Advertisement

இயற்கை வழியில் காய்கறிகளை உற்பத்தி செய்யுங்கள்; பொதுமக்களுக்கு கவர்னர் வேண்டுகோள்

சென்னை : ''வீடுகளில் சேரும் மக்கும் குப்பையை பயன்படுத்தி, இயற்கை உரம் தயாரித்து, அவற்றை பயன்படுத்தி, இயற்கை வழியில் காய்கறிகளை உற்பத்தி செய்ய வேண்டும்,'' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், கூறினார்.


கவர்னர் மாளிகையில், மரங்களிலிருந்து உதிர்ந்து விழும் இலைகளை பயன்படுத்தி, மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. இது குறித்து, சென்னையில் உள்ள, 70 பள்ளிகளின் மாணவ, மாணவி யருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு, இலவசமாக மண்புழு உரம் வழங்கும் நிகழ்ச்சி, கவர்னர் மாளிகையில் நடந்தது.


கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தலைமை ஆசிரியர்களுக்கு, மண்புழு உரம் வழங்கி பேசியதாவது:

சுற்றுச்சூழலை பாதுகாக்க, மரம் மற்றும் செடிகளை வளர்த்து, மண், நீர், காற்று ஆகியவை மாசுபடாமல் தடுக்க வேண்டும். இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை உண்பதால், நோயின்றி, ஆரோக்கியமாக வாழ முடியும்.


தாவரங்களின் இலைகள் மற்றும் பண்ணைக் கழிவுகளை, மண்ணில் மக்கச் செய்து, அவற்றுடன், ஆடு, மாடுகளின் சாணக்கழிவுகளை கலந்து, நிழற்பாங்கானப் பகுதிகளில் வைத்து, மண்புழுக்களை விட்டால், நல்ல மண்புழு உரம் கிடைக்கும். இதை, நிலத்தில் இடுவதால், மண்ணில் உள்ள ரசாயனத்தின் அளவு குறைக்கப்பட்டு, மண்ணின் உயிர் தன்மை மேம்படுகிறது. மண்ணிலுள்ளநுண்ணுயிர் களின் அளவு அதிகரிக்கிறது.


மண்புழு உரம், மண்ணின் கடினத் தன்மையை குறைத்து, செடிகளின் வேர்கள் நன்கு வளருவதற்கான காற்றோட்டம், நீர் பிடித்தன்மை போன்றவை மேம்படுத்துகிறது.


மண்புழு உரத்தில், பயிர் வளர்ச்சி ஊக்கிகளான, அமினோ அமிலங்கள், ஆக்சின், ஜிப்ரலின் போன்றவை அதிகம் உள்ளதால்,
பயிர்கள் நன்கு செழித்து வளர்வதுடன்,விளைச்சலும் அதிகரிக்கும்.


ரசாயன இடுபொருட்களின் பயன்பாட்டை குறைத்து, மண்புழு உரங்களை பயன்படுத்தி, இயற்கை வழியில் உணவு உற்பத்தி செய்து, நம் தேக ஆரோக்கியம் மற்றும் சந்ததிகளை காப்போம். வீடுகளில் சேரும் மக்கும் குப்பைகளை பயன்படுத்தி, அவரவர் வீடுகளில், இயற்கை உரங்களை பெற்று, இயற்கை வழியில், காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


இந்நிகழ்ச்சியில், கவர்னரின் கூடுதல் தலைமை செயலர், ராஜகோபால், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர், மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (18)

 • bal - chennai,இந்தியா

  நல்ல யோசனை...ஆனால் பல மடையர்கள்...இந்த ஜோதிகா படத்தை பார்த்துவிட்டு...தங்கள் மொட்டை மடியில் பல செடிகள் வளர்க்கிறார்கள்....இல்லை வளர்ப்பது போல் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள்...இதனால் பல கட்டிடங்கள் சேதமாகின்றன....இப்படியே போனால் இன்னும் பத்து வருடங்களில் பல கட்டிடங்கள் விழுவது ஊர்ஜிதம்...எதற்கும் ஒரு இடம் பொருள் ஏவல் வேண்டும்...என் வீட்டுக்காரன் கச்சேரிக்கு போனான் என்று செய்யக்கூடாது...

 • Manian - Chennai,இந்தியா

  கவர்னர் சொல்வது முற்றிலும் சரியே. பிரச்சினை என்னவென்றால் (1 ) மக்கள் கேளிக்கை, வெளியில் ஓடடல்களை உண்பது, போனவற்றிற்கு செலவு செய்வதுபோல் அதிக விலை உள்ள இயற்ற்கை உணவுகளை வாங்குவதில்லை (2 ) தண்ணீர் பர்றரக்குறையால் சாக்கடை தண்ணீரில் விளைந்து பச்சை பசேல் ஏன்னு இருக்கும் விலை குறைந்த கீரை, காய்கறிகளை (அதன் விளைவு மூலம் பற்றி தெறியாமல்) வாங்குகிறார்கள். (3 ) இயற்கை உரம் தயாரிக்க பொதுவாக யாரும் இடம் தரமாடார்கள். பினாமி நிலம் என்று மக்களின் பொது நிலங்களை அரசியல் வியாதிகள் படடா போடடு விற்றத்தால் தற்போது உரதாயாரிப்பு (பெரிய அளவில்) இடம் எங்கே? (4 ) இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்றால் கிராமங்களை வழி காட்டிகள் இல்லை. கடையில் வாங்கி தெளிக்கும் உரம் இருக்கும்போது, இதை எல்லாம் யார் செய்வார்கள் என்ற சோம்பேறித்தனம் அதிகம். விவசாயிகளை திருத்துவது மிக கடினம். மேல்தட்டு மாக்கள் இயற்கை உரத்தில் விளைந்த பொருள்களை உண்ணுவதலாலேயே, அவர்கள் பிள்ளை அமெரிக்க பொய் பணக்காரார்கள் ஆகிறார்கள் என்று இரண்டு மூன்று சினிமாவில் காட்டினால் நாடே திருந்தும். சினிமா பொய்களை நம்பும் கிராமத்தார் 70 -80 % ஓடடை விற்பவர்கள் மாறினால்தான் இயற்கை உணவு தினசரி வாழ்வில் வரும். பன்வாரிலால் அதுத்துணை உசிரோடு இருப்பாரா?

 • g.s,rajan - chennai ,இந்தியா

  Agriculture is dying day by day in India ,India was an Agricultural country previously but not now,soon India will import all agricultural products, veges, groceries from abroad.This is going to happen dam sure with in few years. g.s.rajan, Chennai.

 • ஆப்பு -

  அப்பிடியே, பெட்ரோல் உபயோகத்தைக் குறைச்சு மாட்டு வண்டில போகச் சொல்லுங்க...ஜப்பானுக்கு விமானத்துல போய் பொல்லூஷன் பண்ணாம இயற்கையான பாய்மரக் கப்பலிலோ, முடிஞ்சவரை சைக்கிளிலோ போகச் சொல்லுங்கோ...

 • ஆப்பு -

  விவரம் பத்தலை...மக்கள் தொகை அதிகமாக அதிகமாக இரசாயன உரங்கள், 3 மாச பயிர்கள், குறுவை என்றெல்லாம் கடந்து வந்த பாதை இவருக்கு தெரியலை. பழைய 6 மாச நெல்லுக்குப் போனா பாதிபேர் பட்டினிதான். யாராவது 1970 களிலிருந்து நடந்த பசுமைப் புரட்சி பத்தி இவருக்கு சொல்லிக் குடுங்க.

 • abdul rajak - trichy,இந்தியா

  பச்சையாக திங்க கூடிய lettuce , அருகுலா கீரைகள் அதிக சத்து உடையவை . நம் நாட்டு கீரைகளை சமைத்து மட்டுமே சாப்பிட முடியும் . சமைப்பதால் அதில் உள்ள விட்டமின்கள் காணாமல் போய் விடுகின்றன . மினர்லஸ் மட்டுமே கிடைக்கிறது . அரசு யோசித்து பச்சையாக திங்க கூடிய கீரைகள், விதைகள் மலிவாக கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் .

 • மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா

  இதை சொல்வதற்கு நாங்கள் இருக்கிறோம் இதை கவர்னர் எப்படி சொல்லலாம் ஆளுநர் அதிகாரத்தை கையில் எடுக்கிறார் இது வன்மையாக கண்டிக்க வேண்டிய விஷயம் இப்படிக்கு சுடலை மாட சாமி

 • R Sanjay - Chennai,இந்தியா

  வாழ்க்கையிலே உருப்படியான ஒரு விஷயத்தை கூறியிருக்கீறீர்கள் கவர்னர் அவர்களே மிக்க நன்றி. மக்களே இயற்க்கை உரம் மட்டுமே நம்மை நோய்களில் இருந்து நம்மை காக்கும். மக்கள் மீண்டும் இயற்க்கைக்கு மாறுவதே மருத்துவமனைக்கு செல்லாமை நம்மை காக்கும்.

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  பள்ளி தலைமை ஆசிரியர்கள் , போராட்டம் நடத்த நல்ல வழி. நாங்கள் ஊதிய உயர்வு கேட்டால், கவர்னர் எங்களுக்கு மண்ணையும் புழுவையும் அளித்து , எங்களை மண்ணிற்கும் புழுவிற்கும் கீழாக நடத்துகிறார் அப்டின்னு கொழுத்திப் போட்டால் , குறைமாத செல்வன் போன்ற நெறியில்லா நாதாரிகளும் , மதசார்பற்ற மாக்கான்களும், சிறுபான்மை சில்லாண்டிகளும் கோஷம் போட, போராட்டம் செய்ய வசதியா இருக்கும் .

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  அய்யா உங்களின் ஆய்வு பணியை தேவாலயம் வரை செல்லுங்கள். அங்கே பல காலங்களாக பெண்கள் மற்றும் 17 வயதுக்குட்பட்ட ஆண்களின் கூக்குரல் கேட்டுக்கொண்டே. உள்ளது. தி.மு.க. ஆட்சியில் பணம் எண்னும் மெஷின் சத்தத்தால் அது கேட்கவில்லை. இப்பொழுது வங்கி பண பரிவர்த்தனைக்கு மாறியதால் சத்தம் நன்றாக கேட்கிறது

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இயற்கை வழியில் காய்கறிகளை உற்பத்தி செய்யுங்கள் விவகாரம் தெரியாமல் பேசுகிறார்கள்.. முதலில் ரியல் எஸ்டேக்கு பெரிய சங்காக ஊதுங்கள்.. பிறகு விவசாயத்தை பார்க்கலாம்...

 • raguraman venkat - Cary,யூ.எஸ்.ஏ

  நல்லது செய்யும் போது சுடலை, குருமா, வைக்கோல், சைமன், டேனியல் காந்தி போன்றவர்கள் ஏன் ஒன்றுமே சொல்வதில்லை? தவறு செய்யும்போது சுட்டிக்காட்டுவதும், நல்லது செய்யும்போது பாராட்டினால் தானே நடுநிலை அரசியல்வாதிகள்.

 • Manian - Chennai,இந்தியா

  இதை மக்களின் பிரிதிநிதிகளை கலந்தாலோசிக்காமல் கவர்னர் செய்வது எதிர்க்க தக்கது. நாங்கள் இதை எப்போது, எப்படி, யார் மூலம் (வருமான வரி எங்களுக்கு கடடி) செய்யவேண்டும் என்பது தெறியும். அகல் தொன்றி மண் தோணறா காலத்திலே , நைனா சொல்வதுபோல், இவரிடம் கேடடா தமிழர்கள் காய் கறிகள் பயிரிடடார்கள். இது எங்கள் காட்டியே முடிவு செய்ய வேண்டியது. தடா மார்க் இருக்க வெர்றேன்னா வேண்டும்? கவர்னர் அதிக பிரசங்கித்தனமாக திருடர்கள் கழக அங்கத்தினர்களுக்கு அறிவுரை கூறுவது , அவர்களை மண் புழுவுக்கு சமமே என்று சொல்வது எங்கள் உரிமையை பறிப்பதாகும். போராடடம் வெடிக்கும். நாங்கள் பதிவினுக்கு வைத்து இதை சொல்லவேணுடும் என்று இந்ததை மோப்பம் பிடித்து இப்படி செய்தியை வெளி இடுவது தென் பகுதிக்கு புத்தி கொள்வது போல் இருக்கிறது. இதை இவர் நிருத்திக் கொள்ளவேண்டும்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  நல்ல யோசனைகள்... மண்புழு உரம் மற்றும் இயற்க்கையான விவசாய முறை மண்ணின் வளத்தை பாதுகாக்கும்...

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  மனிதர்கள் முதலில், மரம் செடி கொடி புல் பூண்டு தாவரங்களை அழிக்காம பார்த்துக்கனும், அதோடு நீர் நிலைகளையும். இதனால், ஆடு மாடுகள் அமோகமாக ஆரோக்கியமாக வாழும். இதனால், இயற்கை உரம் சார்ந்த விவசாயமும் சாத்தியப்படுங்க.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  புகழ் எனும் கட்சி ரவுடி அறிவது, நீ பாரத பிரதமரின் பெயரை கூட சொல்லவில்லை என்றாலும் உனக்கும் உன் குடும்பத்துக்கும் சேர்த்து படி அளக்கும் பகவானே அவர்தான். உன்னை போன்ற நாத்திகன் கும்பிடவில்லை, நிந்திக்கிறான் என்று கடவுள் உன்னை கை விட்டு விடுகிறாரரா என்ன? உனக்கும் சேர்ந்துதான் பகவான் படி அளக்கிறார். அது போலதான் இதுவும். அதனால் நீ ரொம்ப பெருமை பீத்தி கொள்ளாதே, நான் மோடியின் பெயரை கூட உச்சரிப்பதில்லை என்று. நீ என்னதான் நிந்தித்தாலும் நீ மட்டுமல்ல, உன் குடும்பமே உள்ளே தள்ளும் ஒவ்வொரு கவளம் சோறும் மோடி அவர்கள் உனக்கு போட்ட சோறுதான். நன்றாக மூக்கு புடிக்க தின்று கொழுத்து விட்டு அவரையே குறை சொல். ஆனாலும் உனக்கு கடைசி வரை அவர் படி அளப்பார்.

 • sankar - trichy,இந்தியா

  சுற்று சூழல் அக்கறை செலுத்தும் கோவெர்னரை வாழ்த்துவோம் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement