Advertisement

ஜெ.,வை யாரும் பார்க்கவில்லை; அப்பல்லோ நர்ஸ், 'திடுக்' தகவல்

சென்னை : ''மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை, சசிகலா, அவரது உறவினர் டாக்டர் சிவகுமார் தவிர, வேறு யாரும் பார்க்கவில்லை,'' என, அப்பல்லோ நர்ஸ், ஹெலனா தெரிவித்து உள்ளார்.


ஜெ., மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், விசாரித்து வருகிறது. ஜெ.,க்கு சிகிச்சை அளித்த, டாக்டர் ஷில்பா, நர்ஸ் ஹெலனா ஆகியோர், நேற்று விசாரணை கமிஷனில் ஆஜராகினர்.


கேள்வி :
அவர்களிடம், நீதிபதி ஆறுமுகசாமி, வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர், ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.


மயக்கவியல் நிபுணரான, ஷில்பா, 2016 அக்., 7ல், அப்பல்லோ மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளார்; ஜெ., இறக்கும் வரை பணியில் இருந்துள்ளார். 'நான் பணிக்கு வந்தபோது,
ஜெ., உடல்நிலை மோசமாக இருந்தது. அவருக்கான நோய் பாதிப்புகள், சிகிச்சைகள் குறித்தும் தெரிந்து கொண்டேன்' என, ஷில்பா தெரிவித்து உள்ளார். 'இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாரா' என்ற கேள்விக்கு, 'ஆம்' என, பதில் அளித்துள்ளார்.


'டிச., 4ல், ஜெ.,க்கு மாரடைப்பு ஏற்பட்டது. பகலில், டாக்டர் ரமா பணியில் இருந்தார். நான் இரவு பணிக்கு வந்தபோது, அவரது இதயம் செயலிழந்து இருந்தது. 'அதை செயல்பாட்டிற்கு கொண்டு வர, பல முயற்சிகள் செய்து, இறுதியாக எக்மோவில் இணைத்திருந்தனர்' என, விசாரணை கமிஷனில், ஷில்பா தெரிவித்துள்ளார்.


நர்ஸ் ஹெலனா, 2017 அக்டோபரில் இருந்து, ஜெ., இறக்கும் வரை பணியில் இருந்துள்ளார். 'நான் பணியிலிருந்தவரை, ஜெ.,வை, சசிகலா, டாக்டர் சிவகுமார் தவிர, வேறு யாரும் பார்க்கவில்லை. கண்ணாடி வழியே கூட யாரும் பார்க்கவில்லை. ஜெ.,க்கு இனிப்பு கொடுக்கப்படவில்லை.


மூச்சு திணறல் :
'பழங்கள் சாப்பிட்டதாக ஆவணங்கள் இருந்தால், அது தவறு. எனக்கு தெரிந்தவரை, எந்த பழமும், இனிப்பும் கொடுக்கப்படவில்லை' என, ஹெலனா தெரிவித்து உள்ளார். மேலும், 'டிச., 2 அன்று, மூச்சு திணறல் காரணமாக, வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. மறுநாள் காலை, 11:00 மணி வரை தொடர்ந்தது.'மீண்டும், பிற்பகல், 1:00 மணிக்கு வென்டிலேட்டரில் இணைக்கப்பட்டார். பின், இதயம் செயலிழக்கும் காலம் வரை, வென்டிலேட்டரில்தான் இருந்தார். டிச., 2க்கு பின், திட உணவு வழங்கப்படவில்லை' என்றும், விசாரணை கமிஷனில், ஹெலனா தெரிவித்துள்ளார்.

முரண்பட்ட தகவலால் குழப்பம் : ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில், டாக்டர்கள் மற்றும் நர்சுகளின் வாக்குமூலம், ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான தகவல்களை, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஜெ.,க்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறி உள்ளனர். அவ்வாறு செய்திருந்தால், 'எம்பார்மிங்' செய்வது சிரமமாக இருந்திருக்கும். அதேபோல், ஒருவர், 'ஜெ., இனிப்பு சாப்பிட்டார்' எனக் கூற, மற்றொருவர், அதை மறுக்கிறார். முரண்பட்ட தகவல்கள், விசாரணையில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (28)

 • murali - Chennai,இந்தியா

  கூடா நட்பு கேடாய் முடியும் - உண்மை

 • narayanan iyer - chennai,இந்தியா

  சசிகலா 2012 ல் மீண்டும் ஜெயாவிடம் வந்தது. எனது சொந்தங்கள் யாரும் வரமாட்டார்கள் என்று உத்திரவாதம் ஜெயாவிற்கு கொடுத்துவிட்டு அவரின் உடலின் நிலையை சரியச்செய்து நல்லவள் மாதிரி நடந்து சொந்தகாரன் சிவகுமாரை கொண்டுவந்து சிகிச்சை அளிக்க சொல்லி ஒரு திட்டமிட்ட கொலை நடந்திருக்கிறது .ஜெயாவை மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லும் போது மத்திய அரசின் கறுப்பு பூனை படை எங்கே போனது? அவர்களை விலக்கியது யார்?அந்த அதிகாரம் யார் யாருக்கு கொடுத்தார்கள்? வீடு மற்றும் மருத்துவமனையில் இருந்த கேமிராக்கள் ஏன் அகற்றப்பட்டது?மோடியே தான் ஏதோ ஜெயாவின் நண்பர் என்று சொன்னார் . நண்பருக்கு ஒரு ஆபத்து என்னும் போது அவரின் நடவடிக்கை ஏன் இப்படி வேடிக்கை பார்க்கும் நிலையிலேயே இருந்தது? சசிகலாவை பாதுகாக்கவே சிறையில் இட்டுஇருக்கிறார்கள் . மொத்தத்தில் பெரிய சதி நடந்திருக்கிறது .ஜெயா செய்த மாபெரும் தவறு சசியை மீண்டும் 2012 ல் சேர்த்தது. சசியை மோடியுடன் பேசவைத்தது .இப்போ நடக்கும் விசாரணை கமிஷன் மூலம் ஒன்றும் நடந்துவிடபோவதில்லை . மக்களை ஏமாற்றும் ஒரு நிகழ்வு.

 • dandy - vienna,ஆஸ்திரியா

  அப்போலோ ரொட்டியை முன்னாள் ரஷ்யா KGB பாணியில் விசாரித்தால் உண்மை வெளிவரும் ..டாஸ்மாக் நாட்டில் எந்த குடிமகனுக்கும் திராணி இல்லை

 • karthi - chennai,இந்தியா

  கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு ஜெயலலிதாவுக்கு சசிகலாவால் ஏற்பட்ட கேடு ஒரு உதாரணம். ஜெயலலிதாவுக்கு பல மொழிகளில் பேசும் திறமை, ஆளுமை, அழகு, அறிவு, பணம், புகழ் அனைத்தும் இருந்தும் என்ன பயன்? ஒரு வேலைக்காரியால் தன் வாழ்க்கையை கெடுத்துக்கொண்டார். அந்த குடும்பத்தை அருகில் சேர்க்காமல் இருந்து இருந்தால், இன்றைக்கும் ஜெயலலிதா தான் முதல்வர். மிகவும் பரிதாபமான முடிவு.

 • madhavan rajan - trichy,இந்தியா

  பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட அப்போல்லோ நிறுவனத்தின் மீதி நடவடிக்கை எடுத்து அப்போல்லோவின் சொத்து மற்றும் சசிகலா குடும்பத்தினரின் சொத்துக்கள், ஜெயாவின் சொத்துக்களை விற்று தமிழ்நாட்டின் கடனையெல்லாம் அடைக்கச் சொல்லுங்க.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  I am getting bored on reading any s on her death. How long this will go?

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  ஒரு முதல்வரின் மரணம் என்று படம் எடுத்தால் பல நூறு நாட்கள் ஓடும் . பிரதாப் ரெட்டி, சாணி காலா போன்றவர்கள் போய் புனைசுருட்டில் பிறந்து வளந்தவர்கள். மேலும் உணவைப் பொறுத்தவரை மருத்துவர் சொல்வதை விட செவிலிய சகோதரி சொல்வதே உண்மையாக இருக்கும் .சேவைகள் நடப்பது பெரும்பாலும் செவிலியர் மூலம் தானே ? மருத்துவர்கள் ஆலோசனை சொல்வது அறுவை சிகிச்சைக்காய் செய்வது இதுபோல வேலைகளை மட்டுமே செய்வர் .

 • R Sanjay - Chennai,இந்தியா

  ஜெ மரணத்தில் இருக்கும் இது போன்ற செய்திகள் நம் வாழ்நாள் முழுவதும் வந்துகொண்டே இருக்கும். ஆனால் கடைசி வரை குற்றவாளி தண்டிக்கப்படாமலே இந்த கேஸ் முடிந்துவிடும்.

 • Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா

  பாகிஸ்தானில் ஒரு முன்னாள் பிரதமரை கூட ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அதுவும் வெளி நாடு சென்ற அவரை கைது செய்ய முடிகிறது .. ஆனால் ஒரு வேலைக்காரி தலைமையில் ஒரு திருட்டு மருத்துவமனை மிகப்பெரிய நாடகத்தை நடத்தி கொண்டு இருக்கிறது , ஆனால் ஓன்னும்ம் செய்ய முடியவில்லை , இது தான் இந்திய சட்டமும் ஜனநாயகமும்

 • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

  சசிகலாவுக்கும் டாக்டர் சிவகுமாருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கப்பா...... எல்லாம் பொய், பித்தலாட்ட கூட்டமா இருக்கு.....

 • Navasudeen - covai,இந்தியா

  பன்னீரு பழனீ செயக்குமாரூ உதயக்குமாரூ வி.பாஸ்கரெல்லாம் ஒன்னுந்தெரியாத பச்சமண்ணுங்க

 • Pats - Coimbatore,இந்தியா

  வேலை இல்லாத சவரத் தொழிலாளி, பூனைக்கு முடி வெட்டிய கதை - இந்த விசாரணை ஆணையம் இதைத்தான் செய்துகொண்டு இருக்கிறது.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஆடு கசாப்பு காரியை அதிகம் நம்பி இருந்தது...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  கிராதிகியை உடன் பிறவா சகோதரி என்று நம்பி இன்னுயிரை ஈந்தவர் ஜெ

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அப்பல்லோ நர்ஸ், ஹெலனா சொல்லுவது நூற்றுக்கு ஆயிரம் சதம் உண்மையோ உண்மை...

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  ஜே யின் உயிர் திரும்ப வரபோறதில்லை. ஆனால் பிரிந்துபோன ஆத்மாவுக்கு ஆறுதலிடம் தேவை. எனவே உண்மையை கண்டுபிடித்தேயாக வேண்டும்.

 • ருத்ரா -

  யார் பார்க்கவில்லை என்பது இருக்கட்டும். பார்த்தவர்கள் ஜெ.அவர்களுக்கு வேண்டிய முக்கியமானவர்களை ஏன் சில வருடங்களுக்கு முன்பு முதல் மருத்துவமனை இறுதிவரை பார்க்க அனுமதிக்கவில்லை.

 • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  மக்கள் வரி பணத்தில் அரசாங்கம் தயாரித்து வழங்கும் ஒரு மெகா சீரியல் இந்த விசாரணை கமிஷன். பத்திரிகைகளுக்கு கொஞ்சம் நொறுக்கு தீனி. யாருக்கும் பயனில்லை. ஒரு முடிவுக்கும் எட்டாது இந்த விசாரணை. விசாரணைக்கு அழைப்பு விடுக்க பட்டவர்களுக்கு நடிக்க ஒரு வாய்ப்பு. நிறைய பேர் நடிக்க ஆசைப்பட்டு வருகிறார்கள். இங்கு இஷ்டமில்லாவிட்டாலும் நடிக்க அழைக்கப்படுகிறார்கள்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  ஊரையே அடித்து சாப்பிட்டார் அதனையே மறக்கடிக்க இட்லியை மறந்து பாதம் அல்வா ஐஸ்க்ரீம் நீ என்னென்ன சாப்பிட்டார் என்பதைப் பெரிதாக்குகிறார்கள் . ஜெயா தனது வாழ்வில் செய்த ஒரே நன்மை கருணாவின் அயோக்கிய ஆட்சி நிரந்தரமாகாமல் பார்த்துக் கொண்டதுதான் .அதற்கு பதில் பல கள்ளர்களை ஆட்டயப் போடவிட்டார்

 • Shake-sphere - India,இந்தியா

  சசிகலா மற்றும் பிரதாப் ரெட்டி ஆகியோரை தனி தனியே ரெட் செல்லில் சி பி ஐ விசாரணைக்கு உட்படுத்தினால் தான் மட்டுமே உண்மை கிடைக்கும் அதை விடுத்து இந்த பூச்சாண்டி ஆட்டம் எல்லாம் வேஸ்ட்.

 • C.Elumalai - Chennai,இந்தியா

  அப்போ,இவர் பார்த்தார் அவர் பார்த்தார். எனபது கட்டு கதையா?.மர்மத்தின் மறு பெயர் அப்போல்லாவும்,75 நாட்களும். என்று அவிழும் மர்மமுடிச்சு.

 • ஆப்பு -

  கோமாளிக்கூத்தாக ஒரு விசாரணை... முன்னுக்குப் பின் முரணாக தகவல்கள்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கடைசியில் அவரைப்போல ஒரு போலி ஆளை தயார் செய்து புதைத்து விட்டார்கள் என்று கதை விட ஆள் இல்லாதவரை பரவாயில்லை...

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட, ஒரு நாடகம் நடந்து முடிந்து விட்டதோ?, புது மேடையும் அமைக்கப்பட்டு விட்டதோ?. எனவே, எல்லாமே, பொருந்தா பொருள்களாகி போனதோ?. புரியலைன்னா, அட, அடுத்த கருத்துக்கு போங்கப்பா.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement