Advertisement

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை

பாங்காக் : தாய்லாந்தில் 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர் சிக்கிய 'தாம் லுவாங்' குகையிலிருந்து மீட்கப்பட்டனர். இந்த குகை மியூசியமாக மாற்றப்பட உள்ளது.

தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்தில் அமைந்துள்ளது மே சாய் நகரம். மியான்மர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்தின் மலைப்பகுதியில்'தாம் லுவாங்' குகைத் தொடர் அமைந்துள்ளது. கடந்த ஜூன் 23-ஆம் தேதி இக்குகையினை பார்வையிட சென்ற 12 சிறுவர்கள் அடங்கிய கால்பந்து அணியும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் திடீரென பெருமழையியால் குகைக்குள் சிக்கிக் கொண்டனர்.

ஒரு வாரத்திற்குப் பிறகு அவர்கள் உள்ளே சிக்கி இருப்பது தெரிய வந்தது. தாய்லாந்து கடற்படை வீரர்கள், மீட்புக் குழுவினர் மற்றும் சர்வதேச மீட்புக் குழு அணியினரின் முயற்சிகளால் 12 சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் ஜூலை10ம் தேதி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இச்சம்பவத்தால் உலகப் புகழ்பெற்று விட்ட தாய்லாந்தின் 'தாம் லுவாங்' குகை, தற்பொழுது மியூசியமாக மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீட்புக் குழு தலைவரும், முன்னாள் மாகாண ஆளுநருமான நரோங்சக் சோட்டாநாகோர்ன் கூறியதாவது: இந்த குகைப் பகுதி முழுமையாக மியூசியமாக மாற்றப்பட உள்ளது. எப்படி சிறுவர்களை மீட்கும் பணி நடைபெற்றது என்பதை விளக்கும் விதமாக பதிவுகள் இங்கு இடம்பெறும். அத்துடன் பார்வையாளர்களும் பங்கு பெறும் விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. இது கண்டிப்பாக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமான ஒரு இடமாக மாறும், என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மறுபடியும் பார்க்கிறேன் பேர்வழி என்று எவனாலும் உள்ள போய் மாட்டிக்கொள்ள போகிறான்...அப்புறம் கிர்லோஸ்கர்தான் வரவேண்டும்...

 • Shah Jahan - Colombo,இலங்கை

  தாய்லாந்து குகையில் சிக்கிய கால்பந்து பயிற்சியாளரும் வேறு இரு சிறுவர்களும் தாய்-பர்மா எல்லைப்புற பகுதியில் இருந்து வந்ததால் அகதி அந்தஸ்திலேயே இருந்தனர். தாய்லாந்து பிரஜைகள் அல்ல. இப்போது அவர்களுக்கு தாய் அரசு, குடியுரிமை வழங்க முடிவு செய்துள்ளது கருணை அடிப்படையில். இது பௌத்தத்தின் வழிகாட்டல். தாகத்திற்கு தண்ணீர் கேட்டு வந்த ரோஹிங்கிய அகதிகளை அடித்து விரட்டியது மோடி அரசு. இதுதான் ஹிந்துத்வாவின் வழிகாட்டலா?

 • CBE CTZN - Chennai,இந்தியா

  இதுவே இந்தியாவாக இருந்திருந்தால் அந்த குகையும் குகை இருந்த மலையும் காணாமல் போயிருக்கும்.. எங்கள் அரசியவாதிகள் அந்த மலையைச்சுரண்டி பணம் பார்த்திருப்பார்கள்.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  நம்மூர் குண்டுச்சட்டி குதிரை ஓட்டி ஒருவன் கேட்டிருந்தான்.. "அந்த குகைக்குள் இவர்கள் ஏன் சென்றார்கள், தடை செய்ய வேண்டுமென்று".. புது இடங்களை, புது பாதைகளை, புது தடங்களை, தேடுதல், ஆராய்தல், கண்டுபிடித்தல், முயலுதல், இவைகள் மனிதகுலத்தின் முக்கிய உந்துதல்கள். அதற்கு தடை இருந்தால் உடை.. தாயலாந்து அரசின் இந்த திட்ட முடிவு, சிறப்பானது. இரண்டு மூன்று கிலோமீட்டர் குகை பாதையில் பயணம், ஆபத்தான இடங்களில் புழங்க வேண்டிய வழிமுறைகளை அறிய பயிற்சி வாய்ப்பு, சிறு அளவில் நீர் மூழ்கும் பயிற்சி, வெளியே வந்து ஆக்சிஜன் நிறைந்த காட்டில் ஒரு மலைப்பாதை பயணம் என்று பிரமாதமாக இருக்கும். But always remember, Fate loves the Fearless..

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  எல்லாம் சரிதாங்க, ஆனாலும், அந்த குகைக்குள், ஓர் 50 அல்லது 100-அடி தூரத்திலேயே, ஓர் கனமான இரும்பு கிரில் தடுப்பை போட்டிடுங்க, இதனால், எதிர்காலத்தில், மீண்டும் ஓர் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க முடியும் எனலாங்க.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement