Advertisement

ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு: 10 பேர் பலி

காபூல்:ஆப்கானிஸ்தானின் பன்ஷிர் மாகாணம் பனிக்கட்டிகளால் மலைப்பகுதிகள் அமைந்துள்ள இந்த பகுதியில், மிகப்பெரிய ஏரியும் உள்ளது. பனிக்கட்டிகள் உருகியதால், நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் சிக்கி, அப்பகுதி மக்கள் 10 பேர் பலியாகினர். பலர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் நிலச்சரிவில் சிக்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. நூற்றுக்கணக்கான வீடுகளும் நிலச்சரிவில் சிக்கி சேதம் அடைந்துள்ளன. நேட்டோ நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்க தற்போது பிரஸ்சல்ஸில் உள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு வேதனை தெரிவித்துள்ளார். தேவையான உதவிகளை உடனடியாக செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement