Advertisement

இம்ரான் கான் குழந்தைகள் 'மாஜி' மனைவி குற்றச்சாட்டு

கராச்சி:பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெஹரீக் - இ - இன்சாப் கட்சியின் தலைவருமான, இம்ரான் கானுக்கு, முறை தவறி, ஐந்து குழந்தைகள் பிறந்ததாக, அவரது முன்னாள் மனைவி, ரெஹம் கான் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், 65; இவர், தெஹரீக் - இ - இன்சாப் என்ற அரசியல் கட்சியின் தலைவராக, உள்ளார்.பாக்.,கில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராகவும் போட்டியிடுகிறார். இம்ரான் கானுக்கு ஏற்கனவே, இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தானது. இந்நிலையில், புஷ்ரா மனேகா என்ற பெண்ணை, மூன்றாவதாக, சமீபத்தில் திருமணம் செய்தார்.இந்நிலையில், இம்ரானின் இரண்டாவது மனைவியான ரெஹம் கான், தன் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை எழுதியுள்ளார்; இந்த புத்தகத்துக்கு, 'ரெஹம் கான்' என, தனது பெயரையே வைத்துள்ளார்.அதில், இம்ரான் கான் பற்றி, பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.இம்ரான் கானுக்கு, போதை பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் உள்ளதாகவும், அதை சில நேரங்களில் நேரடியாக பார்த்துள்ளதாகவும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.மேலும், தனக்கு, முறை தவறி ஐந்து குழந்தைகள் பிறந்ததாக இம்ரான் கூறியதாகவும், அதில் சில குழந்தைகள் இந்தியப் பெண்களுக்கு பிறந்தவை என்றும் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement