Advertisement

காஸ் கசிவு தீ விபத்து இளம்பெண் பலி

சென்னை:பரங்கிமலையில், காஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், படுகாயமடைந்த பெண், சிகிச்சைபலனின்றி, மருத்துவமனையில் இறந்தார்.
பரங்கிமலை, மத்தியாஸ் நகரை சேர்ந்த, கணேஷ் என்பவரின் மனைவி, ரேகா, 28. நேற்று முன்தினம் காலை, சமையல் அறை சென்று, 'சுவிட்ச்' போட்ட போது, காஸ் கசிவு காரணமாக, அறை முழுவதும் தீ பற்றியது.அவரை காப்பாற்ற முயன்ற கணவர் உட்பட, ஐந்து பேர் தீக்காயம் அடைந்தனர். அனைவரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், உடல் முழுவதும், 40 சதவீத தீ காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட ரேகா, அன்று இரவு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து, மவுண்ட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement