Advertisement

தங்க கட்டிகள் பறிமுதல்

அண்ணாநகர்:சென்னை, அண்ணாநகர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட இடங்களில், தொடர் திருட்டு சம்பவம் நடந்து வந்தன.

குற்ற சம்பவங்கள் நடந்த இடங்களில் உள்ள, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை, தனிப்படை போலீசார் சேகரித்தனர். அதில், ஒரே நபரே அனைத்து இடங்களிலும் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இதையடுத்து, புகைப்படத்தை வைத்து, மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள, புதுச்சேரி நிறுத்தம் அருகே, அவன் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், அவனை மடக்கி பிடித்தனர்.

அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, விசாரணை மேற்கொண்டதில், புதுச்சேரியைச் சேர்ந்த மூர்த்தி, 37, என்பது தெரிய வந்தது. மேலும், திருடிய நகைகளை, அவன் தங்கக் கட்டிகளாக மாற்றியுள்ளான்.அவனை கைது செய்த போலீசார், மூர்த்தியிடம் இருந்து, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement