Advertisement

துணைவேந்தர் நியமனம்: ரத்து செய்ய வழக்கு

மதுரை, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் நியமனத்தை ரத்து செய்ய தாக்கலான வழக்கை,உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை செனட் உறுப்பினர் நாகர்கோவில் மனோகர ஜஸ்டஸ் தாக்கல் செய்த மனு:துணைவேந்தராக உள்ள கிருஷ்ணன் பாஸ்கரை தேர்வு செய்ய, தேடுதல் குழு அமைக்கப்பட்டது. அதற்கு கிருஷ்ணன் பாஸ்கர் உரியநேரத்தில் விண்ணப்பிக்கவில்லை. அவரை தேடுதல் குழுவினர்ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்யவில்லை. அப்போதைய தலைமை செயலர் ராம்மோகனராவிடமிருந்துவந்த அறிவுறுத்தலால் தேர்வு செய்யப்பட்டார். பல்கலை மானியக்குழு விதிகள்படி (யு.ஜி.சி.,) துணைவேந்தர் பதவிக்கு தேர்வு செய்ய,10 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும். இவருக்கு 7 ஆண்டுகள் பேராசிரியர் பணிஅனுபவமேஉள்ளது. இவருக்காக 10 ஆண்டுகள் இணை பேராசிரியராக பணிபுரிந்தால் போதுமானது என விதிகளில் கன்வீனர் குழுதன்னிச்சையாக மாற்றியமைத்தது. கிருஷ்ணன் பாஸ்கர் துணைவேந்தருக்குரிய பணியை மேற்கொள்ள தடை விதிக்கவேண்டும். அவரது நியமனம் செல்லாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், ''மனு நிலைநிற்கத்தக்கதுதானா என்பதை முடிவு செய்ய ஜூலை 17க்குஒத்திவைக்கப்படுகிறது,'' என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement