Advertisement

தாய்லாந்து பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு மரபணு சோதனை

சென்னை:சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்தவர், மனோஜ் ஜெயின், 42. இவர், வெளிநாடுகளில் இருந்து, பொம்மைகளை இறக்குமதி செய்து விற்று வருகிறார். வியாபார நிமித்தமாக, 2011ல், தாய்லாந்து சென்று வந்தார்.

அப்போது அங்கு, ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்த, தாய்லாந்தைச் சேர்ந்த, நாருமோன் ஜெப்பை, 28, என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, அந்த பெண், இரண்டு குழந்தைகளுக்கு தாயானார்.

பின், தன் நண்பர் சந்தோஷ்குமாருக்கும், அந்த பெண்ணுக்கும், மனோஜ் ஜெயின் திருமணம் செய்து வைத்துள்ளார். பின், விவகாரத்து பெற்றுவிட்டனர்.விகாஸ்கோத்தாரி என்ற தன் நண்பருக்கும், அந்த பெண்ணுக்கும் தொடர்பு ஏற்படுத்தினார்.இறுதியில், தாய்லாந்து செல்வதை மனோஜ் நிறுத்தி விட்டார்.அந்த பெண், இரு குழந்தைகளுடன் தவித்து வந்தார்.

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, அந்நாட்டு துாதரகம் வாயிலாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.போலீசார் மே, 9ல், மனோஜ் ஜெயின், விகாஸ்கோத்தாரி ஆகியோரை கைது செய்தனர். சந்தோஷ்குமாரை தேடி வருகின்றனர்.

குழந்தைகளுக்கான தந்தையை அடையாளம் காண, நேற்று முன்தினம், தாய்லாந்து பெண்ணுக்கு பிறந்த குழந்தையின் ரத்த மாதிரியை சேகரித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரிக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.அதேபோல், மனோஜ் ஜெயினிடமும் மரபணு சோதனை நடத்த உள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement