Advertisement

மாற்றுத்திறனாளி பணியிடத்திற்கு அரசாணை

சென்னை:அரசின் நேரடி நியமனங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016ன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கு, அரசுப்பணிகளில், 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, ஏற்கனவே அரசாணை வழங்கப்பட்டு உள்ளது.இந்த ஒதுக்கீட்டை செயல்படுத்தும் வகையில், 'தொகுதி, ஏ - பி' என்ற இரு பிரிவுகளில் உள்ள நேரடி நியமனங்களில், 235 பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.இந்த விபரம், அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement