Advertisement

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற நவாஸ் துபாயில் கைது

இஸ்லாமாபாத்: பனாமா ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெ ரீப் அபுதாபி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெ ரீப், பனாமா பேப்பர்ஸ் லீக் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதால் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி பிரதமர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் நவாஸின் மகள், மருமகன் ஆகியோர் மீது ஊழல் மூலம் லண்டனில் சொத்துக்கள் வாங்கி குவித்தது விசாரணையில் தெரியவந்தது. புகார் எழுந்தது. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திட உச்சநீதின்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில், நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என கோர்ட்டு முடிவு செய்து கடந்த சின தினங்களுக்கு முன் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டும் சிறைத்தண்டனை விதித்து கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கியது.

இதற்கிடையே நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாசுடன் இன்று (வெள்ளிக்கிழமை) நாடு திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இஸ்லாமாபாத்தில் விமானத்தில் வந்து இறங்கியதும் நவாஸ் ஷெரீப்பையும், மகள் மரியம் நவாசையும் கைது செய்து,, ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைப்பதற்கு ஏற்பாடுகள் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக லண்டனிலிருந்து மகளுடன் புறப்பட்ட நவாஸ், அபுதாயி விமான நிலையத்தில் கைது தேசிய பொறுப்புடைமை ஏஜென்சியினரால் செய்யப்பட்டதாகவும், விமான நிலையத்திலேயே 7 மணிநேரம் சிறைபிடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இன்று காலை விமானம் மூலம் லாகூர் வந்ததும் பாக். போலீசாரால் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (15)

 • Kaliyan Pillai - Chennai,இந்தியா

  சசிகலாவிடம் ரெண்டு கோடி வாங்கி சொகுசு வசதிகள் செய்துகொடுத்தது போல மல்லையாவிடம் எத்தனை கோடிகள் வாங்கி அவருக்கு பாதுகாப்பு தருகிறார்களோ? யாருக்குத் தெரியும்?

 • சூரி -

  துபாய் / அபு தாபி / பாகிஸ்தான் எங்கே கைது செய்தார்கள்?

 • mariyappangopinathan - Chennai,இந்தியா

  நம்ம மல்லய்யா மேல தில் இருந்தா கை வச்சு பாக்க சொல்லு அந்த தேசிய பொறுப்புடைமை ஏஜென்சிய. இந்தியன் கிட்ட ஒரு பருப்பும் வேகாது. அங்க இருக்குற சுப்ரீம் கோர்ட் எல்லாம் இங்க கத்துக்கணும்.

 • dandy - vienna,ஆஸ்திரியா

  பாக்கிஸ்தான் நீதிமன்றம் மாத்திரம் அல்ல போலீஸ் கூட முதுகு எலும்பு உள்ளவர்கள் என்று நிரூபிக்க பட்டு உள்ளது இந்தியா ஹி ஹி ஹி எங்கே மலேசியாவில் ஒளிந்திருக்கும் சாகிர் நாயக் (முன்னாள் இந்து ) என்பவனை தூக்கி வரமுடியுமா ? அல்லது லண்டன் நகரில் ஒளிந்துள்ள இந்திய குற்றவாளிகளை தூக்கி வரமுடியுமா ?உலகின் 4 வது பெரிய ராணுவம் எங்களிடம் உள்ளது கூடவே அணுகுண்டும் ஹி ஹி ஹி

 • Madan - Chennai

  நம் நாட்டில் திருடர்களே ஆட்சியில் இருப்பதால் கொள்ளைக்காரர்களுக்கு கொண்டாட்டம் தான்

 • narayanan iyer - chennai,இந்தியா

  நவாஸ் தன் பதவிகாலத்தில் செய்த மாபெரும் தவறு பாகிஸ்தானை இந்தியாவுடன் இணைக்காததுதான். செய்து இருந்தால் ஒருவரும் அவரை கைது செய்யாமல் இருப்பார்கள்

 • Navasudeen - covai,இந்தியா

  நம் நாட்டில் ஒரு கவுன்சிலர கூடகைது செய்ய சட்டத்தில் இடமில்லை எல்லாம் அதிகார ஆணவ பிரதிநிதிகள்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  சட்டங்கள் கடுமையாகவேண்டும் காங்கிரஸ் ஆட்சியில் தப்பு செய்து வித்து பாஜக ஆட்சியில் தப்பி ஓடிய கயவர்களை கொண்டு வந்து தண்டிக்க வேண்டும்.

 • chander - qatar,கத்தார்

  அந்த நாட்டில் நல்ல அரசியல் வாதிகள் மற்றும் நல்ல நீதிமன்றங்கள் உள்ளன இந்திய தலைவர்கள் வெட்கப்படவேண்டும்

 • Navn - Newyark,யூ.எஸ்.ஏ

  மல்லையாவின் பின்னால் வக்கற்று திரியும் இந்தியா பாகிஸ்தானிடம் பாடம் கற்கலாம்

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  மக்களின் பிரநிதியை ஒரு அரசு எப்படி வெளிநாட்டில் கைது செய்கிறார்கள், ஆனால் பல லட்சம் கோடி ஏமாற்றியவர்களை அதுவும் ஒரு வியாபாரியை கைது செய்ய ஜனநாயக முறையில் வாய்ப்பில்லாமல் போகிறது .காரணம் இதில் பல மர்ம இரகசியங்கள் இருப்பதாலோ ?? வந்தே மாதரம்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மல்லையா..... நீரவ் மோடி.... லலித் மோடி.... ஆகியவர்கள் இந்தியனாக பிறப்பெடுத்தது எவ்வளவு நல்லதாக போய் விட்டது என்று நினைப்பார்கள்..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அவர் இந்தியாவில் பிறந்து இருந்தால் ஆயுசுக்கும் யாரும் கைது செய்ய மாட்ட்டார்கள்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement