Advertisement

நீதித்துறையில் புரட்சி தேவை: சீர்திருத்தம் அல்ல: ரஞ்சன் கோகெய் 'சுளீர்'

புதுடில்லி: சமானியனுக்கு சேவை செய்ய நீதித்துறையில் புரட்சி தேவை, சீர்திருத்தம் தேவையில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகெய் கூறினார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள தீபக்மிஸ்ரா வரும் அக்டோர் 2-ல் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பிறகு ரஞ்சன் கோகெய் அப்பொறுப்பை ஏற்கிறார். இந்நிலையில் டில்லியில் ராம்நாத் கோயங்கோ மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ரஞ்சன் கோகெய் பேசியது,
நீதித்துறை ஒரு சமூக நம்பிக்கைக்குரிய மிகப்பெரிய அமைப்பு. அரசியல் அமைப்புசட்டங்களை முன்னி்ன்று பாதுகாக்கும் காவலன் தான் நீதித்துறை. ஜனநாயகத்தை பாதுகாப்பதில் முதல் ஆளாக வந்து நிற்பவர்கள், சுதந்திரமான பத்திரிகையாளர்களும், நீதிக்காக ஓங்கி குரல் கொடுக்கும் நீதிபதிகளும் தான் என சொல்கிறார்கள் அதை நான் ஓப்புக்கொள்கிறேன். அதே நேரத்தில் நீதியை காக்க ஓங்கி குரல் எழுப்பும் நீதிபதிகளும், சுதந்திரமான பத்திரிகையாளர்களும் தான் ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்பது எனது கருத்து, எனவே சமானியனுக்கு சேவை செய்ய நீதித்துறையில் புரட்சி தான் தேவை. சீர்திருத்தம் தேவையில்லை. என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (26)

 • Srinivasan Desikan - chennai,இந்தியா

  இப்​போ​தெல்லாம் நாங்கள நீதிது​றை​யை நம்புவதில்​லை காரணம் சாமனியனுக்கு ஒரு நீதியும் பணம் ப​டைத்தவர்களுக்கும் ஆளும் வர்கத்தினருக்கும் ஒரு நீதி ​போய்​கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல சாமனியனுக்கு தண்ட​னை என்றால் உட​னே நீதிமன்றம் தன்னு​டைய் தீர்ப்​​பை தாமதம்​செய்யாமல் வழங்குகிறது. அ​தே​நேரத்தில் உயர்பதவி மற்றும் அரசியல் அந்தஸ்தூ உள்ள்வர்களுக்கு சிலரு​டைய உத்த்ரவிற்காக காத்திருக்கிறது. ஆக நிச்சயம் நீதிது​றையில் உள்ளவர்கள் மனுநீதி ​சோழன் ​போன்றவர்கள் இருந்தால் மட்டு​மே இன்​றைய சூழலில் நியாயம் கி​டைக்கும்

 • R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா

  எல்லாம் சரி. இந்த ஆளு சொந்த சொத்து கணக்கை வெளியிட்டுள்ளாரா ?? முதலில் அதை கவனிங்க. பாக்கியெல்லாம் அப்புறம்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  "பச்சைத்" திராவிடர்களுக்குப் பிடித்த வார்த்தை ஆயிற்றே ????

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  நிச்சயமாக நீதித்துறையில் புரட்சி தேவை. சாமானியனுக்கு தெரிந்த நீதியை சில நீதிபதிகள் சுத்தமாக மறைத்துவிட்டு வேறு பல காரணங்களுக்காக குற்றவாளிகளுக்கு சாதகமாக கொடுக்கும் தீர்ப்புகள் பின்னர் மேல்முறையீட்டில் திருத்தப்பட்டால் அப்படி தீர்ப்பு கொடுத்த நீதிபதிகளுக்கு ஏதேனும் ஒரு சிறிய தண்டனையாவது கொடுக்கப்பட வேண்டும். உதாரணமாக குமாரசாமியின் தீர்ப்பு, 2G வழக்கில் சைனியின் தீர்ப்பு, சிதம்பரம் குடும்பத்திற்கு தொடர்ந்து எல்லா நீதிமன்றங்களிலும் ஜாமீன் போன்றவை. ஆனால் நான் சொல்லும் புரட்சியை இவர் ஒத்துக்கொள்ள மாட்டார்.

 • Mohan Kumar - chennai,இந்தியா

  'solvadhu yaarkkum elidhu, but do that is not easy at all. Here, they do not the difference between 'advice' and 'suggestion' all are advising without knowing the subject, even. So your JOB is over. Do the same i.e. beating the same .......... Neither puratchi is going to take place nor courts are going to change their attitude. Summer vacation, Christmas or New year vacation and so on. ENJOY

 • Navasudeen - covai,இந்தியா

  பொறுப்புக்கு வரும்போது எல்லாம் சொல்லுவாங்க வந்தபின் எல்லாம் மாறிடு வாங்க

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  தினம் ஒரு பொய்யையே தலைப்பாக போட்டு வியாபாரம் செய்யும் தவறான சில துறைகளில் வெளியிடப்படும் செய்திகளை நீதிமன்றங்கள் தானாக முன்வந்து ஆராய காவல் துறையினர்களை ஈடுபடுத்தி கைது செய்தாலே மக்களுக்கு எது உண்மை என்று தெரியும் முதலில் அதை செய்யுங்கள், அதே போன்று அரசு கட்டிடங்களில் பராமரிப்பு இல்லாமல் காடுபோல் மரங்கள் வளர்ந்து இருக்கும் சாலைகளில் மக்கள் வரிப்பணத்தில் , அரசு வாகனங்களில் பயணிக்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், பொது மக்களுக்கு இருக்கும் அக்கறை இவர்களுக்கு சிறிதும் இல்லை, குடிநீர் ஆதாரங்களில் கழிவுநீரை கலக்கும் மற்றும் அசுத்தம் செய்யும் கயவர்களை நீதித்துறை நேரடியாக கைது செய்யவேண்டும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீண்டும் அந்த செயல்களில் ஈடுபடாத அளவிற்கு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அவர்களை திருத்த முன்வரவேண்டும், பொது மக்கள் அரசு அலுவல்களில் தங்களது தேவைகளுக்காக தினம் தினம் நடையாய் நடந்து தங்களது வாழ்க்கையே தொலைக்கும் நிலையில் இருப்பதால் நடுத்தரகர்களை ஒழித்து குறிப்பிட்ட காலத்திற்குள் வேலைகளை முடித்து கொடுக்க ஆணை இடவேண்டும், இவைகள்தான் நீங்கள் கூறிய புரட்சி, நீங்கள் பேசியதோ மட்டும் இல்லாமல் இவைகளை நிறைவேற்றினால் நீங்கள் சொல்வது , செய்வது உண்மை, பார்ப்போம் நீங்கள் நீங்களாக செயல் படப்போகிறீர்களா அல்லது ஜனநாயக அடிப்படையில்.,.... வந்தே மாதரம்

 • Navn - Newyark,யூ.எஸ்.ஏ

  என்னது புரட்சியா? அது தமிழ்நாட்டில் தேச துரோக சொல்லாச்சே? இவர் ஒருவேளை ANTI இந்தியனா?

 • Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா

  நல்ல விசயத்தை வரவேற்போம் ,நீதித்துறையில் புரட்சி தான் தேவை. அதாவது இதுவரை வழங்கிய உச்ச நீதிமன்ற நல்ல தீர்ப்புகளை ஆதாரமாக வைத்து COMMON ஜுட்ஜ்மெண்ட் என்று வரையறுக்கலாம் அதே போல் நீதிமன்றம் முதலில் எவ்வாறான வழக்குகள் நீதிமன்றத்திற்கு வரவேண்டும் என்று வரையறுத்தாலே வழக்குகள் குறையும் மேலும் அரசு செய்யும் தவறுகளால் நீதிமன்றத்தில் வழக்குகள் வருகின்றன அதற்கு அரசு சார்ந்த வழக்குகளை மாநிலங்கள் தான் விசாரிக்கும் என்று வரையறுத்தாலே உடனடியாக தீர்வு கிடைக்கும் மேலும் துறை ரீதியான வழக்குகளை விசாரிக்க ஆணையும் அமைக்க மத்திய அரசும் நீதிமன்றமும் சட்டம் மற்றும் உத்திரவிடணும் மாநிலங்களுக்கு இதனால் மக்கள் சேவை கிடைக்கும் தவறு நடக்காமல் இருக்க மேலும் LAND RELATED வழக்குகள் நீதிமன்றத்திற்கு வர கூடாது ஏன் என்றால்அரசு அதிகாரிகள் செயலால் தான் இவ்வாறான வழக்குகள் வருகின்றன இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்றால் வில்லங்க சான்றிதழ் தொடர்ச்சி உள்ள சொத்தின் ஆவணங்கள் தொடர்பு இல்லாத நபர்களை குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசு சட்டம் இயற்றினால் தவறுகள் நடக்காது அதே போல் நீதிமன்ற லேண்ட் ரிலேட் வழக்குகள் பதியும் போது வில்லங்க சான்றிதழ் தொடர்ச்சி ஆவணங்கள் இல்லாமல் வழக்கு தொடுக்க முடியாது என்று அறிவுறுத்தினாலே யாரும் பாதிக்க மாட்டார்கள் சட்டம் அனைவருக்கும் சமம் என்பதினை நீதிமன்றம் உணர்ந்து இதை அமுல்படுத்தனும் சு மோட்டோ அடிப்படையில் நடக்கும் வழக்கினை குறைக்க ஆய்வு செய்யவும் முன் வரணும்

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  சீர்திருத்தம் என்பது ஆதரிக்க வேண்டியது .... புரட்சி என்பது அடக்கப்பட வைண்டியது .... இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்து பேசவேண்டும் ....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சாமானியனுக்கு சேவை செய்ய நீதித்துறையில் புரட்சி தேவை..புரட்சி என்பது ஒரு குற்றத்திற்குண்டான தண்டனை இந்தியாவில் உள்ள கீழ் நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றம் வரை ஒன்றாக இருக்க வேண்டும்... மேல்முறையீடு கிடையாது...

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  ஊடக சுதந்திரத்தைக் காக்க போராடியதற்காக இதே ராம்நாத் கோயங்காமீது இந்திரா காந்தி பல அநியாய பொய்வழக்குகளைப் போட்டார் .அப்போது நீதிமன்றங்கள் அவருக்கு கொடுத்த தொல்லைகளை மறக்கமுடியுமா? தினசரி செய்திகளை முன் சென்சார் செய்த பின்னே வெளியிடலாம் என ஆக்கி பலநாள் அவரது பத்திரிகையையே வெளிவராமல் இந்திரா செய்தபோது என்னவொரு மவுனம்?( அப்போ உங்கள் தந்தை இந்திராவின் கைத்தடியாக இருந்தார்) அந்த கேடுகெட்ட இந்திராவைத்தான் இன்றும் டுமீளர்கள் கொண்டாடுகிறார்கள் ,.அதே நேரத்தில் கொலீஜியதாலேயே உருவாக்கப்படும் நீதித்துறையின் செயல்பாடுகளுக்கு சம்பந்த சம்பந்தமில்லாமல் மோடியை சாட்டுகிறார்கள் . இந்தப் பாவத்துக்கு ஈ பி எஸ் ஓ பி எஸ் ஸும் சுடலையும்தான் ஆள்வதற்குக் கிடைப்பர். மதிப்புக்குரிய நீதிபதி கோகோய் தனது தந்தை அசாம் முதல்வராக செய்த அநியாயங்களை பற்றி பேசுவாரா ? .அவரை எதிர்த்துப் போராடிய அசாமிய இளைஞர்கள் கதி என்னானது? புரட்சிக்கு பல அர்த்தங்களுண்டு கோகோய்

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  .//////s t rajan - chennai,இந்தியா 13-ஜூலை-2018 05:38 புரட்சி என்றால் கொள்ளை அடித்து விட்டு சட்டம் இயற்றுபர்களாக சட்ட சபைக்கும் பாராளுமன்றத்த்திற்கும் வருவதைத் தடுக்குமா உங்கள் சீர்திருத்தம். ஐந்து ரூபாய் பிக்பாக்கெட் அடிப்பவனை ஜெயிலில் கேவலமாக நடத்திவிட்டு கோடி கோடியாக கொள்ளை யடிப்பவர்களை ராஜ மரியாதையுடன் நடத்துவது மாறுமா. குறிப்பாக பணக்காரனுக்கும் படித்த அரசியல் கொள்ளையர்க்கும் பெயில் ஒன்றுமறியா பாமரனுக்கு ஜெயில் என்ற நிலை மாறுமா. கடனைத் திருப்பித்தாரா பெரும் முதலைகள் வெளிநாடு தப்பி செல்வதும் வெள்ளத்தால் வறட்சியால் துன்புறும் விவசாயிகளை வருத்துவதும் மாறுமா..... இதற்கெல்லாம் மேலாக இட ஒதுக்கீடு என்று சொல்லிவிட்டு தன குடும்பத்திற்க்கே பதவி பட்டம் என்று வாழும் குடும்பக் கொள்ளை முடிவுக்கு வருமா ? இதெல்லாம் செய்தால் சீர்திருத்தம் என்று சொல்லலாம். செய்வீர்களா ?///// - அன்பரே, உங்களின் எதிர்பார்ப்புக்கள் ஓர் நாள் நம் இந்தியாவில் நிறைவேறும், அதற்கு இறைவனும், நல்லுள்ளம் கொண்ட இளைஞர்களும் முயற்சித்து நிறைவேற்றுவார்கள் எனலாம்.

 • spr - chennai,இந்தியா

  இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று சொன்னால் பரவாயில்லை பதவிக்கு வருபவர்கள் இப்படி உளறுவது இயல்பாகிவிட்டது. புரட்சி என்றால் எந்த துறைக்கும் இல்லாத நீதிமன்றங்கள் மட்டுமே அனுபவிக்கும் வருடாந்திர விடுமுறையினை இனி விட்டுக்கொடுப்பாரா? இல்லை குற்றவாளிகளுக்கெதிரான சாட்சியங்கள் முறையாக சமர்ப்பிக்கப்படாமல் இருந்தால் (குற்றம் நடந்திருக்க வாய்ப்புண்டு என தீர்மானமாகத் தெரிந்தும்), குற்றவாளிகளை அதனை ஒரு காரணமாக் காட்டி விடுதலை செய்யாமல் மறு விசாரணை செய்து முறையான ஆவணங்களை சாட்சியங்களை சமர்ப்பிக்குமாறு சிபிஐ போன்ற காவற்துறை அமைப்புக்களுக்கு நிபந்தனை விதிப்பாரா அல்லது அவர்களே வழக்கை வாபஸ் செய்தால் மட்டுமே விசாரணையை முடிப்பேன் எனச் சொல்லுவாரா இல்லை கோழி சண்டை கொத்தவரங்காய் பொரியல் என முக்கியமில்லாத வழக்குகளை ஒதுக்கிவிட்டு முக்கியமான வழக்குகளை முதலில் விசாரிப்பாரா என்ன புரட்சி செய்யப்போகிறார்?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  வழக்குகள் தேங்கிக்கிடக்கும் நிலையை பார்த்தல் இது நீதித்துறை அல்ல - அநீதித்துறை...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  "நீதித்துறை ஒரு சமூக நம்பிக்கைக்குரிய மிகப்பெரிய அமைப்பு" - நீதித்துறை ஒரு சமூக நகைப்புக்கு உரிய மிகப்பெரிய அமைப்பு என்று இருக்கவேண்டும்... வழக்குதொடுக்க ஒருவன் நீதிமன்றத்தை நாடினால் அவனுக்கு தரித்திரம் பிடித்து விட்டது என்று அர்த்தம்... சிறிய வழக்குக்களுக்குக்கூட வக்கீல்கள் வாங்கும் கட்டணத்தை இங்கு யாராவது சொன்னால் பொதுமக்களுக்கு புரியும்...

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ஐயா, யார் யாரை வைத்து புரட்சி செய்வது?, நாட்டில், அயோக்கியர்களும் போலி உத்தமர்களும், ஊராருக்கு மட்டுமே உபதேசம் அதை நான் கடைபிடிக்க மாட்டேன் என்பவர்களும் தானே, நாட்டில் நிறைய வாழ்கிறார்கள். அவர்களை சீர்திருத்தி, நேர் வழியில் கொண்டு வரத்தான், பிரதமர் மோடிஜி கஷ்டப்பட்டு கடமையாற்றுகிறார், அதை பொறுக்காமல், பலரும் அவர்களின் வாய்க்கு வந்தபடி மோடிஜியை திட்டுறாங்க. இப்படி இருக்கு, இன்றைய நாட்டு நடப்பு, ஐயா.

 • Darmavan - Chennai,இந்தியா

  இந்த மாதிரி பேச்சே நீதித்துறையின் மரியாதையை கெடுக்கிறது. சமீப காலங்களில் இவர்கள் தந்த தீர்ப்புகள்,(சல்மான்கான், நவஜோத் சிங் சித்து) நீதிமன்ற உள்சண்டையை தெருவுக்கு கொண்டு வந்ததும் இவரை கண்ணியமாக நினைக்க தோன்றவில்லை. இவர் ஒரு கம்யூனிஸ்ட் போல் பேசுவது வேதனை.

 • s t rajan - chennai,இந்தியா

  புரட்சி என்றால் கொள்ளை அடித்து விட்டு சட்டம் இயற்றுபர்களாக சட்ட சபைக்கும் பாராளுமன்றத்த்திற்கும் வருவதைத் தடுக்குமா உங்கள் சீர்திருத்தம். ஐந்து ரூபாய் பிக்பாக்கெட் அடிப்பவனை ஜெயிலில் கேவலமாக நடத்திவிட்டு கோடி கோடியாக கொள்ளை யடிப்பவர்களை ராஜ மரியாதையுடன் நடத்துவது மாறுமா. குறிப்பாக பணக்காரனுக்கும் படித்த அரசியல் கொள்ளையர்க்கும் பெயில் ஒன்றுமறியா பாமரனுக்கு ஜெயில் என்ற நிலை மாறுமா. கடனைத் திருப்பித்தாரா பெரும் முதலைகள் வெளிநாடு தப்பி செல்வதும் வெள்ளத்தால் வறட்சியால் துன்புறும் விவசாயிகளை வருத்துவதும் மாறுமா..... இதற்கெல்லாம் மேலாக இட ஒதுக்கீடு என்று சொல்லிவிட்டு தன குடும்பத்திற்க்கே பதவி பட்டம் என்று வாழும் குடும்பக் கொள்ளை முடிவுக்கு வருமா ? இதெல்லாம் செய்தால் சீர்திருத்தம் என்று சொல்லலாம். செய்வீர்களா ?

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  ஓங்கி குரல் எழுப்பும் நீதிபதிகளும், சுதந்திரமான பத்திரிகையாளர்களும் தான் ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்பது எனது கருத்து.. ஆனால் அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுத்தால் மாவோயிஸ்டு என்று செய்தி போடுது பத்திரிகைகள். அரசு ஏவிவிட்ட ஏவல்துறை அவர்களை கண்ட சட்டப்பிரிவுகளின் கைது செய்தால் உண்மை தெரிந்தே, விசாரிக்காமல் அந்த அப்பாவிகளை காவலில் வைக்க உத்தரவிடுவது நீதிபதிகள்... இப்படி சிறைக்குள் வாடும் லட்சக்கணக்கான அப்பாவிகளை என்ன செய்வீர்கள் யுவர் ஹானர்?

 • Sandru - Chennai,இந்தியா

  மிகவும் பொருத்தமான அறிக்கை. நீதி துறையில் தற்போது காணப்படும் திறமையின்மை , ஊழல், தீர்ப்பை தாமதப்படுத்துதல் , ஆளும் கட்சி சார்பு தீர்ப்புகள் போன்றவற்றை அறவே களைய வேண்டும்.

 • Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ

  சீர்திருத்ததுடன் கூடிய புரட்சி தேவை. தொலை நோக்கில்லாத புரட்சி என்பது....தொழிலாளர், விவசாயிகளின் திடீர் புரட்சி போன்றது. கன்னியவாங்கள் அதிகம் உள்ள நீதித் துறை, நாடு, நாட்டின் வளர்ச்சி, சமுதாயத்தில் அமைதியான வாழ்கை எல்லாம் அடங்கியது.

 • nicolethomson - bengalooru,இந்தியா

  இன்றைய நிலையில் ரவுடிகளும் ரியல் எஸ்டேட் மன்னர்களும் தன் பெயர் பின்னால் போடுவது BL என்ற நீதித்துறை சம்பந்தபட்ட பட்டத்தையே யுவர் ஹானர், இதில் சீர்திருத்தம் தான் தேவை அல்லவா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement