Advertisement

கமல் கட்சியின் துணைத்தலைவராக பேராசிரியர் கு.ஞானசம்மந்தன் நியமனம்

சென்னை : மக்கள் நீதி மையத்தின் முக்கிய நிர்வாகிகள் பட்டியலை, கமல் நேற்று வெளியிட்டார். கட்சியின் துணைத் தலைவராக, பேராசிரியர், கு.ஞானசம்பந்தன் நியமிக்கப்பட்டு உள்ளார்.


நடிகர் கமல், மக்கள் நீதி மையம் என்ற கட்சியை துவக்கி உள்ளார். இந்திய தேர்தல் கமிஷனில், இக்கட்சி முறைப்படி
பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியை, தேர்தல் கமிஷன் அங்கீகரித்ததை அடுத்து, நேற்று சென்னையில் உள்ள அலுவலகத்தில், கட்சி கொடியை, கமல் ஏற்றி வைத்தார்.


பின், அலுவலகத்தின் வெளியே கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில், கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை, கமல் வெளியிட்டார். கட்சியின் உயர்மட்டக்குழு கலைக்கப்பட்டு, அதில் உறுப்பினர்களாக இருந்த, ஸ்ரீப்ரியா, கமீலா நாசர் உள்ளிட்ட,11 பேரும், செயற்குழு உறுப்பினர்களாக தொடர்வர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


கட்சியின் தலைவராக கமல் செயல்படுகிறார். கட்சியின் துணைத்தலைவராக, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்,
பொதுச்செயலராக, அருணாச்சலம், பொருளாளராக, சுரேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு என, நான்கு மண்டலங்களாக, கட்சியின் அமைப்பு பிரிக்கப்பட்டு உள்ளது. சட்டசபை தொகுதி வாரியாக, கட்சி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். 'மண்டல பொறுப்பாளர்கள், துறை வாரியான நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவர்' என, கமல் தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு கோரிய கமல் : சென்னை, ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் உள்ள, மக்கள் நீதி மைய அலுவலகத்தின் வெளியே, கட்சி நிர்வாகிகளை அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கட்சியினர் ஏராளமாக கூடியதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிகழ்ச்சி முடிவில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதற்காக, கமல் மன்னிப்பு கோரினார். நிகழ்ச்சியின் போது, தொண்டர்கள், 'ஆழ்வார்பேட்டை ஆண்டவர்' என்ற அடைமொழியுடன், கமலை வாழ்த்தி கோஷம் போட்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (58)

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  ஏன், ஞானசம்பந்தம் பிழைப்பு நல்லாதானே போய்க் கொண்டு இருந்தது?. பேராசிரியருக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.

 • Hell Town - Ditch ,இந்தியா

  அந்த ஆளு என்ன சொல்றப்ல னு கூட புரிஞ்சிக்க முடியாத அதி மேதாவிகள் இங்க கருது தெரிவிச்சிருக்காங்க போல

 • jagan - Chennai,இந்தியா

  அம்மாவாசை நிறைஞ்ச நாள்....பகுத்தறிவு ஓவர் டயம் போடுது போல

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  கமால் ஒரு அரசியல் கோமாளி. பேராசிரியர் கு.ஞானசம்மந்தன் இப்போ துணை சேர்ந்துவிட்டார். இனிமே சிரிப்பு வெடித்தான். இவர்கள் சொல்வதை யாரும் சீரியஸ்-ஆக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நீதி மய்யம் ஒரு சிரிப்பு மய்யம் ஆகிறது.

 • arun -

  கேரளாவில் நடந்த கொடுர சம்பவத்திற்க்கு ஏன் இவர் குரல் கொடுக்கவில்லை?

 • Selva - CHENNAI,இந்தியா

  வாழ்க வளர்க , நம்மவர் கட்சிப்பணி....இன்னும் நல்ல திட்டங்களை ,நல்லவர்களை அழைக்க வேண்டுகின்றோம்...நாளை நமதே ..

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இரண்டு கலகங்களோடு கூட்டணி வைக்காமல் இருந்தால் இவரை நம்பலாம்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஆம் ஆத்மீ யோடு சேராமல் ஊழல் காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்தால் காணாமல் போவார் . மத்தியில் காங்கிரஸ் பாஜகவிட்கு மாற்றாக புதிய அணி தேவை.

 • I love Bharatham - chennai,இந்தியா

  நேற்று அம்மாவாசை ச்சே ......நல்ல நல்ல என்று ஆஸ்தான ஜோதிடர் சொன்னாரோ

 • mohan - chennai,இந்தியா

  இதில் இடம்பெற்ற விமர்சனங்கள் 90 % கமல் கட்சிக்கு எதிராகவே உள்ளது எனவே கமல் நடித்தால் மட்டும் நல்லது

 • mindum vasantham - madurai,இந்தியா

  நடிகர் நடிகை , இயக்குனர் ,தயாரிப்பாளர் ,ஜாதி சங்க தலைவர் இவர்கள் உருவாக்கும் கட்சி இனி மக்களிடம் எடுபடாது ,ரஜினி நடிகர் என்ற அடை மொழி தாண்டி நல்ல பெயர் உண்டு அவரே யோசிக்கிறார் இல்லை யாராவது ஒரு ஆளை கைகாட்டலாமா என்று நினைக்கிறார் இது தான் இன்றைய நிலை

 • murali - Chennai,இந்தியா

  அப்போ ADMK , DMK மாதிரி ஊழல் கட்சித்தானா மக்கள் நீதி மய்யம்.இப்படியே போனால் அது நிதி மையம் ஆகிவிடும்

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  அமாவாசை அன்னிக்கி குலையோடு வாழை மரத்தை கட்டி நல்ல நேரம் பார்த்து கொடியேற்றி பகுத்தறிவு பீரங்கியோடு கிளம்பிட்டாருங்கோ..

 • Balaji - Bangalore,இந்தியா

  கமலை தவிர மற்ற நிர்வாகிகள் யார் என்றே மக்களுக்கு தெரியாது. அவர்களின் போட்டோ கூட பாத்தது இல்லை? இது ஒரு கட்சியா? பேங்க் அக்கௌன்ட் ?

 • vel -

  கமல் ஏன் தனது கட்சிக்கு ஒரு தலித்தை தலைவராக்கவில்லை... ஜாதியப்பாகுபாடா? பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் ஏன் தரப்பவில்லை.... ஆணாதிக்க உணர்வா? யாரிடமெல்லாம் நன்கொடைகள் வாங்கப்பட்டது? இது போன்ற கேள்விகளுக்கு பதிலில்லாத போது இவரது கட்சிக்கு தடை உத்தரவு ஏன் வாங்கக்கூடாது? தமிழகமே தயவாய் வெகுள்வாய்....

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இந்த நாடக கம்பெனி தொகுதிக்கு ஐம்பது வோட்டு வாங்குமா? இதற்கு சரியாக பதில் சொன்னால் ஐநூறு ரூபாய் தருகிறேன்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இவர்கள் யாரும் பணம் பதவி புகழுக்கு ஆசை படமாட்டார்களே...?

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  கமலஹாசன் சிகப்பு ரோஜாக்கள் படத்தை எடுத்த கதை உண்மை என பேசப்பட்டது. அது உண்மைதான். அந்த சம்பவங்களின் உண்மையான நிகழ்விடம் தேவாலயம் என்பது இப்போது புரிகிறது

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  இதில் வேடிக்கை என்னவென்றால் அ.இ.அ.தி.மு.க வின் வாக்குகளை பிரிக்க ஸ்டாலின் மற்றும் சற்குணம் மூலம் களம் இறக்கப்பட்ட கமலஹாசன் அவர்களை போலவே மீண்டும் காமெடி தலைவராகவே உள்ளார்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  கமலின் பேச்சைக் கேட்டால் முக்கல் முனகல்தான் மிச்சம் .கொஞ்சமும் செரிக்க முடியாது. /முக்கிய/ நிர்வாகிகள் நிரந்தரமாக முக்கும் நிர்வாகிகளாவர்

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  கைசெலவுக்கு வந்த வருமானம், இனி ஜானத்துக்கு கிட்டாது. பட்டி மன்றமும் போச்சு.

 • C.Elumalai - Chennai,இந்தியா

  அமாவாசையில்,கட்சி தொடக்கம். அமாவாசையில், நிர்வாகிகள்,நியமனம். கொழுந்து விட்டு எரிகிறது குணாவின், பகுத்தறிவு. பாவாடை,மூர்க்க மதம்ங்கள், கோபப்பட்டு் நிதியை நிறுத்திடபோறாங்க, குணம் கெட்ட குணா. அப்புறம்,கட்சி நடத்த எந்த பெனிபிட் நிதி நிறுவனமும், உனக்கு உதவி செய்யாது.

 • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  தமிழ் நாட்டை ஆளப்போவதில்லை என்பதை சூசகமாக சொல்கிறது "ஆழ்வார்பேட்டை ஆண்டவர்" பட்டம்.

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  லண்டனிலிருந்து கமெடியன் திரும்பி வரும் வரை தமிழக மக்களை சிரிக்க வைக்கும் பொறுப்பை. சிறப்பாக செய்ய வருகிறார் கமலஹாசன். நன்றி

 • jagan - Chennai,இந்தியா

  எல்லாம் எடுபிடிகள்....வாஸ்தவம் தான் சொந்த கட்சின்னா எல்லாம் வெறும் அல்லக்கைகளாக தான் இருக்கவேண்டும்...சுயசிந்தனை உள்ளவன் தன்மயமுள்ளவன் எல்லாம் 'இதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்'

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  "ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவன்" அடுத்த படத்தின் பெயர் ரெடி போல இருக்கிறது... எவ்வளவு நாளுக்குத்தான் சர்ச் பணம் கொடுக்கும்...

 • s t rajan - chennai,இந்தியா

  ஆண்டவர் இல்லை என்பவருக்கு ஆண்டவர் பட்டமா..... அப்போ இவரும் (அரசியலில்) இல்லாமல் ஆயிடுவாரோ ?

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ஆழ்வார்பேட்டை ஆண்டவரே, உங்களுக்கு தோத்திரம் செய்தோம், ஆமென்.

 • Muruga Vel - Chennai,இந்தியா

  நல்ல வேளை ஆழ்வார்பேட்டையில் அலுவலகம் ...கண்ணம்மா பேட்டையில் இருந்தா என்ன சொல்லுவாங்க ..

 • Muruga Vel - Chennai,இந்தியா

  திமுகாவுலயும் ஒரு பேராசிரியர் ….ரெண்டாவது இடத்தில் ..காலம் காலமாக ...

 • Vijay_USA - Philadelphia,யூ.எஸ்.ஏ

  பேராசிரியர் கு.ஞானசம்மந்தன் என்றவுடன் பட்டிமன்றம் தான் நினைவுக்கு வருகிறது கல்லூரிப் பணியை ஒத்துக்கொண்டு, அதற்கான சம்பளமும் பெற்றுக்கொண்டு, இரவு முழுதும் அதிகாலை வரை பட்டிமன்றத்தில் கல்லா கட்டிவிட்டு....அடுத்த நாள் மாணவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுத்திருப்பார்? தொழில் தர்மம் பார்க்காமல், சுய வருமானத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடிய இது போன்றவர்கள் மக்களுக்கு என்ன செய்ய போகிறார்களோ?

 • Vijay_USA - Philadelphia,யூ.எஸ்.ஏ

  சூப்பரான டீம்...பட்டி மன்றம், நாடகம், சினிமா, மற்றும் பக்கோடா பண்ணலாம்

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  தனக்கு தெரிந்த திரையுலக நண்பர்களை நிர்வாகிகளாக போட்டு, மக்கள் நீதி மன்றம் என்ற அரசியல் கட்சியை ஒரு சினிமா இயக்கம் போன்று கமல் நடத்தி வருகிறார். படித்த அறிவார்ந்த, அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களை போடாமல், தனக்கு தெரிந்த எடுபிடிகளை வைத்து கட்சி நடத்தினால், ஊத்தி மூட வேண்டியது தான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement