Advertisement

தாய்லாந்தை விமர்சிக்கும் சீனா

பீஜிங்:குகையில் சிக்கிய சிறுவர்களை வெற்றிகரமாக மீட்ட தாய்லாந்து அரசுக்கு உலகமே பாராட்டிவரும் வேளையில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து 40 பேர் பலியானதற்காக அந்நாட்டை சீனா விமர்சித்துள்ளது.
தாய்லாந்தில் ஜூலை 5ம் தேதி புக்கெட் தீவுப் பகுதியில் படகில் 120சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் இதில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள். இதுவே தாய்லாந்து மீதான சீன அரசின் விமர்சனத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.
குகையில் இருந்து சிறுவர்கள் மீட்பு தாய்லாந்து அரசின் பொறுப்பற்ற தன்மையினால் இந்தப் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் அந்நாட்டின் நெட்டிசன்களும், சீனாபத்திரிக்கைகளும்தாய்லாந்து அரசை விமர்சித்து வருகின்றனர்.
சீன நெட்டிசன்கள் பலர் "தாய்லாந்து கால்பந்து சிறூவர்கள் மீட்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சித்தான் ஆனால் நாங்கள் இனி தாய்லாந்து செல்ல மாட்டோம்” என்று கூறியுள்ளனர்.சீன அரசின் தேசிய பத்திரிகை கூறும்போது, ”இது ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற செயல். சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பை தாய்லாந்து வழங்கவில்லை” என்றும் கூறியுள்ளது.
தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் நாடுகளில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் 10 லட்சம் சீன மக்கள் தாய்லாந்துக்கு ஆண்டு தோறும் சுற்றுலா செல்கின்றனர்.இந்த நிலையில் புக்கெட் படகு விபத்து சீனா - தாய்லாந்து இரு நாடுகளில் நட்புறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement