Advertisement

வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

புதுவண்ணாரப்பேட்டை:கல்லுாரி மாணவியை கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், வாலிபருக்கு, ௧௦ ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர், சீதாராமன், 23; தனியார் நிறுவன ஊழியர். அதே பகுதியை சேர்ந்த, கல்லுாரி மாணவியை கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சீதாராமனை, கைது செய்தனர். ௨௦௧௫ல் இந்த சம்பவம் நடந்தது.
இந்த வழக்கு விசாரணை, சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, குற்றம் சாட்டப்பட்ட சீதாராமனுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, தமிழக அரசுக்கு, நீதிபதி உத்தரவிட்டார். தண்டனை விதிக்கப்பட்ட பின், சீதாராமனை, புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • r.thiyagarajan - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்

    தூக்கிலிடுங்கள் ...இந்த காம வெறியனை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement