Advertisement

நவாஸ் ஷெரீப்பை கைது செய்ய உத்தரவு

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானுக்கு இன்று வரும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும், அவரது மகளையும், விமான நிலையத்திலேயே கைது செய்ய, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், வெளிநாடுகளில் சொத்து குவித்தது தொடர்பான விவகாரத்தில், பதவி நீக்கம் செய்யப்பட்டார்.இதற்கிடையில், ஊழல் பணத்தில், பிரிட்டன் தலைநகர் லண்டனில், அவர், 'அனல்பீல்டு' என்ற பெயரில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டியிருப்பதாக புகார் எழுந்தது.
இது பற்றி விசாரித்த நீதிமன்றம், நவாஸ் ஷெரீப்புக்கு, 10ஆண்டு சிறை தண்டனையும், அவரது மகள் மரியத்துக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து, சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.நவாஸ் ஷெரீப்பும், அவரது மகளும், தற்போது லண்டனில் உள்ளனர்.
பாகிஸ்தானில், பார்லிமென்ட் தேர்தல் வரும் 25ல் நடக்கிறது. இதில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - என் - கட்சி போட்டியிடுகிறது.இந்நிலையில், நவாஸ் ஷெரீப்பும் அவரது மகளும், இன்று லண்டனிலிருந்து கிளம்பி, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்துக்கு வருகின்றனர்.ஆனால், விமான நிலையத்திலேயே, நவாஸ் ஷெரீப்பையும், அவரது மகளையும் கைது செய்ய, தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement