Advertisement

2019-ல் 50 பொதுக்கூட்டங்கள்-100 லோக்சபா தொகுதிகள்: மோடி தயார்

புதுடில்லி: பிரதமர் மோடி அடுத்தாண்டு நாடு முழுவதும் தொடர்ச்சியாக 50 பொதுக்கூட்டங்களை நடத்தி தேர்தல் பிரசாரத்தை துவக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி பா.ஜ. பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இதன் படி பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்திட தயாராகி வருகிறார். இதுகுறித்து பா.ஜ. வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது:


2019-ம்ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பா.ஜ. மூத்த தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் 50 பொதுக்கூட்டங்கள் நடத்திட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பிரதமர் மோடி அடுத்தாண்டு பிப்ரவரியில் 50 பொதுக் கூட்டங்களை நடத்தி 100 லோக்சபா தொகுதிகளில் தனது தேர்தல் பிரசாரத்தினை துவக்க உள்ளார்.


லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பாக 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளி்ல் பா.ஜ. தனது பிரசார பொதுக்கூட்டங்களை நடத்தி முடித்திட முடிவு செய்துள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (68)

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  உலகத்திலேயே ஆளே இல்லாத வெறும் நாற்காலிகளிடம் தொண்டை தண்ணீர் வற்ற அரசியல் பேசும் இரண்டு கட்சிகள் பாஜக வும், அதிமுக வும் தான். இதுக்கெல்லாம் ஒரு மிகப் பெரிய தைரியம் வேண்டும். (ஆமா, கிளிசரின் நிறைய வாங்கி வைத்தாச்சா? - கண்ணை கசக்கி கண்ணீர் விட).

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  //2019-ல் 50 பொதுக்கூட்டங்கள்-100 லோக்சபா தொகுதிகள்// - ஒரே ஒரு கல்தா..

 • Rajan - Coimbatore,இந்தியா

  The Legend of India The Iron man and the Iron man of Future Royal India The Real Humanity in Politics Never loose till end இந்தியாவின் தவப்புதல்வன் பாரத மாதாவின் உண்மை புதல்வன் திறமைக்கு என்றுமே தோல்வி இல்லை

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  நாட்டின் வளர்ச்சிக்காக 14 வகையாக இருந்த வரியை ஒழித்து ஒரே வரி, GST வரி கொண்டு வந்தது சாதனை, பாகிஸ்தான் போன்ற தீவிரவாத நாடுகள் நம் பணம் அடித்து எல்லையில் பயங்கர வாதத்தை ஏற்படுத்திய மற்றும் அரசுக்கு வரி கட்டாமல் கருப்பு பணத்தை பதுக்கிய கொல்லியர்களுக்கு எதிராக பணம் மதிப்பிழப்பு, லேட்டா ஆனாலும் லேட்டஸ்ட் ஆக கொண்டு வந்த காவிரி மேலாண்மை வாரியம், உலகநாடுகளிடையே இந்தியாவுக்கு என கம்பீரம் என்று அணைத்து வகையிலும் இந்தியாவை ஒளிர செய்த நரேந்திர மோடிக்கு இணையாக யார் இருக்கிறார்கள். கூட்டணி அரசு என்ற பெயரில் கொள்ளை அடித்த காங்கிரஸ் இந்திரா மீண்டும் வர வேண்டுமா? மோடிஜியை விட்டால் தற்போது யாரும் இல்லை என்பது தான் உண்மை .

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  காங்கிரஸ் இந்திரா தன்னை அறியாமலே மோடிஜிக்கு நன்மை செய்கிறது, பல நாடுகளுக்கு சென்றது குடும்பத்தோடு அல்ல, மசாஜ் கிளப்புக்கும் அல்ல, அரசு முறை பயணம், ஆக பூர்வ பயணம் உடனடியாக விளைவு தெரியாது போக போக தான் தெரியும், இந்தியாவுக்கு உலக அளவில் ஒரு கம்பீரத்தை கொடுத்தவர், இன்று விளையாட்டு துறையில் பதக்கங்கள் அள்ளுகிறார்கள், முறை கேடாய் பணம் வைக்க முடியாது என்கிற நிலை உருவாக்கி இருக்கிறது, கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் பதை பதைக்கிறார்கள், ஊழல் வாதிகளுக்கு ஒரு பயம் உட்பட்டு இருக்கிறது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை, மோடிஜியின் கால் தூசுக்கு கூட ஒப்பு வரமாட்டான். எளிமையான முதல்வர் ஆக இருந்த மாணிக் சர்க்கார் அவர்களை பிரதமராக முன்னிறுத்துவார்களா? இப்போது உலா எதிர் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேய் அவர்களை முன்னிறுத்துவார்களா ??

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  இன்றைக்கு மோடியை விட்டால் இந்தியாவிற்கு ஒரு தகுதியான தலைவன் இல்லை என்பதே உண்மை. அவருடைய நிர்வாக, பொருளாதார சீர்திருத்தங்கள் நீண்ட கால அளவில் இந்தியாவிற்கு பலன் தரும். கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட சீரழிவுகளை சரி செய்யவே சரியாய் இருந்திருக்கிறது. எனவே இன்னுமொருமுறை அவர் பிரதமராக வரவேண்டும். அப்போதுதான் நாட்டை வளர்ச்சி பாதைக்கு திருப்ப முடியும் என்பதுதான் உண்மை. ஆனால், அவருடைய வளர்ச்சி கோசம்தான் சற்றே நெருடுகிறது. மக்களுக்காகத்தான் வளர்ச்சி, அந்த வளர்ச்சி மக்களை சார்ந்தேதான் இருக்க வேண்டும். இயற்கையை அழித்து வரும் வளர்ச்சி நிலைக்காது என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 • ssk - chennai,இந்தியா

  எங்கள் மாசற்ற மாணிக்கம் மோடி.. ஓய்வுக்கு ஒய்வு கொடுத்து உழைக்கும் எங்கள் வைரம் நீ. நீர் உயர எங்கள் இந்திய மக்கள் உயர்வார்கள் ....தன் குடும்பத்திற்கு உழைக்கும் திராவிட வேடதாரிகள் விட நீ ஒரு எவ்வளவோ மேல்... எங்கள் காவேரி கொண்டாண்ணே ... நீ புடம் போட்ட தங்கம்... நீ நல்லவனின் நாயகன்... உங்களுடைய ஆட்சி இன்னும் பத்து ஆண்டுகள் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் .... எங்கள் குடும்ப வோட்டு உங்களுத்தான்.... முடிவாக 2019+2024 = Modi.

 • smoorthy - bangalore,இந்தியா

  உங்களுக்கு (பிஜேபி) என்னப்பா கோடியில் கொட்டி குடுக்க கார்பொரேட் நிறுவனங்கள் உள்ளன. ஏற்கனவே உங்கள் கணக்கில் கோடி கணக்கில் உள்ளது. பிறகு என்ன கவலை. 50 என்ன 100 பொது கூட்டங்கள் போடலாம். இந்த கோடிகள் செலவினங்கள் தேர்தல் செலவில் சேர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையம் ஏன் சட்டம் இயற்ற வில்லை. அப்படி ஒரு சட்டம் இருந்தால் இது போல் செலவு செய்வார்களா?

 • Power Punch - nagarkoil,இந்தியா

  400 தொகுதிகளில் 4000 கூட்டம் போட்டாலும் தண்ணீர் குடிக்க போவதுதான் மிச்சம்....

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  கைப்புள்ள...மொதல்ல கண்ணை டெஸ்ட் பண்ணு...இல்லேன்னா ...கண்டிப்பா உன் ஒட்டு கைக்கு தான்....

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  கைப்புள்ள என்கிற கோழையான தீவிரவாதி ஏன் தனிமனித விமர்சனம் செய்கிறார்? மோ__யிடம் பிச்சை எடுத்து அவரது குடும்பம் சாப்பிடுகிறது என்றால் அதுக்காக எல்லோரும் அப்படியா? இந்த கேடுகெட்ட அரசின் பத்து பைசா கூட நான் சம்பளமாகவோ அல்லது வேறு விதத்திலோ வாங்குவதில்லை. மோ_ என்கிறவரின் கணக்கிலிருந்து கைப்புள்ள க்கு காசு வருதோ என்ன எழவோ தெரியவில்லை . இந்தியாவின் சிற்ப்பிகள் உருவாக்க்கிய உயர்ந்த கல்வி நிறுவனங்களில் படிக்கிற பாக்கியம் எனக்கு இறைவன் தந்ததால் படித்து, கூடவே வேதம், உபநிஷத்துக்களும் பயின்று, வேலை தவறாமல் சந்தியாவந்தனம் செய்து, கோவில்களுக்கு சென்று வழிபட்டு, சீருடனும் சிறப்புடனும் எவர் தயவும் இன்றி - குறிப்பாக- மோ__ தயவு இன்றி - நான் வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்திருக்கிறீர்களா? ஆண்டாள் திருப்பாவையில் ஒரு செய்யுளாச்சும் கைப்புள்ள மற்றும் நண்பர்களுக்கு தெரியுமா? திருவெம்பாவை? ஊர்த்துவரேதஸ் ? நான்கு வேதங்களில், அதர்வண வேதம் தமிழகத்தில் சாதாரணமாகப் பயின்றிருக்க மாட்டார்கள். நான் பயின்றிருக்கிறேன். நான் நாத்திகன் என்றும், திமுகக்காரன் என்றும் மிகத் தவறாக அவர்களாகவே கணித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் திராவிடன் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், பாவம். பெருமாளே இவர்களை மன்னிச்சுடுங்கோ. என்ன எழுதுகிறோம் என்று தெரியாமலே பொய்யான பேரில் என்னென்னவோ கக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுமாதிரி ஆட்கள் எல்லாம் பிஜேபி யின் ஏஜென்ட்டுகளோ? நான் சாப்பிடும் சாப்பாடு எந்த அரசும் போட்டதல்ல. என் உழைப்பு, அரசு சாரா நிறுவனங்களில். இனியேனும் சுயமான அனுமானத்தின் எதையேனும் கிறுக்கவேண்டாம். கைப்புள்ள என்ற பேரில் ஒளிந்துகொண்டு இருக்கும் கோழையான உங்களுக்கு மோ__ பிடித்திருந்தால் அது உங்கள் இஷ்டம். எனக்குப் பிடிக்காதென்பது என் இஷ்டம். உடனே, அவரால தான் நீ சாப்பிடுறே என்று உளறினால்?? //

 • எட்வின்சுவாமிதாஸ்,திருநெல்வேலி. -

  இவர் அடுத்த முறை வென்றால் (ஒருவேளை) பார்லிமெண்டில் தனி மேடை அமைத்து அமர வைத்து , முன்னால் இரு மைக்குகள் வைத்தால் போதும் வாய் பேச்சில் வல்லவராகி வல்லரசாக்கி விடுவார் இந்தியாவை. ஆனாலும் எதிரில் கேள்வி கேட்க ஆளிருக்க கூடாது. கையைத்தட்ட ஆள் வேண்டும்.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  உலக சுற்றுலா முடிந்து உள்நாட்டு சுற்றுலாவிற்கு தயாராகி விட்டார்...வழக்கம் போல தேர்தல் வரை பாராளு மன்றத்திற்கு மட்டம் தான்....பாராளு மன்ற ஜனநாயகத்தில் 19 மணி நேரம் மட்டுமே பாராளுமன்றத்திற்கு வந்த மா பெரும் பிரதமர் இவர்தான்...

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இந்த நாட்டின் ஒரே எதிர்காலம் மோடி மட்டுமே. பிஜேபி கட்சியில் கூட அப்படிப்பட்டவர்கள் வேறு யாருமே இல்லை எனலாம். உலகத்தை கட்டி போடும் தலைவன். இந்தியாவின் பெருமையை, பெயரை, பொருளாதாரத்தை, ஆன்மீக பெருமையை உயரே தூக்கி பிடிப்பவர். இந்த இந்தியாவிற்கு இவரை விட்டால் வேறு கதியே இல்லை. பனிரெண்டு ஆண்டு காலம் மாநில முதலமைச்சர், நான்கு ஆண்டு காலம் ஆக பதினாறு ஆண்டு காலம் அரசியல் பதவியில் இருந்த போதும், எதிரிகளால் கூட ஒரு ஊழலை கூட குறிப்பிட்டு சொல்ல முடியாத அப்பழுக்கற்ற தங்க தலைவன். இந்தியா தான் தனது உயிர் என்று வாழும் இந்த தலைவன் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற பெருமையை எதிர்காலம் நமக்கு தரும். அதில் சந்தேகமே இல்லை.

 • Raja. (Ramnad) - Tamilnadu,இந்தியா

  யார் என்ன சொன்னாலும் மோடி தான் அடுத்த பிரதமர். நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  கருத்து சொல்லும் சில மேதாவிகளுக்கு ஆங்கிலம் தெரியுமா??? இல்லை என்றால் உங்க செயலுகிட்ட கொடுத்து படித்து காட்டச்சொல்ளுங்கள்

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  மோடிக்கு எதிராக அந்நிய நாட்டுக்காரனிடம் காசு வாங்கியவன் மோடியை தவறாகதான் பேசுவான்.. மோடியின் போட்டோவை அலுவலகத்தில் வைத்து சட்டவிரோதமான தொழில் செய்பவன் கைது செய்யும் வரை மோடியை புகழ்வான். இரண்டுமே சுயநலம் கலந்தது. இன்று வரை நேர்மையாக கணக்கு காட்டி ஒழுங்காக வருமான வரி கட்டிவரும் உங்கள் நண்பர் அல்லது தெரிந்தவர் இருந்தால் அவரிடம் கேளுங்கள் உண்மை தெரியும். இங்கே சில நண்பர்கள் வளர்ச்சிக்கு அளவுகோல் தனி நபர் வருமானம் மற்றும் நுகர்வு. வருமானம் அந்த நாட்டின் மக்கள் தொகையை கொண்டு நிர்ணயம் செய்யப்படும். இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் எனவே உற்பத்தியை மக்கள் தொகையால் வகுத்தால் தலா வருமானம் குறைவாகவே இரூக்கும். மக்கள் தொகையை ஏன் குறைக்கவில்லை என கேட்கலாம். 1960 முதல் 1980 வரை இரட்டிப்பாகியது. காரணம் நம் நாட்டின் மத கோட்பாடுகள். அன்றைய ஆட்சி காங்கிரஸ். மேலும் வளர்ச்சிக்கு அளவுகோள் நுகர்வு பொருட்கள்.இதில் பல பொருட்களை (எ.கா. சிமெண்ட், வேளாண்மை இடுபொருள்) ஆகியன சேர்க்கவில்லை. காரணம் இவற்றை சேர்த்தால் வளர்ச்சி குறைவாக இருக்கும் என்று நினைத்து உலக வங்கியில் கடன் வாங்க ஏதுவாக மாற்றியது உலக புகழ் அதி மேதாவிகள் மன்(ண்) மோகன் மற்றும் நானும் அறிஞர் என கூறும் சிதம்பரம் ஆகியோர். தற்பொழுது அனைத்து அத்யாவசிய பொருட்களும் பட்டியலில் சேர்ந்தது மொத்த வளர்ச்சிதான் தெரிகிறது. இது தொடர்பாக தேசிய புள்ளிஇயல் நிறுவனம் மற்றும் உலக வங்கியின் அறிக்கைகளை பார்க்கவும்.

 • Raman - Chennai,இந்தியா

  Brilliant Kaipulla, Tamilselvan, Kuppusamy and many more quite voices in TN. The anti-nationals should be put in dustbin. Ram. Chennai.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மோடியின் வீண் முயற்சி... பொது கூட்டங்கள்... பிரச்சரங்கள் எதுவும் தேவை இல்லை... டில்லியில் இருந்த படியே இப்பொழுது இருக்கும் விலைவாசியை ஐம்பது சதமாக குறையுங்கள்... வெற்றி உங்களதுதான்

 • christopher -

  In modern times , with media everywhere, these types of campaign meetings outdated. it helps poor people in getting money to attend meetings.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  100 லோக்சபா தொகுதிகள்..இவை எல்லாம் வெளிநாடுகளில் இல்லையே...

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  ஊர் சுற்ற, ஒட்டு வாங்க அண்ணன் எப்போதும் தயார் தான், ஐந்து வருடங்களை வாயால் வடை சுட்டே ஓட்டிய பெருமை உங்களை சாரும் ....

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  எவன்டா பகவான். வாங்கித் தின்னுற பயலுகளுக்கு கண்டவன்லாம் பகவானாத் தெரிவான். எல்லோருக்கும் அப்படி இல்லையே. திமுககாரன் சுயமரியாதை உள்ளவன். சமநோக்கு பார்வை கொண்டவன். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதவன். நாலு கார்பரேட் முதலாளிகளுக்காக நாட்டு மக்களையே காட்டிக் கொடுக்கும் கயமைத்தனம் இல்லாதவன். ஆளும் கட்சி பலமில்லாத நிலையிலும் பதவி வெறி பிடித்து அந்த ஆட்சியை கலைக்க ஆயாராம் கயாராம் சூழ்ச்சி செய்ய விரும்பாதவன். தன்மானமிக்க திமுககாரன்னு சொலறதுக்கே தில்லு வேணும்டா.. ... அந்த பெருமை பக்கோடா கட்சிக் காரனுக்கு வரவே வராது.

 • தமிழ் செல்வன் - Salem,இந்தியா

  AAP Started against Congress Now Joined Hands to defeat Modi. Mamtha Started TMC against Congress & CPM Now Joined Hands to Defeat Modi. Sharad pawar Started NCP Against Congress Now Joined Hands to Defeat Modi. Mayawati Started BSP to defeat SP, Vice Versa Now they Joined Hands to Defeat Modi. RJD Started against Congress now Joined Hands to defeat Modi. TDP started Against Congress Now Joined hands to Defeat Modi. TRS Started against TDP & Congress now Joined hands to defeat Modi. DMK started against Congress now joined hands to defeat Modi. Deva Gowda started JDS to defeat Congress now joined Hands to defeat Modi. CPM started against Congress now joined hands to defeat Modi. Shiv Sena Started against Congress Now Joined Hands to defeat Modi. Once against congress, now all Media channels, Intellectuals, Bollywood stars joined hands to defeat Modi. Modi should be defeated if he is an Individual, Organization or party but he is not. He is the hope & Aspiration of Millions of Indians.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  என்னமோ, தமிழக மற்றும் பாண்டிச்சேரி வாழ் மக்கள், 40-எம்பி தொகுதிகளை, போன 2014 பொது தேர்தலில், அப்படியே, சுளையாக அள்ளி, பிரதமர் மோடிஜிக்கு வாரி வழங்கினாமாறியும், ஆனா, அவர், இவர்களுக்கு, எந்த நல்லதையும் செய்யாத மாதிரியும், ஏமாற்றி துரோகம் செய்துவிட்டார் மாதிரியும், தினம் தினம், ஒரே புலம்பல்களும், அலம்பல்களும், வெறுப்புக்களும், காழ்ப்புணர்ச்சிகளும், பரம விரோதி போலவும், சில வாசகர்கள், கமெண்ட்கள் போடுறாங்கப்பா?. மோடிஜி பிரதமராக வந்ததால், முறைகேடுகளில் வருமானம் பெறுவோர்கள் சிலர், இப்ப அக்கம்பக்கம் பார்த்து சம்பாரிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால், அந்த ஆத்திரத்தில் சிலர் அவரை திட்டுறாங்க. மேலும் சிலர், தங்கள் சுய மத வெறியால், மோடிஜி மீது, தப்பு தவறுகளையும், இல்லாததையும் இருப்பது போல இட்டுக்கட்டி சித்தரிக்கிறாங்க. மற்றும் சிலர், அன்னிய தேச NGO காசுக்களுக்காக மெனக்கெடறாங்க, மோடிஜியை திட்ட. இதை பொதுவான வாசகர்கள் புரிஞ்சுக்குங்க.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ////ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா 13-ஜூலை-2018 03:54 அப்பாடா, இன்னும் ஒரு வருஷம் கூட இல்லை..//// - எதற்கு?, உங்க பப்பு குழந்தை அமெரிக்க ஜனாதிபதியாக, சாரி, இத்தாலி பிரதமராக தேர்வாகவா?.

 • தமிழ் செல்வன் - Salem,இந்தியா

  மோடியை கண்டிப்பாக தோற்கடித்து விடுலாம் ஆனால் அவருக்கு நிகராக ஒரு நேர்மையான இரவும் பகலும் கடினமாக நாட்டிற்காக உழைக்ககூடிய ஒரு தலைவரை நீங்கள் தேர்தலில் நிறுத்தி விட்டு மோடிக்கு வோட்டு போடாதீர்கள் என்று சொன்னால் கண்டிப்பாக மக்கள் மோடியை நிராகரிப்பர். கர்நாடகா தேர்தல் ஒரு சிறந்த உதாரணம். குமாரசாமியின் வாக்கு கல்லில் செதுக்க வேண்டிய வாக்கு. எனது விசுவாசம் காங்கிரஸ்க்கு தானே மக்களுக்கு இல்லை. என்னை முதல்வர் ஆக்கியது காங்கிரஸ், மக்கள் இல்லை என்று சொன்னார் முற்றிலும் உண்மை. இன்று காங்கிரஸ் கர்நாடகாவில் அமைச்சர்கள் பதவியை சுழற் நாற்காலி முறையில் ஏலம் விட்டுஉள்ளது. மோடி ஜாதியை பார்த்தோ, மொழியை பார்த்தோ இல்லை மதத்தை பார்த்தோ யாரையும் அமைச்சர் ஆக்கவில்லை, பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன், ஜாவ்டேகர், அருண் ஜெட்லீ இவர்கள் எல்லாம் தேர்தலில் நின்றால் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள். அவர்களுக்கு அரசியல் தெரியாது ஆனால் கடின உழைப்பும் நிர்வாகமும் தெரியும். இருக்கிற அத்தினை தலைவர்களும் அவர்களின் வாரிசுகளும் தமிழ்நாட்டில் எவ்வளவு சுருட்ட முடியுமோ அவளவு சுருட்ட காத்து கொண்டு இருக்கிறார்கள், ஜாதியின் பெயராலும், திராவிடத்தின் பெயராலும்.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  அப்பாடா, இன்னும் ஒரு வருஷம் கூட இல்லை..

 • கைப்புள்ள - nj,இந்தியா

  புகழ் எனும் கட்சி ரவுடி அறிவது, நீ பாரத பிரதமரின் பெயரை கூட சொல்லவில்லை என்றாலும் உனக்கும் உன் குடும்பத்துக்கும் சேர்த்து படி அளக்கும் பகவானே அவர்தான். உன்னை போன்ற நாத்திகன் கும்பிடவில்லை, நிந்திக்கிறான் என்று கடவுள் உன்னை கை விட்டு விடுகிறாரரா என்ன? உனக்கும் சேர்ந்துதான் பகவான் படி அளக்கிறார். அது போலதான் இதுவும். அதனால் நீ ரொம்ப பெருமை பீத்தி கொள்ளாதே, நான் மோடியின் பெயரை கூட உச்சரிப்பதில்லை என்று. நீ என்னதான் நிந்தித்தாலும் நீ மட்டுமல்ல, உன் குடும்பமே உள்ளே தள்ளும் ஒவ்வொரு கவளம் சோறும் மோடி அவர்கள் உனக்கு போட்ட சோறுதான். நன்றாக மூக்கு புடிக்க தின்று கொழுத்து விட்டு அவரையே குறை சொல். ஆனாலும் உனக்கு கடைசி வரை அவர் படி அளப்பார்.

 • ManiS -

  Neenga enna kathinaalum indha arivu ketta tamilnaattu padhargal thirundhaadhu. Vote pannittu pichcha edukkum. Vidunga...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement