Advertisement

'90 குளங்கள் ஆக்கிரமிப்பு'

ஆவடி:''ஆவடி தொகுதியில், 90 குளங்களில், பாதிக்கும்மேல் ஆக்கிரமிப்பில்உள்ளன,'' என, அமைச்சர்பாண்டியராஜன் தெரிவித்தார்.ஆவடி அருகே, 119 ஹெக்டர் பரப்பளவில், சேக்காடு ஏரி உள்ளது. இதில், ஏராளமான ஆக்கிரமிப்பு கட்டடங்கள் உள்ளன. மேலும், ஏரி துார்வாரப்படாமல், கொள்ளளவுகுறைந்துவிட்டது.இந்நிலையில், குடிமராமத்து திட்டத்தின் கீழ், 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஏரி துார்வாரும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது.
இதை துவங்கி வைத்து, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன் பேசியதாவது:ஏரி, குளம், குட்டை என,நீர்நிலைகளுக்கு, தமிழில்,35க்கும் மேற்பட்ட வார்த்தைகள் உள்ளன.தமிழ்நாட்டில், 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இதில் திருவள்ளூரில் அதிகம். ஆவடி தொகுதியில் மட்டும், 90 குளங்களில், பாதிக்கும் மேல் ஆக்கிரமிப்பில் உள்ளன. 15 பெரிய ஏரிகள் உள்ளன.
ஆவடி ஏரியை புனரமைத்து, பசுமை பூங்கா அமைக்கும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து, சேக்காடு ஏரி புனரமைக்கும் பணி துவங்கியுள்ளது. இந்த பணிகள், ஒரு மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement