Advertisement

அ.தி.மு.க.,வில் மாவட்டங்களை அதிகரிக்க முடிவு

அ.தி.மு.க.,வில் மாவட்டங்களை கூடுதலாக்கவும், புதிய நிர்வாகிகளை நியமிக்கவும், கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


அ.தி.மு.க., அணிகள் இணைந்த பிறகும், காலியாக உள்ள பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படாததால், முக்கிய பதவிகளை எதிர்பார்த்தோர் ஏமாற்றம் அடைந்தனர். 'தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கு தயாராகிவிட்ட நிலையில், காலியாக உள்ள கட்சி பதவிகளை நிரப்பி, அ.தி.மு.க.,வும் தேர்தலுக்கு தயாராக வேண்டும்' என, கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.


சட்டசபை கூட்டம் நடந்து வந்ததால், கட்சியில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. சட்டசபை முடிந்ததும், அலுவல் பயணமாக சிங்கப்பூர் செல்ல, துணை முதல்வர், பன்னீர்செல்வம் திட்டமிட்டிருந்தார். கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால், துணை முதல்வர் பன்னீர்செல்வம் தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார்.


அனைவரையும் சமாதானப்படுத்தும் வகையில், புதிய நிர்வாகிகளை நியமிக்க, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.


தற்போது, அ.தி.மு.க.,வில், 51 மாவட்டங்கள் உள்ளன. இதை, 63 மாவட்டங்களாக அதிகரித்து, புதிய மாவட்டங்களுக்கு, மாவட்ட செயலர் மற்றும் நிர்வாகிகளை நியமிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, பன்னீர், பழனிசாமி உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள், ஓரிரு நாளில் ஆலோசித்து, புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. பதவியை எதிர்பார்த்து காத்திருப்போரிடம், இது, மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


- நமது நிருபர் -

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • natarajan - Doha,கத்தார்

    சவத்திற்கு எதுக்கு ஐயா சிகை அலங்காரம்.....

  • Navasudeen - covai,இந்தியா

    51ஐ102 மாவட்டமாக ஆக்கலாம் பன்னீரூ பாதி பழனீ பாதி எல்லாம் வரும் குப்பத்தொட்டி பஞ்சாயத்து ELECTION பீதி

  • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

    . பன்னீரை கழட்டி விட்டு சசியின் பின்னால் தினகரனுடன் சேர்ந்து செயல் பட்டால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும்.

    • Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா

      அதே போல செயல் படத்தை தலைவரை கழட்டி விட்டு சகோதரி மதுரை சகோதரனுடன் சேர்ந்து செயல் பட்டாள் மட்டுமே தி மு க வை காப்பாற்ற முடியும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement