Advertisement

எல்லையோர கிராமங்களின் வளர்ச்சிக்கு நிதி

புதுடில்லி:'எல்லை பகுதிகளில் உள்ள கிராமங்களின் வளர்ச்சிக்காக, 1,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது' என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:சர்வதேச எல்லைகளில் உள்ள கிராமங்களின் வளர்ச்சியில், மத்திய அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. நாடு முழுவதும், 17 மாநிலங்களில், சர்வதேச எல்லைகள் உள்ளன.அந்த பகுதிகளில் உள்ள கிராமங்களின் வளர்ச்சிக்காக, 2017 - 18ம் நிதியாண்டில், 1,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. எல்லையோர கிராமங்களின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதி, ஆண்டு தோறும் அதிகரித்தபடியே உள்ளது.சர்வதேச எல்லைகளில், 61 மாதிரி கிராமங்களை ஏற்படுத்த, 126 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த தொகை, மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மாதிரி கிராமங்களில், குடிநீர் வசதி, பள்ளிக்கூடங்கள், சமுதாயக் கூடங்கள், சுகாதார மையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும்.சர்வதேச எல்லைப் பகுதிகளில் இருக்கும் கிராம மக்களின் வளர்ச்சிக்காக, அரசு, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement