Advertisement

போர்பஸ் பட்டியலில் 2 இந்திய வம்சாளி பெண்கள்


நியூயார்க்: அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போர்பஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பணக்கார பெண்கள் பட்டியலில் இரு இந்திய வம்சாவளி பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.நேற்று 60 பணக்கார பெண்கள் பட்டியல் வெளியிட்டது போர்பஸ் அதில், ஜெயஸ்ரீ உல்லால் 57, நீரஜா சேத்தி,60 ஆகிய இரு பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஜெயஸ்ரீ உல்லால், கம்ப்யூட்டர் நெட்வொர்க் நிறுவனம் ஒன்றின் தலைவராக உள்ளார். இவருடைய நிறுவனம் கடந்த ஆண்டு ரூ. 10 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டியுள்ளது. மற்றொரு பெண்மணியான நீரஜா சேத்தி, சின்டெல் என்ற தகவல் தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார். தனது கணவருடன் இணைந்து நடத்தி வரும் இந்தத நிறுவனம் கடந்த ஆண்டு ரூ.6,283 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இவர்கள் இருவரும் போர்பஸ் பட்டியலில் முறையே 16 மற்றும் 21ம் இடத்திலும் உள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

    சரி உழைத்தார்கள் அங்கே பணத்தை போட்டார்கள், வழக்கு முடிந்தது.

  • vel - ,

    ஆசியாவிலேயே பெரிய பணக்காரர்கள் பட்டியலிலேயே மூன்றாம் இடத்திலே இருந்தும் அமைதியாக இருக்கோம்.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    பாராட்டுக்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement