Advertisement

இங்குமா இலவசம்? இன்ஜி., கல்லூரிகளில் 'ஸ்கூட்டர், லேப்டாப்' அறிவிப்பு

புதுடில்லி : குஜராத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. மாணவர்களை கவர 'ஸ்கூட்டர், லேப்டாப்' என சலுகைகளை அள்ளித் தரும் முயற்சியில் அந்த கல்லுாரிகள் இறங்கியுள்ளன.


இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நாடு முழுவதும் நடந்து வருகிறது. நுாற்றுக்கணக்கான புதுப்புது பாடப்பிரிவுகள் வந்துகொண்டுள்ளன. தொழில்நுட்ப படிப்பு எப்பொழுதும் கைகொடுக்கும் என்பதால் எதைப்படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மாணவர்கள் முடிவு செய்து அதற்கேற்ற பாடப்பிரிவுகளை சிறந்த கல்லுாரிகளில் தேர்வு செய்கின்றனர்.


நாட்டில் மொத்தமுள்ள 3,291 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் 15.5 லட்சம் இடங்கள் உள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை சில ஆண்டுகளாக குறைவாக உள்ளது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையிலும் இதே நிலை தொடருவதாக குஜராத் கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாணவர்களை கவர குஜராத் மாநில தனியார் கல்லுாரிகள் பல வித்தியாசமான முயற்சிகளில் இறங்கியுள்ளன.


இது குறித்து குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இருந்து வெளியாகும் 'மிரர்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: குஜராத் மாநிலத்தில் இன்ஜினியரிங் பாடத்துக்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கை முடிவடைந்து உள்ளது. இதில் மொத்தமுள்ள 55 ஆயிரத்து 422 இடங்களில் 34 ஆயிரத்து 642 இடங்கள் காலியாகவே உள்ளன. இதனால் தனியார் கல்லுாரி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இந்த நிலைமையை சமாளிக்க பல்வேறு புதுப் புது திட்டங்களை அறிவித்து மாணவர்களை கவர முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக கல்வி உதவித்தொகை என்ற பெயரில் கல்வி கட்டணத்தில் பெரும் அளவில் தள்ளுபடி தர முடிவு செய்யப்பட்டுள்ளது.


முதல் 'செமஸ்டருக்கான' கட்டணம் தள்ளுபடி, கல்லுாரி பேருந்து மற்றும் விடுதிக்கு பாதி கட்டணம், இலவச 'லேப்டாப்' போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை குஜராத் மாநில தனியார் கல்லுாரி நிர்வாகத்தினர் அள்ளி வீசியுள்ளனர்.


இதன் உச்சகட்டமாக 'நான்கு ஆண்டு கல்வி கட்டணத்தையும் ஒரே தவணையில் செலுத்தும் மாணவர்களுக்கு நான்காம் ஆண்டு படிப்பு முடிந்ததும் இரு சக்கர வாகனம் இலவசமாக வழங்கப்படும்' என பல கல்லுாரிகள் அறிவித்துள்ளன.


சில கல்லுாரிகள் 'ஆண்டுக்கு 2,500 ரூபாய் கல்வி கட்டணம் செலுத்தினால் போதும்' என ஆடித் தள்ளுபடி போன்ற சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளன.


மேலும் சில கல்லுாரிகள் மாணவர்களை சேர்த்து விட 'கமிஷன் ஏஜன்ட்'களை நியமித்துள்ளன. 'ஒரு மாணவனை சேர்த்துவிட்டால் 10 ஆயிரம் ரூபாய் கமிஷன் தரப்படும்' என அறிவித்துள்ளன. இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


போதிய மாணவர் இல்லாமல் கல்லுாரியை நடத்தி நஷ்டமடைவதை விட இது போன்ற சலுகை மற்றும் இலவச அறிவிப்புகளை வெளியிட்டு மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நிலைக்கு குஜராத் கல்லுாரிகள் தள்ளப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (35)

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  இவர்களுக்கும் "பெருமை பெற்ற கல்லூரி", எமினென்ஸ் சான்றிதழ் மோடி அரசு பரிந்துரை செய்யலாம். ஆயிர கோடியில் மாணவரக்ளுக்கு ஆடி காரே வாங்கி தரலாமே.. வளர்ச்சி என்றால் பெருமை தானே? உலகவங்கியும் பாராட்டுமே.. பக்தாள்ஸ் பெருமிதம் அடைவார்கள். என்ன தவம் செய்தனை.. என்ன தவம் செய்தனை.. மோடி பிரதமரா அடைய மக்களே என்ன தவம் செய்தனை.. ..என்று பஜனை குரல் விண்ணை முட்டும்.

 • raja - Kanchipuram,இந்தியா

  குஜராத் ஒன்றும் வேற்று உலகத்தில் இல்லை. அதுவும் இந்தியாவில் ஒரு பகுதியே,

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அவங்க தான் என்ன பண்ணுவாங்க???? 55000 சீட்டில் போன வருடம் 35000 சீட் நிரப்பப்படவில்லையாம் பொறியியற்கல்லூரியில், அதுஇதுக்குத்தான் இப்படியெல்லாம் சொல்லிப்பார்க்கின்றார்கள்.

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  இந்த மாதிரி கல்லூரிகளை அரசு கையகபடுத்தி மருத்துவமனையாக மாற்றணும்.

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  கல்வி எப்பொழுது வியாபாரமானதோ அப்பொழுதே இதெல்லாம் எதிர்பார்க்க கூடியது... இன்னும் கொஞ்ச நாளில், ஒரு சீட்டுக்கு ஒரு சீட்டு இலவசம் என்றும் வரும்... இது தடுத்து நிறுத்தப்படவேண்டும்...

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  கல்வி வியாபாரம் ஆகி அரை நூற்றாண்டு ஆகிவிட்டது .....

 • g.s,rajan - chennai ,இந்தியா

  No job for Engineers nowadays give them job,what will they do after finishing the course, Many Engineers are already roaming on streets in bikes at high speeds with out any purpose.,they are almost wasting time simply loitering in roads. g.s.rajan, Chennai.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இதான் அந்தெ மோ..டி கும்பலு 22 வருசமா குசராதெ முன்னேத்தி (?) வெச்சிருக்கற லெச்சனெம்....

 • s t rajan - chennai,இந்தியா

  பேசாம இலவச பட்டப்படிப்பு சான்றிதழை முதல் நாளே கொடுத்திடுங்கள்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  உஜாலாவிற்கு மாறுவது போல பொறியியலை விட்டுவிட்டு வேறுதுறையை ஆரம்பிக்க வேண்டியதுதான்...

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட, புதுசா ஒரு மதம் மாறுகிறவங்களுக்கு, அந்த மத கடவுள் அவர்களை காப்பாற்றி சோறு போடறாரோ இல்லையோ(மதம் மாறிய பின்பு), வருடா வருடம் கோட்டாவை நிறைவேற்றனும், அதன் மூலம், அதி உயர் எஜமான் முதல், கீழ் நிலை எடுபிடி அல்லக்கைகள் வரை திருப்தியா சொகமா வசதியா வாழனும்?. (இதையே இந்த செய்திக்கு பொருத்தி பாருங்க).

 • jagan - Chennai,இந்தியா

  பிஸினெஸ்ஸ்னு வந்துட்டா யாதும் ஊரே யாவரும் கேளிர் ....இதுல தப்பு எல்லாம் ஒன்னும் இல்ல...படிச்சவனுக்கு, திறமையுள்ளவனுக்கு வேலை கிடைக்கும் அது தனியார் கல்லூரியோ இல்ல அரசு கல்லூரியோ....

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  15 லட்சம் ..மாடல் ?? இவிங்க டிசைன் அப்படி..

 • கைப்புள்ள - nj,இந்தியா

  புகழ் எனும் கட்சி ரவுடி அறிவது, நீ பாரத பிரதமரின் பெயரை கூட சொல்லவில்லை என்றாலும் உனக்கும் உன் குடும்பத்துக்கும் சேர்த்து படி அளக்கும் பகவானே அவர்தான். உன்னை போன்ற நாத்திகன் கும்பிடவில்லை, நிந்திக்கிறான் என்று கடவுள் உன்னை கை விட்டு விடுகிறாரரா என்ன? உனக்கும் சேர்ந்துதான் பகவான் படி அளக்கிறார். அது போலதான் இதுவும். அதனால் நீ ரொம்ப பெருமை பீத்தி கொள்ளாதே, நான் மோடியின் பெயரை கூட உச்சரிப்பதில்லை என்று. நீ என்னதான் நிந்தித்தாலும் நீ மட்டுமல்ல, உன் குடும்பமே உள்ளே தள்ளும் ஒவ்வொரு கவளம் சோறும் மோடி அவர்கள் உனக்கு போட்ட சோறுதான். நன்றாக மூக்கு புடிக்க தின்று கொழுத்து விட்டு அவரையே குறை சொல். ஆனாலும் உனக்கு கடைசி வரை அவர் படி அளப்பார்.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  இன்னும் கொஞ்ச நாளில், கல்லூரிகள் மாணவர்களுக்கு ஆசை காட்டும் விதமாக, வாழ்க்கை துணைவியையும் நாங்களே செட் அப் செய்து தருவோம் என்று அறிக்கை விடுவார்கள்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  தமிழ்நாட்டில் ஒரு கோயம்பத்தூர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர் திருச்சிக்கு போய் இருந்தாரு. எதுக்கு என்று கேட்ட பொழுது தான் இங்கு மார்க்கெட்டிங் செய்ய வந்து இருக்கிறேன். கூட ஒரு குழுவாக மாணவ மாணவிகளும் வந்து இருக்காங்க. ஒவ்வொரு பேராசிரியரும் இவ்வளவு பசங்களை சேர்த்து விட வேண்டும். அதனால ஒவ்வொரு இடமா போயி நோட்டீஸ் கொடுப்போம், கவுன்சிலிங் பண்ணுவோம், இல்லேனா ரொம்ப கஷ்டம் என்று கூறினார்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  இது மிகவும் வன்மையாக கண்டிக்க வேண்டிய விஷயம். கல்வித்துறை உடனே இதில் தலையிட்டு சம்பந்த பட்ட கல்லூரிகளின் அங்கீகாரத்தை றது செய்ய வேண்டும். சரி இலவச லேப்டாப் மற்றும் பைக்குக்கு பசங்க மசியலேன்னா அப்புறம் என்ன பண்ணுவாங்க? அடுத்த லெவலுக்கு போயி வேற ஏதாச்சும் கொடுப்பாங்கலாமா? இதென்ன கல்லூரியா இல்ல வேற ஏதாச்சுமா? இருக்கிற இன்ஜினியர் போதும். பேசாம கல்லூரிகளை இழுத்து மூடிட்டு போங்க.

 • Manian - Chennai,இந்தியா

  இங்கே படித்து வேலை இல்லை என்ற்றால், வேலை தேடி அலைய இந்த வாணி உபயோகமாக இருக்குமே என்று எண்ணலாம். ஆனால் அது புது வண்டியாக, சைனாவிலிருந்து இறக்குமதி இல்லை என்பதற்கு உத்திரவாதம் இல்லை- ஜூஜூ படேல் இன்சிடியூட் ஆப் பி இன்ஜினீரியரிங், சூரத்து பக்கம். - தமிநாடு இட ஒதுக்கீட்டிலும் இங்கே படிக்கலாம். ரொட்டியோடு அரிசி சோறும் தரப்படும். மாடுகள் பகுதிகள் கிடையாது. கோமியம் குடிக்க கிடைக்கும்- ஆனந் டெய்ரி அசல் சரக்கு..

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  புதிய தொழில் நுணுக்கமாகவே இருக்கிறது...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement