Advertisement

குடிநீர் இணைப்பு 67 வீடுகளில் துண்டிப்பு

சென்னை:சென்னையில், மூன்று மாதங்களில், குடிநீர் திருட்டில் ஈடுபட்ட, 67 வீடுகளின் குடிநீர் இணைப்பை, வாரிய அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.இது குறித்து, குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:குடிநீர் இணைப்புகளில், மின் மோட்டார் அமைத்து, குடிநீர் திருடுவது சட்டவிரோத செயலாகும். சென்னையில், மூன்று மாதத்தில், மின் மோட்டார் அமைத்து, குடிநீர் திருட்டில் ஈடுபட்ட, 67 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.குடிநீர் திருட்டு குறித்து பொதுமக்கள், குடிநீர் வாரிய வலைதளம், குறைதீர்ப்பு தொலைபேசி, 044 - 45674567 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.மேலும் சம்பந்தப்பட்ட, பகுதி பொறியாளர்களின் மொபைல் போனிற்கு, குறுஞ்செய்தி மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு, செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement