Advertisement

திருமண செலவுகளை தெரிவிப்பதை கட்டாயமாக்க சுப்ரீம் கோர்ட் யோசனை

புதுடில்லி : 'திருமண செலவுகளை, இருதரப்பினரும் வெளிப்படையாக தெரிவிப்பதை கட்டாயமாக்கினால், வரதட்சணை கொடுமை குறைய வாய்ப்புள்ளது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், விவாகரத்து வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'கணவர் வீட்டார், வரதட்சணை கேட்டு, என்னை கொடுமைப்படுத்துகின்றனர்' என,
தெரிவித்திருந்தார். ஆனால், அந்தப் பெண்ணின் கணவர் வீட்டார், இந்த குற்றச்சாட்டை மறுத்தனர்.


இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் கூறியதாவது: திருமணம் தொடர்பான பிரச்னைகளில், வரதட்சணை தான் முக்கிய பங்கு வகிக்கிறது. வரதட்சணை கொடுமையை குறைப்பதற்கான வழிகளை, நாம் தேட வேண்டும். திருமணச் செலவுகளை, இரு தரப்பினரும், திருமண பதிவு அதிகாரியிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.


இதுபோன்ற நடைமுறைகளால், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் சம்பவங்கள், எதிர்காலத்தில் குறைய வாய்ப்புள்ளது. மேலும், திருமண செலவில் ஒரு பகுதியை, பெண்ணின் பெயரில், வங்கியில், 'டிபாசிட்' செய்வதை கட்டாயமாக்க வேண்டும்.
பிற்காலத்தில், பிரச்னைகள் ஏற்பட்டால், அதை சமாளிக்க, அந்த பெண்ணிற்கு, அந்தப் பணம் உதவியாக இருக்கும்.


இது தொடர்பாக, மத்திய அரசு, தன் கருத்தை தெரிவிக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில், நீதிமன்றத்துக்கு உதவி செய்யும்படி, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (23)

 • sampath, k - HOSUR,இந்தியா

  Courts should pass orders only based on the majority of public opinion and the views of individual should not be passed as rules and regulations

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  படித்து வேலையில் இருப்பவர்கள் சிலர் காதல் திருமணம்செய்து கொள்கிறார்கள்.இதை திருமண செலவு ஏற்படுவதில்லை வரதட்சணை பிறர்ச்சனையும் இல்லை.

 • abdul rajak - trichy,இந்தியா

  திருமணத்தில் பெண் மற்றும் அவரது வீட்டார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் . எனவே மாப்பிள்ளை தான் பிற வீட்டு மண பெண் தன் வீட்டுக்கு வர , தச்சனை (மகர் ) குடுக்க வேண்டும் .

 • Kailash - Chennai,இந்தியா

  இப்போதெல்லாம் படித்த சமூகத்தில் வரதட்சிணை கேட்பதில்லை ஆண்கள் கொடுப்பதை கொடுங்கள் என்று விட்டு விடுகிறார்கள் வரதட்சிணை வேண்டாம் என்றால் எதோ பிரச்னை உள்ளதோ என்று நினைக்கின்றனர், ஆனால் நடுத்தர குடும்பத்து பெண்கள் பையனுக்கு மாதம் இவ்வளவு சம்பளம் வேண்டும் , சொந்த வீடு சொத்துக்கள் தேவை என்று வியாபாரம் பேசுகிறார்கள் பெண்ணின் பெற்றோர். வேலைக்கு போகும் பெண் இதெல்லாம் சம்பாதிக்க துப்புஇல்லாமல் வரப்போகிறவனிடம் எதிர்பார்க்கிறார்கள். அதுபோக பெண்ணின் பெற்றோர் பெண்ணின் சம்பாத்தியம் வேறு வீட்டுக்கு போகுமே என்று பெற்றோர் பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்க யோசிக்கிறார்கள் அதனால் இவ்வளவு கண்டிஷன் போட்டு தள்ளி வைத்து முடிந்தளவு லாபம் பார்க்கிறார்கள். திருமண வயதில் இருக்கும் ஆண்களின் பெற்றோரிடம் நடைமுறையில் இப்படி இருக்கிறதா என்று விசாரித்து கொள்ளவும்.

 • C.Elumalai - Chennai,இந்தியா

  மனைவியாக தன்வாழ்நாள் பூராவும்,புகுந்தவீட்டில் வாழபோகிறவள். குடும்பத்தையே, பாதுகாப்பவள்,குடும்பத்தாரிடம் அனுசரனையாக இருப்பவள், பிறந்த இடத்தில் சுமார் 22 ஆண்டுகள் வரைதான் வாழ்வாள், மீதிகாலத்தை புகுந்தவீட்டில் வாழபோகிறவள்.தாயாக, சேய்யாக,வேலைக்காரியாக, எஜமானியாக, வயதானகாலத்தில் உறுதுணையாக,வாழபோகிறவள். அவளிடம் வரதட்சணை கேட்கும் ஆண் மிருகஜாதியை சார்ந்தவர்கள்.

 • S K NEELAKANTAN - chennai 24,இந்தியா

  ஓரளவுக்கு இங்கு சிறுபான்மை மதத்தினரை சிறிது கட்டுப்பாடும்தான் வைக்க வேண்டும். அது நல்லது.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வாய்ப்பே கிடையாது... எல்லாம் பொய்தான் சொல்லப்போறான்...

 • ஸாயிப்ரியா -

  Off the record தானே உண்மயும் மற்றவர்கள் முன் உண்மை மாதிரியும் பேசுவார்கள்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  நூறுபேருக்கு மேல் திருமணங்களுக்கு அழைக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு இன்னும் பல மாநிலங்களில் உள்ளது ஆனால் அமல்படுத்துவதுதான் இல்லை .வாழ்நாள்சேமிப்பை திருமணம் எனும் ஒரே நாளில் தீர்த்துக்கட்டும் போலி கவுரவ வாழ்க்கைதான் இந்தியர்களை ஏழைகளாக வைத்துளளது . ரேஷன் அரிசியில் வாழ்க்கை நடத்துபவன்கூட கந்துவட்டிக்குக் கடன்வாங்கி காதுகுத்து பூப்புனித நீராட்டுவிழா நடத்தும் அவலம் . சமூக சீர்திருத்தமே நாட்டை உயர்த்தும்

 • Manian - Chennai,இந்தியா

  எங்கள் அனுமதி இல்லாமல் (எங்களுக்கு கட்டிங் தராமல்) இதை செய்தல் புரட்சி வெடிக்கும். போராட்டங்கள் பற்றி எரியும்- தொலபதி அரசாங்கமே சீர் வரிசைகள் முதல் வரத்தடிஸினை வரை தருவது சடடப் பூரவமாகக வேண்டும். அது எங்கள் கடிகை மூலமே நடை பெறவேடும், இல்லையேல் வெளி நாடு சென்று நான் உணாவிரதம் எடுப்பேன், ஐ நா. போவேன்- திருமா கர்த்தர் வரத்தடிச்சினை வாங்குபவர்களை மாணிக்க மாடடார் . ஆகவே, பாபிகள் வாங்குவதில் சர்ச்சுக்கு 50 % அதில் பங்கு தந்தால் எங்கள் ஆசீர்வதிக்க படுவீர்கள் - அதற்கு நாங்க உத்திரவாதம் - சீமான், பாரதிராஜா, காம்ரேடுக்கள்.

 • Mannan - Madurai,இந்தியா

  அரசு அதிகாரிகள் திருமண செலவுக்குகேற்ப லஞ்சம் கேட்பார்கள். இந்தியாவில் பிரச்சினையே அதுதானே?

 • s t rajan - chennai,இந்தியா

  இப்போது எவ்வளவோ திருமணங்கள் வர தட்சிணை இல்லாமல் நடை பெறுகிறது. ஆனால் வரம்புக்கு மீறி செலவு செய்யப்பட்டு ஆடம்பரங்களிலும் மித மிஞ்சிய உணவு வகைகளாலும் பெண்வீட்டாரை துன்புறுத்துவது அதிகமாகி விட்டது. கல்யாண செலவுக்கு ஒரு வரையறை சட்டம் கொண்டு வரப்படவேண்டும். மேலும் சமீப அம்பானி போன்ற செல்வந்தர்களின் அனாவசிய செலவுகளுக்கும் அதீதமான தனி வரி வசூலிக்கப் படவேண்டும்.

 • venkatan - Puducherry,இந்தியா

  லஞ்ச லாவண்யம் போல இதுவும் ஒரு புற்று நோய். வரதட்சிணை இல்லாவிட்டாலும்,வேறு வழிகளில் அதாவது உணவு வகைகளை மாப்பிள்ளை வீட்டாரின் எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வருகிறது உணவை வீணடிப்பதுவும் உண்டு. மற்றபடி பாடாவதியான பழைய நடைமுறைகளும் உண்டு. ஆணடிமை என்ற கொடுமை பெண்ணிற்கு ஒழிய பெண்ணின் பொருளாதார சுதந்திரமும் முடிவெடுக்கும் உரிமையம் வேண்டி நிறய சீர்திருத்தங்கள் தேவை.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  புகழ் எனும் கட்சி ரவுடி அறிவது, நீ பாரத பிரதமரின் பெயரை கூட சொல்லவில்லை என்றாலும் உனக்கும் உன் குடும்பத்துக்கும் சேர்த்து படி அளக்கும் பகவானே அவர்தான். உன்னை போன்ற நாத்திகன் கும்பிடவில்லை, நிந்திக்கிறான் என்று கடவுள் உன்னை கை விட்டு விடுகிறாரரா என்ன? உனக்கும் சேர்ந்துதான் பகவான் படி அளக்கிறார். அது போலதான் இதுவும். அதனால் நீ ரொம்ப பெருமை பீத்தி கொள்ளாதே, நான் மோடியின் பெயரை கூட உச்சரிப்பதில்லை என்று. நீ என்னதான் நிந்தித்தாலும் நீ மட்டுமல்ல, உன் குடும்பமே உள்ளே தள்ளும் ஒவ்வொரு கவளம் சோறும் மோடி அவர்கள் உனக்கு போட்ட சோறுதான். நன்றாக மூக்கு புடிக்க தின்று கொழுத்து விட்டு அவரையே குறை சொல். ஆனாலும் உனக்கு கடைசி வரை அவர் படி அளப்பார்.

 • SaiBaba - Chennai,இந்தியா

  காரைக்குடி பக்கம் செல்லுங்கள். கல்யாணம் பேசும் விதமே வித்தியாசமாக இருக்கும். மாப்பிள்ளை என்று ஒருவன் வேட்டி கட்டியிருந்தால் மட்டும் போதும். படிப்பு, வேலை என்று ஒண்ணும் தேவையில்லை. பொண்ணு வீட்டுல எவ்வளவு தருவாக என்று கேட்பார்கள். எங்களுக்கு இருபது லட்சமும் 5 நகையும் வருது என்பார்கள். அதாவது பெரிய நகைகள் - கண்டசுரம் என்னும் வைர necklace பூச்சரம் என்னும் வைர நெக்க்லாஸ், வைரக்காப்பு, இந்த வகையறாக்களில். அது போக மேல் முறை கீழ்முறை, கல்யாணத்துக்கு வருபவர்கள் அனைவருக்கும் தோல் பையில் பிஸ்கட், ரூபாய், சில்வர் சட்டி என்று. மற்றும் சொந்தக்காரர்கள் அனைவருக்கும் பட்டு சேலை, வேட்டி சட்டை, மூன்று நாள் திருமண சாப்பாடு, பெண்ணிற்கு சீதனம் என்று சொல்லி முடியாது. ஒரு சாதாரண திருமணத்துக்கே ஐம்பது லட்சம் செலவு ஆகும். இதில் போட்டி போட்டு நீ அதிகம் செலவு செய்கிறாயா அல்லது நான் செய்கிறேனா என்று. இந்த கும்பலில் மூன்று பெண்கள் வைத்திருக்கும் நடுத்தர குடும்பங்களின் கதி என்ன? அவன் எங்கே பொண்ணுகளுக்கு செய்யிறது, அவ்வளவுதேன், என்பார்கள். மேற்கூறிய இந்த சட்டத்தினால் இந்த கும்பல் எல்லாம் திருந்தும் என்று நினைக்கிறீர்களா? ஆனால் ஆண்டவனாய் செய்த விஷயம், இன்று பெண் பிள்ளைகள் குறைந்து விட்டன. ஆனாலும் எங்களுக்கு பத்து லட்சம் வருது என்று சொல்பவர்கள் குறையவில்லை.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  பெண்களின் கல்வி மற்றும் அவர்களின் வேலை வாய்ப்பே வரதட்சிணை என்ற அரக்கனை ஒழிக்கும் மருந்து. இன்று வரை, இந்திய சமூகம் பெண்களை ஒரு சுமையாகத்தான் பார்க்கிறது. அதன் விளைவே, பெண் சிசுக்கள் கலைக்கப்படுகின்றன. பெண்கள் இந்திய சமூகத்தின் ஆக்கபூர்வ உற்பத்தி காரர்களாக மாறும் வரை, இந்த அவலம் தொடரும். அரசு தான் பெண்களை நமது சமூகத்தினருக்கு ஒரு தூணாக மாற்ற வேண்டும். பெண் இருந்தால், நான் பிழைத்து கொள்வேன் என்று ஒரு குடும்பம் நினைக்கிறதோ, அன்று தான் வரதட்சிணை அரக்கன் ஒழிவான். அதனால் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பெண்களுக்கு தனி கோட்டா கொண்டு வரவேண்டும். ஜாதி அடிப்படையில் உள்ள கோட்டா முறையை நீக்கிவிட்டு, தனி மனித வருமானம் மற்றும் பெண்களுக்கு கோட்டா கொடுக்க பட வேண்டும். அதன் மூலம் தான் ஜாதி கொடுமையும் நீங்கும், ஏழைகளும் உயர்வார்கள், பெண் அடிமைத்தனமும் குறையும்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கொக்கு தலையில் வெண்ணையை வைத்து பிடித்த கதைதான்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement