒரு பயிற்சியாளர் சின்னப்பயலுவோளை... எலிவளை மாதிரி குகைக்குள்ளே ஒண்டரை மைல் கூட்டிகிட்டு போயிருக்கான்... இங்க என்னடான்னா ஒரு அரை பயிற்சியாளன் ..இந்த மாதிரி ஒரு காரியம் பண்ணியிருக்கான்....என்னங்கடா.இது ...என்னமாதிரியான .பயிற்சி..?....

 • G M UDAYAKUMAR - chennai annanur,இந்தியா

  அந்த காட்சியை தொலைக்காட்சில் பார்த்தபோது சில நிமிடங்கள் என் மனம் எங்கோ சென்றது போல் இருந்தது திகைத்து போனேன் அந்த மாணவி பயந்து பின் வாங்கினார் ஆனால் பயிற்சியாளர் அந்த மாணவியை வற்புரித்து தள்ளியது அங்கு போர்வையை பிடித்து இருந்த மாணவமாணவிகள் எப்படி துடித்துஇருப்பார்கள் இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அனைவரது பொறுப்பு

 • R Sanjay - Chennai,இந்தியா

  பேரிடர் காலத்தில் எப்படி மக்கள் பாதுகாப்பபாக இருக்கவேண்டும் மற்றும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கத்துக்காக நடந்த இந்த ஒத்திகையில். இப்படி பயிற்சியாளரின் அவசரத்தனம் மற்றும் நிதானமின்மை போன்ற காரணத்தில் ஒரு மாணவியின் உயிர் பலியாகி இருக்கிறது. அந்த கல்லூரி மாணவியை நினைத்தால் கவலையாக இருக்கிறது. அந்த மாணவியின் மரணத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அந்த பயிற்சியாளருக்கு போதிய அனுபவமின்மை இல்லாத காரணத்தால் இப்படி ஒரு உயிர் அநியாயமாக சென்றுவிட்டது. வீடியோவில் அந்த பெண் தயாராவதற்கு முன்பே அந்த பயிற்சியாளர் அந்த பெண் குதிக்க பயப்படுகிறார் மற்றும் நேரம் கடத்துகிறார் என்று நினைத்து அவசரப்பட்டு அந்த பெண்ணை தள்ளி இருக்கிறார். அது தவறுதலாக அந்த பெண்ணின் தலையில் அடிபட்டு உயிர் பிரிய காரணமாகி இருக்கிறது. அந்த பயிற்சியாளரின் நோக்கம் அந்த பெண்ணை கொல்வது இல்லை மாறாக மாணவர்களின் விழிப்புணர்விற்காக தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதனால் பயிற்சியாளருக்கு குறைந்த பட்ச தண்டனையே போதுமானது. இறந்த அந்த பெண்ணின் நிலையில் எனது உடன் பிறந்த சகோதரியோ அல்லது என் மனைவியே இருந்தாலும் என் நிலை இதுவே. நாட்டில் நடக்கும் இது போன்ற ஒவ்வொரு விஷயங்களிலும் மக்கள் கண்காணித்து இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு இனிமேல் இது போன்ற சம்பவங்களில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மேலும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் எங்கும் நிகழக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்.

  • Srinivasan Desikan - chennai,இந்தியா

   உங்கள் வார்த்​தையி​லே​யே அவசரபட்டு என்று எழுதியுள்ளீர்கள் இவ​ரெல்லாம் ஒரு பயிற்சியாளரா? நீங்கள் என்ன நீதிபதியா கு​றைந்தபட்ச தண்ட​னை என்று ​சொல்வதற்கு. ​கேள்வி​யே பயிற்சி​யே இல்லாத ஒருவர் எவ்வாறு களத்திற்கு வந்தார்? ​மேலும் அந்த ​பெண் குதிப்பதற்கு பயப்படுவதாக ​தெரிகிறது. அப்​போது இவர் ஏன் வி​​​ரைவாக குதிப்பதற்கு தூண்ட​வேண்டும். ​மேலும் இப்​போது பல முகநூல் விடி​யோகள் வந்துள்ளன ​​ குதிக்காம​லே ​மேலிருந்து கீழ் இறங்குவதற்கு பல்​வேறு புதிய உத்திக​ளை ​கையாண்டு வருகிறார்கள்.

  • R Sanjay - Chennai,இந்தியா

   அனுபவம் இல்லாத பயிற்சியாளர் தவறிழைத்து இருக்கிறார் அவருக்கு எந்தவிதத்திலும் ஆதரவு இல்லை மேலும் இதற்க்கு நீதிமன்றம் என்ன தண்டனை கொடுத்தாலும் அதை ஏற்கலாம், நான் நீதிபதி அல்ல இது என்னுடைய ஒரு சிறு கருத்து அவ்வளவே. மற்றும் கல்லூரி நிர்வாகம் பயிற்சிக்கு முன் பயிற்சியாளரை பற்றியும் பயிற்சி கொடுக்கும் குழுக்களை பற்றியும் நன்கு விசாரித்து அவர்கள் முறையான பயிற்சியாளர்களா? அவர்களுக்கு போதிய முன் அனுபவம் இருக்கிறதா? என விசாரித்து பிறகு மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க அனுமதித்து இருக்கவேண்டும். இப்படி பயிற்சியாளரை பற்றி அதிகம் தெரிந்து வைத்து கொள்ளாமல் பயிற்சி பற்றிய போதிய புரிதல் இல்லாதவரை பயிற்சியில் அமர்த்திய கல்லூரி நிர்வாகத்தின் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   \\\அந்த பயிற்சியாளரின் நோக்கம் அந்த பெண்ணை கொல்வது இல்லை மாறாக மாணவர்களின் விழிப்புணர்விற்காக தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதனால் பயிற்சியாளருக்கு குறைந்த பட்ச தண்டனையே போதுமானது.///. அந்த மாணவி அங்கிருந்து தானாக குதித்து இருந்தாலும் இறந்து தான் போய் இருப்பார்கள். அதில் மாற்றமே இல்லை. ஆம், முதலில் இந்த மாணவி நின்ற நிலையில் (STANDING POSITION) இருந்தான் குதிக்க வேண்டும். மாறாக அந்த மாணவி இங்கே உட்காந்த நிலையில் (SITTING POSITION) குதிக்க முயற்சிக்கிறார். எனவே, அப்படியே ஒரு வேலை இந்த மாணவி SITTING POSITION-யில் இருந்து குதிக்கும் போது உடலின் கால் பகுதி வெளியேயும், தலை பகுதி பின்னோக்கியும் போகும். அப்படி போகும்போது, வழக்கம் போல் தலை இப்பொழுது அடிபட்டது போல் SUN SHADE-யில் அடிபட்டு தலை தெறித்து இருக்கும். இரண்டாவதாக, இந்த மாணவி நின்ற நிலையில் (STANDING POSITION) இருந்து குதித்து இருந்தாலும் இரண்டு மூன்று அடி தள்ளி வெளியே JUMP செய்து குதிக்க வேண்டும். பயத்தில் இருப்பவர்கள் அப்படி குதிக்க மாட்டார்கள். மாறாக, அவர் நின்று இருக்கும் SUN SHADE-ஐ ஓட்டியேதான் குதித்து இருப்பார்கள். ஆக, இப்பொழுதும் அதே தவறுதான் நடந்து இருக்கும். எப்பொழுதுமே நீங்கள் மேல் இருந்து கீழே குதிக்கும்போது உங்கள் உடல் அப்படியே செங்குத்தாக கீழே விழ மாட்டீர்கள். மாறாக, கால் பகுதியை விட உடல் பகுதி எடை அதிகமாக இருக்கும். எனவே உடல் சாய்த்தவாறுதான் அதாவது ஒரு 30-45 DEGREE சாய்வு கோணத்தில்தான் தரையில் விழுவோம். அப்படி விழும்போதும் வழக்கம்போல் அதே கீழ்தளத்தில் உள்ள SUN SHADE-யில் தலை பட்டு தெறித்து இருக்கும். மூன்றாவதாக, நான் சொன்னது போல் மாணவி நின்ற நிலையில் (STANDING POSITION) இருந்து குதித்து இருந்தாலும் இரண்டு மூன்று அடி தள்ளி வெளியே JUMP செய்து குதிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தேன். அப்படியே இந்த மாணவி சரியாக குதித்து இருந்தாலும், கீழே உள்ள வலையில் உள்ள வலைதள பரப்பளவு மிக குறைவாக இருக்கிறது. மேலும் இவர்கள் சுவரை ஒட்டி வலையை பிடித்து இருக்கிறார்கள். வலை சுவரை ஒட்டி பிடிப்பதில் தவறு இல்லை. அனால், வலையின் பரப்பளவு இதை விட நான்கு மடங்கு பெரிதாக இருக்க வேண்டும். இல்லை என்றால், இதே நிலையில் குதித்தால், அந்த மாணவி வலையை விட்டு, வலையின் வெளிப்பகுதில்தான் விழ வேண்டி இருக்கும். அப்படி இருக்கும்போது, அந்த வெளிப்பகுதியில் வலையை தங்கி பிடித்திருக்கும் மாணவிகள் மீதுதான் விழுந்து இருப்பார்கள். அப்படியானால் இந்த மாணவி மட்டும் அல்லாது, வலையை தங்கி பிடித்திருக்கும் மாணவிகளுக்கும் தலையில் பலத்த அடி விழுந்து இருக்கும். மேலும், நான் குறிப்பிட்டது போல் வலை நான்கு மடங்கு பெரிதாக இருந்தால், இப்படி மாணவர்களை கையில் வலையை தங்கி பிடிக்க முடியாது. மாறாக குறைந்த பட்சம் ஒரு பக்கத்திற்கு மூன்று தூண்கள் வீதம் நான்கு பக்கத்திற்கு எட்டு தூண்களில் வலையை நன்றாக இறுக்கி கயிற்றால் கட்டி இருந்தால் மட்டுமே, அந்த மாணவி வலையில் குதித்து இருந்தால் வலை தரையை தொடாது. இல்லை என்றால் வலையின் நோக்கம் பயன் இல்லாமல் போய் கை கால் உடைந்து, முதுகு தண்டுவடம் உடைந்து போய் இருக்கும். ஆக, இந்த மாணவி எப்படி குதித்து இருந்தாலும் இறந்து இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

 • Srinivasan Desikan - chennai,இந்தியா

  சமீபகாலமாக சில ​தொ​லைகாட்சிகளும் சாகச நிகழ்ச்சி என்ற ​பெயரில் இது​போன்ற மரணவி​ளையாட்டுக​ளை நிகழ்த்திவருகிறது. ​பொதுவாக​வே கடந்த காலங்களில் நன்றாக பயிற்சி ​பெற்றவர்கள் ​கொண்டு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் தீயணைப்புது​றை முதல் பல்​வேறு ​பேரிடர் ​​மேலாண்​மை பயிற்சியாளர்கள் எவ்வாறு தற்காத்து​கொள்வது என்று நிகழ்த்திகாட்டுவார்கள் எந்த இடத்தில் ஒரு பயிற்சியும் இல்லாதவர்க​ளை ​கொண்டு நிகழ்த்தியது மிகப்​பெரிய தவறு. இ​தே ​கோயம்புத்தூரிலிருந்துதான் ம​​லை​யேற்ற பயிற்சி என சில கல்லூரி மாணவர்க​ளை பலிவாங்கினார்கள். இப்​போது இந்த நிகழ்வு. இதற்​கெல்லாம் ஒ​ரே காரணம் தனியார் சில பணத்​தா​சை ​கொண்டு அ​லைவதனால்தான். அ​னைத்து பயிற்சிகளும் உ​டைய ராணுவத்தினர் மட்டு​மே இதற்கு தகுதியானவர்கள் அவர்களை ​கொண்டுதான் இனி வருங்காலத்தில் இது​போன்ற நிகழ்வுக​ளை நடத்த​வேண்டும். உடனடியாக ​கைது​​செய்யபட​வேண்டியவர் கல்லூரி முதல்வர் மற்றும் தாளாளர். அந்த குழந்​தைக்கு நஷ்டஈடு சம்பந்தபட்ட கல்லூரி வழங்க​வேண்டும். ​தொ​லைகாட்சிகளில் இது​போன்ற ரியாலிட்டி​ஷோ என்ற நிகழ்சிக​ளை த​டை​செய்ய​வேண்டும்

  • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

   காசுகொடுத்தா எதையும் செய்யும் தொலைக்காட்சிகளும், மக்களும் இருக்கும் வரை பாதுகாப்பில்லாத சாகச நிகழ்ச்சிகள் தொலைக்காட்சில் இருக்கத்தான் செய்யும், விபத்துகள் நடக்கத்தான் செய்யும் ...தொலைக்காட்சி ஊடகங்களுக்கு நிச்சமாக தணிக்கை குழு தேவை...

 • Anand - chennai,இந்தியா

  சே என்ன கொடுமை.........

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  இது போன்ற சோதனைகள் எல்லாம் கரணம் தப்பினால் மரணம்தான். இதற்கு முதலில் இது போன்ற கல்லூரி மாணவியை சோதனைக்கு பயன்படுத்தியே முதல் தவறு. இது போன்ற STUNT MASTER வேலைகளுக்கு EXPERT-களைத்தான் சோதனை எலிகளாக பயன்படுத்த வேண்டும். மேலும் இது போன்ற பேரிடர் மேலாண்மையை ராணுவத்தினர்கள்தான் அதுவும் ராணுவ வீரர்களை வைத்துதான் இது போன்ற ஒத்திகையை பொது மக்கள் முன் செய்து காட்டுவார்கள். அப்படி இருக்கும் பொது இது போன்ற பேரிடர் ஒத்திகையை இவர் நடத்தியதே முதல் தவறு. அதுவும் ஒரு மாணவியை மாடியில் இருந்து தள்ளி விட்டு இருக்கிறார். அந்த இறந்த மாணவியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

 • Rajesh - Chennai,இந்தியா

  கல்லூரி யாருடையது என்பதையும் குறிப்பிடுங்கள். எங்கோ வெளி மாநிலத்தில் நடக்கும் நிகழ்வைக் குறிப்பிடும்போது கூட முதல்வர் யார் என்பதை கூறுவீர்களே?

 • Jose - Thoothukudi,இந்தியா

  என்ன ஒரு முட்டாள்தனமான பயிற்சி. இதனால் அந்த மாணவியின் குடும்பம் எவ்வளவு பாதிக்கப்படும். கடவுள் அந்த குடும்பத்திற்கு ஆறுதலை கொடுக்கட்டும்.

 • biju Thumparapulli - kERMAN,ஈரான்

  he don't know how to act in Emergency Situation who give the authority to Train this Kind of Job. Bullshit

 • Madan - Chennai

  அட கூமுட்டைப்பயலுகளா எப்படா திருந்துவிங்க

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  ஊழலற்ற தமிழகம். கேட்கவே காதில் தேன் பாயுதே. நடக்குமா.

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  முதலில் தாளாளர் முதல்வர் ஆசிரியர்கள் ஆகியோருக்கு பயிற்சி வழங்க வேண்டும். இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்தினால் புதிதாக அரசு கல்லூரிகள் தொடங்க வேண்டிய அவசியம் இருக்காது. பல மாணவ மாணவிகளுக்கு வேலையும் கிடைக்கும் செய்யுமா தமிழக அரசு

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  பயிற்சியாளரை கைது செய்வது வேஸ்ட். அவனையும் அந்த கல்லூரியின் முதல்வர் மற்றும் தாளாளரையும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு கூட்டிச்சென்று சம்பவம் எப்படி நடந்தது என ஒவ்வருவனாக கீழே தள்ளுங்கள் உண்மை தெரியும்.எதிர்காலத்தில் இப்படி நடக்காமல் பயிற்சிக்கு ஆலோசனை கிடைக்கும்

 • bellie kumar - jubail,சவுதி அரேபியா

  ஒரு பொம்மையை தான் இந்த மாதிரி பயிற்சிகளுக்கு பயன் படுத்தவேண்டும். அடிப்படை அறிவு கூட இல்லாத பயிற்சியாளர். இது கொலை குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோருக்கு என்ன பதில் சொல்ல போகிறோம்?

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  பேரிடர் மேலாண்மையில் அரைகுறை பயிற்சியாளர்களை அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது... தண்டனை அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்...

 • vel - ,

  வேதனை...

 • sethuraman -

  there is no science, one life is lost. very poor coach. no safety helmet. this is planned activity, helmet should be there. some one could fracture as well even if they jump. that coach should never coach again.

 • சுரேஷ் குமார். - சொக்கநாதபுரம். ,சிங்கப்பூர்

  அந்த பெண் தவறி விழுந்து பலியானாரா? பயிற்சியாளர் தள்ளி விட்டாரா? அந்த பெண், அவராகவே குதிப்பதற்கு தயாராகுவதற்குள் பயிற்சியாளர் தள்ளி விட்டதன் விளைவே நிலை தடுமாறி தலை சிலாப் பில் அடிபட்டு இறந்து விட்டார்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பாதுகாப்பாக மறு கயிறு அவருடன் இணைத்து பிடித்து கொண்டு அல்லவா இருக்க வேண்டும்

 • கண்ணன் -

  இது போன்ற பயிற்சிகளில் பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். மாணவியின் பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  என்னடா எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல். அந்த பொண்ணு என்ன ரஜினியா, பறந்து பறந்து குதிக்க.

  • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

   ரஜினிக்கு கூட அவ்ளோ பாதுகாப்பு இருக்கு.....

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   ரஜினி குதிச்சாருன்னா இந்நேரம் அந்த கான்க்ரீட் ஸ்லாப் ஒடைஞ்சிருக்கும்.... அவருக்கு அந்த சேப்டி நெட் டே தேவை இல்லை......தள்ளிவிட்ட பயிற்சியாளர் நேரே வானத்துக்கு போயிருப்பான்.....ரஜினி குதிச்ச இடத்துல பள்ளம் வந்து ஊத்து ஊறி தண்ணி வெளிய வந்திருக்கும்...ஹா ஹா...இது டுமீல் நாடு..

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  என்னமோ, தண்ணியில தள்ளி காப்பாத்துற மாதிரியில்ல, தரை நோக்கி, 2-அடுக்கு மாடியில் இருந்து தள்ளி, மாணவி சாக காரணமாயிட்டான், அந்த பயிற்சியாளன், அவனுக்கும் முதலில் பயற்சி கொடுத்தவன புடிச்சாந்து, அதே போல, அதே இடத்தில் இருந்து, தள்ளி விடனுங்க. வேணும்னா, இவன தரையில் படுக்க வைத்து, இவன் மேல, இவனின் பயிற்சியாளன் வந்து விழனுங்க. எல்லாம், படிக்காமலேயே, லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவனுங்களோ?, என்னவோ போங்க. மற்றும், போலீசார் அவர்களே, எதற்கும், அவன் படிப்பு சான்றிதழ்கள், ஒரிஜினல்தானா?, அல்லது டுப்பாக்கூரா?, என கண்டுபிடிங்க சார்.

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  இவன் காசு கொடுத்து வேலைக்கு சேர்ந்தவனா இருப்பான் போல...விபத்து என்பது நடை பெறுவதற்கு வாய்ப்பு உண்டு..ஆனால் இந்த புகை படத்தை பார்க்கும்போது இந்தாளுக்கு இது தேவை தான் என்பது போல உள்ளது....இந்த மாதிரி ஒரு செட்டப்பை வச்சுக்கிட்டு கொஞ்சம் குண்டான பொண்ணை இறக்கி விட்டதே தப்பு....ஏதாவது ஒரு பயனை வச்சு பயிற்சி கொடுத்து இருக்கலாம்..... இது ஒரு அவசர காலத்தில் என்ன மாதிரி காப்பாத்தணும்னு பயிற்சியா இருந்தாலும் போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில் அந்த பெண்ணை இறக்கி விட்டது தப்பு............

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  பேரிடர் போன்ற பயிற்சிகளில் ஆபத்தில்லாமலிருக்காது .சென்னை வெள்ளத்தில் நீச்சல் பயிற்சிபெற்ற தொண்டர்களே இறந்தனர். தாய்லாந்தில் குழந்தைகளைக் காக்கப்போன ஒரு வீரரும் இறந்தது சமீப நிகழ்வு .பல வீரப்பெண்களை அளித்த நமது சமூகம் இதுபோன்ற நிகழ்வுகளைப் பெரிதுபடுத்தக்கூடாது .அப்படி செய்தால் பொதுத்தொண்டுக்கு யாரும் வரதயங்குவர். மகளை இழந்த குடுமபத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

 • கைப்புள்ள - nj,இந்தியா

  உக்காந்த மாறி இருக்கிறப்போ, அதுவும் காலை தொங்க போட்டு உக்காந்து இருக்கிறப்போ எப்புடிடா குதிக்க முடியும்? குதிக்கிறதுக்கு ஒரு உந்து சக்தி இருந்தாதானே குதிக்க முடியும். அந்த பொண்ணு உக்காந்து இருந்த நிலையில் விழத்தான் முடியுமே தவிர குதிக்க முடியாது. ஏண்டா இப்படி முட்டாளா இருக்கீங்க....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement