Advertisement

குல்தீப் சுழல் ஜாலம்; இந்திய அணிக்கு 269 ரன் இலக்கு

நாட்டிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 269 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'சுழலில்' அசத்திய குல்தீப் 6 விக்கெட் வீழ்த்தினார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நாட்டிங்காமில் இன்று நடக்கிறது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் நீக்கப்பட்டு, சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டார்.

பட்லர் அரை சதம் :



இங்கிலாந்து அணிக்கு குல்தீப் தொல்லை தந்தார். இவரது 'சுழலில்' ஜேசன், பேர்ஸ்டோவ் தலா 38 ரன்களில் சிக்கினார். ஜோ ரூட் 3 ரன்கள் மட்டும் எடுத்தார். கேப்டன் மார்கன் (19) நிலைக்கவில்லை. பட்லர், ஸ்டோக்ஸ் இணைந்து சிறப்பாக விளையாடினர். இருவரும் அரை சதம் அடித்தனர். பட்லர் 53 ரன்கள் எடுத்தார்.

ஸ்டோக்சை (50) அவுட்டாக்கிய குல்தீப், 5வது விக்கெட்டை பதிவு செய்தார். மொயீன் அலி (24), ரஷித் (22) ஓரளவு ரன் சேர்த்தனர். முடிவில், இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் 268 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 6 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement